அடுத்த படத்தை இயக்குவது எப்போது.? DHOKHA விழாவில் மாதவன் பதில்

அடுத்த படத்தை இயக்குவது எப்போது.? DHOKHA விழாவில் மாதவன் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு நடிகர் மாதவன் இயக்கி தயாரித்து நடித்த படம் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’.

தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி இருந்தார். ஒவ்வொரு இந்தியனும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணாக இருவரையும் நேரில் சந்தித்து பாராட்டும் தெரிவித்து இருந்தார்.

எனவே மாதவனின் அடுத்த பட் இயக்கம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

தற்போது மாதவன் DHOKHA – Round the Corner ‘தோக்கா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

இதுதொடர்பான விழா ஒன்றில் மாதவனிடம் அடுத்த படத்தை இயக்குவது எப்போது? இயக்குவதில் ஆர்வம் இருக்கிறதா? என கேள்வி கேட்கப்பட்டது

“இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். மேலும், எந்த படத்தையும் இயக்குவதில் எனக்கு இப்போது ஆர்வம் இல்லை. ராக்கெட்டரி படத்தக இயக்கியது தற்செயலான அமைந்த ஒன்று” என பேசினார் மாதவன்.

Actor Madhavan talks about his next directorial

கடவுள் தந்த அற்புத குழந்தை என் அப்பா.; சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி பதிவு

கடவுள் தந்த அற்புத குழந்தை என் அப்பா.; சௌந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு சில தினங்களுக்கு முன் 2வது ஆண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கையில் குழந்தையை வைத்துக் கொண்டும் பின்னால் அப்பா ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா.

அதில்…

“என் பிறந்தநாளுக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இந்த ஆண்டில் கடவுள் கொடுத்த சிறந்த பரிசு, எனது வீர் பாப்பா.

எனக்குப் பின்னால் கடவுளின் இந்த அற்புத குழந்தை எப்போதும் இருப்பது, வாழ்க்கை ஒரு உண்மையான ஆசீர்வாதம்,” என பதிவிட்டுள்ளார்.

Soundarya Rajini emotional statement about his daddy

To every person who took time to wish me on my birthday yesterday ????????????THANK YOU SO SO SO MUCH.. . gods have blessed me with the best gift this year, my Veer papa ????
And having this amazing gods child behind me always ??????????? life is a true blessing!!! https://t.co/9PuIVyyWgq

கமலின் கம்பீர குரலில்.; பாண்டிய மன்னனை கொன்றதால் சோழ இளவரசனை பழி தீர்க்கும் வீடியோ.!

கமலின் கம்பீர குரலில்.; பாண்டிய மன்னனை கொன்றதால் சோழ இளவரசனை பழி தீர்க்கும் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ படம் உலகமெங்கும் வருகிற செப்டம்பர் 30ம் தேதி 5 மொழிகளில் திரைக்கு வருகிறது.

எனவே படத்தை புரோமோட் செய்ய படக்குழுவினர் கேரளா, கர்நாடகா ஆகிய பல மாநிலங்களுக்கு படக்குழு சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது சோழ இளவரசனால் பாண்டிய மன்னன் கொல்லப்பட்டதை அடுத்து சோழ இளவரசனை பழி தீர்ப்பதற்கு அந்த நாட்டுக்குள் பாண்டிய மன்னனின் வீரர்கள் செல்லும் புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சியில் பிரகாஷ்ராஜ், கிஷோர், ரியாஸ்கான், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் கம்பீர குரல் ஒலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PS1 They are here for vengeance and blood

Introducing the Pandyas ft. @actorkishore, #RiyazKhan & @arjunchdmbrm

▶️ https://t.co/027no4aOkf

#PS1 in theatres from 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!

#PonniyinSelvan1 #ManiRatnam @LycaProductions

3 மொழிகள்.. 1930-40 காலகட்டம்.; களத்தில் இறங்கினார் ‘கேப்டன் மில்லர்’

3 மொழிகள்.. 1930-40 காலகட்டம்.; களத்தில் இறங்கினார் ‘கேப்டன் மில்லர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை (செப்டம்பர் 22, 2022): சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்” திரைப்படம், படக்குழுவினர் கலந்துகொள்ளபூஜையுடன் இனிதே துவங்கியது.

கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப்பெரும் அலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக, திரையுலக பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், “மேற்குத்தொடர்ச்சிமலை” ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

கேப்டன் மில்லர்

ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

“கேப்டன் மில்லர்” படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

கேப்டன் மில்லர்

Dhanush starrer  Captain Miller is officially launched with a grand pooja

செல்வராகவனின் சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’.; பட்டைய கிளப்பும் பக்தி பாட்டு

செல்வராகவனின் சிலிர்க்க வைக்கும் ‘சிவ சிவாயம்’.; பட்டைய கிளப்பும் பக்தி பாட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G.

தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் அவர் அடுத்ததாக தயாரித்து இயக்கும் படம் ’பகாசூரன்’.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.

‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில் சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தில் இடம் பெறும் ‘சிவ சிவாயம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.

இசை மேதை பாபநாசம் சிவன் எழுதிய ‘சிவ சிவாயம்’ என்ற அந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஜானி மாஸ்டர் நடன அமைப்பில் ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் செல்வராகவன் நடித்திருக்கும் அந்தப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து மெகா ஹிட்டடித்துள்ளது.

கேட்டவர்களை திரும்ப திரும்ப கேட்கவைப்பது போல பார்த்தவர்களை திரும்ப திரும்ப பார்க்கவைப்பதுபோல ‘சிவ சிவாயம்..’ பாடல் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி சிவ பக்தர்களையும் பரவசப்படுத்தி வருகிறது.

குறிப்பாக சிவனடியார் போன்ற தோற்றத்தில் ”என் அப்பன் அல்லவா.. என் தாயும் அல்லவா…” என்று சிவலிங்கம் முன்பு கைகளை விரித்தபடி செல்வராகவன் அந்த பாடலை பாடும்போது மேனி சிலிர்த்து உருகமுடிகிறது.

பெருநகரங்கள் மட்டுமின்றி கடைக்கோடி கிராமம் வரை ‘சிவ சிவாயம்’ பாடல் சென்றடைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கிறங்கடித்து ‘பகாசூரன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

இப்படத்தின் பாடல்களை எம்.ஆர்.டி. மியூசிக் வெளியிடுகிறது.

படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

செல்வராகவன்

பாடலை காண ?????

https://youtu.be/d68ivT1hwWM

Selva Raghavan’s Shiva Shivayam song goes viral

8 வாரத்திற்கு பிறகே ஓடிடி.; சினிமா டிக்கெட் விலையை தீர்மானிக்க அனுமதி – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

8 வாரத்திற்கு பிறகே ஓடிடி.; சினிமா டிக்கெட் விலையை தீர்மானிக்க அனுமதி – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து.

இதில் சங்க தலைவர் ரமேஷ் பாபு, பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

புதிய ஆபரேட்டர்களை நியமனம் செய்ய வசதியாக ஆபரேட்டர் நியமன விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

சமீபத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வில் இருந்து குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முன்பு இருந்தது போன்று தியேட்டர்களுக்கு தனி அட்டவணையின் கீழ் மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

பெரிய திரையரங்குகளை மாற்றி 2 அல்லது 4க்கும் மேற்பட்ட சிறிய திரையரங்குகளாக மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

படம் வெளியான 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Permission to fix  cinema ticket prices – Theater Owners Association

More Articles
Follows