நம்பி நாராயணனை நம்பி இயக்குனராக களமிறங்கிய மாதவன்

நம்பி நாராயணனை நம்பி இயக்குனராக களமிறங்கிய மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor madhavanகேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன்.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்த இவர், அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

இதனையடுத்து சில நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் அவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது இவரின் வாழ்க்கை படமாக உருவாகியுள்ளது. நடிகர் மாதவன், நம்பி நாராயணாக நடிக்கிறார்.

‘ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் தயாராகிறது.

தமிழில் ராக்கெட்ரி நம்பி விளைவு என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ராக்கெட்டரியில் 35 ஆண்டுகளும், ஜெய்லில் 50 நாட்களும் வாழ்ந்திருக்கிறேன். இந்த 50 நாளில் என் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான் இந்த கதை, என்னைப்பற்றி அல்ல என டீசரில் மாதவன் சொல்வது போல உள்ளது.

இப்படத்தை ஆனந்த் மகாதேவன் உடண் இணைந்து நடிகர் மாதவனும் இயக்கியுள்ளார்.

இதன்மூலம் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி உள்ளார் மாதவன்.

ஏற்கெனவே எவனோ ஒருவன், இறுதிச்சுற்று ஆகிய படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.சுரேஷின் *பில்லா பாண்டி* படத்திற்கு தடைகோரி வழக்கு

ஆர்.கே.சுரேஷின் *பில்லா பாண்டி* படத்திற்கு தடைகோரி வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

billa pandi posterபத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள நண்பர்களுக்கு வணக்கம் ஆர்.கே.சுரேஷ் நடப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம் ‘பில்லா பாண்டி’ இந்த படத்தினை திரு.கே.சி.பிரபாத் ஜே கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்….
இவர் ஏற்கனவே ‘ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளரான திரு ஏ.ஜமால் சாகிப் என்பவரிடம்
‘மருதாண்டசீமை’ என்கிற படத்தை இருவரும் சேர்ந்து எடுப்போம்
என ஆசைவார்த்தை கூறி படம் 60% எடுத்துக்கொண்டிருக்கும்போது மேற்குறிப்பிட்ட திரு கே.சி.பிரபாத் அவர்கள் புதிதாக படம் எடுக்கப்போகிறேன் என்று
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு ஏ.ஜமால் சாகிப் அவர்களை ஏமாற்றவேண்டும் என்கிற நோக்கில் ‘பில்லாபாண்டி’ படத்தை தயாரித்துள்ளார்.

ஏன் என்று விளக்கம் கேட்டபோது…’பில்லா பாண்டி’படம் வெளியாவதற்கு முன்பு ‘மருதாண்டசீமை’ படத்தை முடித்துத் தருகிறேன் என்று உறுதியளித்தார்…

ஆனால் இதுவரை மேற்படி
ஜெ சா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் திரு.ஏ.ஜமால் சாகிப் அவர்களுக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் திரு.கே.சி.பிரபாத் அவர்கள் செயல்படுவதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது
என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ராஜலட்சுமிக்கு நேர்ந்த கொடுமையை யார் பேசுவது..? : ராஜாவுக்கு ராஜா விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

ராஜலட்சுமிக்கு நேர்ந்த கொடுமையை யார் பேசுவது..? : ராஜாவுக்கு ராஜா விழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karu pazhaniappanஅக்கூஸ் புரொடக்‌ஷன் சார்பில் பி.டி.சையது முகமது தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு ராஜா’. இப்படத்தை ஏ.வசந்தகுமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் இயக்குநர் தியாகராஜன் வெளியிட இயக்குநர்கள் ஏ.வெங்கேஷ், கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் கரு.பழனியப்பன் பேசும் போது, ‘இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்தார்.

படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று கூறினார் என்றார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது.

இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள். எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை தோறும் படம் வரும். அதுபோல இந்த நடிகர் மக்கள் நண்பன் விநாயக் தயாரிப்பாளர், இயக்குநர், திரையரங்கு உரிமையாளர் அனைவருக்கும் நண்பனாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.

விழாவில் இயக்குநர் பேரரசு பேசும் போது, ‘சினிமாவை பொழுதுபோக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை, மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய்? எது உண்மை? என்பதே தெரியவில்லை.

சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித்தரும்.

பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது” என்றார்.

விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சையத் முகமது, பட நாயகன் வி.ஆர் விநாயக், இயக்குநர் ஏ.வசந்தகுமார், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், தருண் கோபி, நடிகர்கள் மகாநதி சங்கர், ரியாஸ்கான், பவர் ஸ்டார் சீனிவாசன், தியாகராஜன், நடிகைகள் சோனா, சிந்து, ஒளிப்பதிவாளர் காசி விஷ்வா இசையமைப்பாளர் ஜெயக்குமார், படத்தின் பாடலாசிரியர் காவியன், கவிஞர் சினேகன், தயாரிப்பாளர் ஸ்டார் குஞ்சுமோன், மொய்தீன்கான், அஜ்மல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

பல விருதுகளை வென்றுள்ள *தொரட்டி*-யை வெளியிடும் சி.வி.குமார்

பல விருதுகளை வென்றுள்ள *தொரட்டி*-யை வெளியிடும் சி.வி.குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thoratiஎன் காதல் புதிது, மறுமுனை ஆகிய படங்களை இயக்கிய மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தொரட்டி’.

1980களில் இராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது ‘தொரட்டி’ படம்.

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கை பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறாரகள்.

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை, கருவறுக்கும் கோபத்தை என பல்வேறு உணர்ச்சிகளை இயல்பாகவும், உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ‘தொரட்டி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமார் ஶ்ரீதருக்கு அளித்துள்ளனர்.

செக்கோஸ்லோவேகியாவில் நடந்த ‘PRAGUE’ மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘தொரட்டி’ படத்தின் நாயகனான ஷமன் மித்ரூவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் கலந்து கொண்ட அனைத்து திரைப்பட விழாக்களிலும் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற, வரவிருக்கும் மாதங்களில் மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள உள்ள இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது.

ஷமன் பிக்ச்சர்ஸ் சார்பில் ஷமன் மித்ரு இப்படத்தை தயாரித்துள்ளார். இவரே நாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷமன் மித்ருவின் நண்பர்களில் ஒருவராக முத்துராமன் என்பவர் நடித்துள்ளார். இவர் ஐடி கம்பெனியில் பணி புரிந்து வருகின்ற போதிலும். கதையின் மேல் உள்ள நம்பிக்கையில் நடித்துள்ளதாக தெரிவித்தார்.

இப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

முதன்முறையாக வில்லனுக்கு விழா எடுத்த *ராட்சசன்* படக்குழு

முதன்முறையாக வில்லனுக்கு விழா எடுத்த *ராட்சசன்* படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ratsasan villain christopher aka saravananராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ராட்சசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகியும் தற்போது வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் ராட்சசன் படத்தில் கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் சைக்கோ வில்லனாக நடித்த நடிகர் யார் என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.

அதற்கான பதிலை, ராட்சசன் படத்தயாரிப்பாளர் ஒரு விழாவாகவே நடத்தியிருக்கிறார்.

அதில் ராட்சசன் படத்தின் வில்லனை அறிமுகம் செய்து வைத்தனர் படக்குழுவினர்.

கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்த அவரின் பெயர் சரவணன். நான் படத்தில் சின்னக் கேரக்டரில் நடித்ததால், நான் சரவணன் என்று பெயர் கொண்ட அவர்தான், படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இதுகுறித்து இயக்குநர் ராம்குமார் தெரிவித்ததாவது:

படம் பார்த்துவிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் எல்லோருமே ‘அந்த வில்லன் கிறிஸ்டோடபர் கேரக்டர் செய்தது யார்?’ என்றுதான் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

அவரை இப்படியொரு விழா எடுத்து அறிமுகப்படுத்தலாம் என்று தயாரிப்பாளரிடம் சொன்னபோது, ரொம்ப உற்சாகத்துடன் செலவு பற்றி கவலைப்படாமல் சம்மதம் தெரிவித்தார் தயாரிப்பாளர்.

வில்லன் கிறிஸ்டோபராக நடித்தவர் சரவணன். நான் என்கிற படத்தில் நடித்ததால், நான் சரவணன் என்று எல்லோரும் சொல்லுவார்கள்.

முதலில் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், படத்தில் அவரின் முகமே தெரியாது. மேக்கப் காரணமாக, வேறொரு முகத்துடன் படம் முழுக்க வந்தார். ஆனாலும் அந்த மேக்கப் போட்டுக்கொள்வதில் இருந்த அத்தனை சிரமங்களையும் தாங்கிக்கொண்டார்.

நான்குமணி நேரம் இந்த மேக்கப் நிற்கும். அதுவரைக்கும் உணவெல்லாம் சாப்பிடமுடியாது. திரவ உணவுதான். ஜூஸ் மாதிரிதான் சாப்பிடமுடியும். எட்டுமணி நேரமெல்லாம் கூட எதுவும் சாப்பிடாமல் இருந்து, இந்தக் கேரக்டரை சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்.

இப்படியொரு மேக்கப் போட்டுக்கொள்வதால், முகத்தில் அரிப்பு ஏற்படும். சின்னச் சின்ன புண்ணெல்லாம் வந்திருக்கிறது. அதையெல்லாம் தாங்கிக்கொண்டு, அப்படியொரு உழைப்பையும் நடிப்பையும் கொடுத்தார் சரவணன்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் கிறிஸ்டோபர் கேரக்டரும் ஒன்று. அதை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திய சரவணன், மிகப்பெரிய நடிகராக வருவார் என்பது உறுதி.

இவ்வாறு இயக்குநர் ராம்குமார் பேசினார்.

சர்கார் & பில்லாபாண்டி-யுடன் தீபாவளி கொண்டாடும் களவாணி மாப்பிள்ளை

சர்கார் & பில்லாபாண்டி-யுடன் தீபாவளி கொண்டாடும் களவாணி மாப்பிள்ளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalavani mappillaiநவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தன்று விஜய் நடித்துள்ள சர்கார் மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி ஆகிய படங்கள் வெளியாகிறது.

இத்துடன் தினேஷ் – அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை திரைப்படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “களவாணி மாப்பிள்ளை“ படத்தை தயாரித்துள்ளது.

தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு

இசை – என்.ஆர்.ரகுநந்தன்

பாடல்கள் – மோகன்ராஜன், ஏக்நாத்

கலை – மாயா பாண்டி

எடிட்டிங் – பொன் கதிரேசன்

நடனம் – தினேஷ்

ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்

நிர்வாக தயாரிப்பு – ஸ்டில்ஸ் ராபர்ட்

இணை தயாரிப்பு – திருமூர்த்தி

தயாரிப்பு – ராஜேஸ்வரி மணிவாசகம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காந்தி மணிவாசகம்.

ரசிகர்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான கலக்கல் காமெடி. படமாக உருவாக்கி உள்ளோம். படம் வருகிற நவம்பர் 6 ம் தேதி தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

More Articles
Follows