தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான படம் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’.
இப்படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் என்பவர் இயக்கினார்.
அவர் விலகவே இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்தார்.
இப்படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
நாடே போற்றும் விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.
சில மாதங்களுக்கு பிறகு குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் நம்பி.
குற்றம் சுமத்தப்பட்ட காலத்தில் சிறையில் இருந்தார்.
அப்போது பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன்.
அவரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை தழுவி எடுக்கப்பட்டது இந்தப் படம்.
ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படம் கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் தமிழில் நடிகர் சூர்யாவும், இந்தியில் நடிகர் ஷாரூக்கானும் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தனர்.
நம் FILMISTREET தளத்தில் இந்தப் படத்திற்கு நல்ல மதிப்பெண் கொடுத்திருந்தோம்.
இந்த நிலையில் ராக்கெட்டு திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து இருக்கிறார்.
பத்மபூஷன் திரு நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மிக தத்ரூபமாக இயக்கி தானும் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இணைய தன்னை நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.
Rajinikanth praises ‘Rocketry’ directed by Madhavan