தாதா பட விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் அஜித் ரசிகராக அம்சனின் புதுப்படம்

தாதா பட விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் அஜித் ரசிகராக அம்சனின் புதுப்படம்

ajith and hamsavardhanசாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில் “தாதா 87” படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார்.

“தாதா 87” படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

தற்போது AFF நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் அம்சன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

தல அஜித்தின் தீவிர ரசிகராகவும், கல்லூரியின் சூப்பர் சினியராகவும் அம்சன் நடிக்கின்றார்.

மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Breaking *சர்கார்* டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் டிவி.

Breaking *சர்கார்* டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்தது சன் டிவி.

sarkarமுருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படத்தில் விஜய் உடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராதாரவி வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்கின்றனர்.

இந்நிலையில், சர்கார் டீசர் ரிலீஸ் தேதியை பட தயாரிப்பு நிறுவனமான சன் நிறுவனமே தற்போது வெளியிட்டுள்ளது.

சர்கார் டீசர் அக்டோபர் 19ம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்,

அதர்வாவுக்கு அடுத்து *கூத்தன்* ராஜ்குமார் செய்த ரசிகர் மன்ற சாதனை

அதர்வாவுக்கு அடுத்து *கூத்தன்* ராஜ்குமார் செய்த ரசிகர் மன்ற சாதனை

koothanஇன்று ஒரு அறிமுக ஹீரோ படம் தியேட்டரில் ரிலீஸாவது என்பதே மிக கடினமான விஷயம்.. அப்படியே அந்தப்படம் வந்தாலும், அதற்கு கிடைக்கும் ஓரிரு வார அவகாசத்தில் படத்தின் ஹீரோ ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பது இன்னும் கஷ்டம்.

ஆனால் வரும் அக்-11ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் கூத்தன் பட நாயகன் ராஜ்குமாருக்கு இந்த மாதிரி சிரமம் எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது…

பின்னே..? தமிழ் சினிமாவில் முதல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அது அதர்வாவுக்கு அடுத்தததாக இந்த ராஜ்குமாருக்காகத்தான் இருக்கும்.

அதர்வாவது பிரபல நடிகரின் வாரிசு.. அவருக்கு ரசிகர்மன்றம் உருவானதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் புதுமுகம் ராஜ்குமாருக்கு என்ன பின்னணி..? கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் எல்லாம் திரும்பிய பக்கமெல்லாம் இவரது புகழ்பாடும் ரசிகர் மன்ற போஸ்டர்கள் தான் நம் கண்களில் படுகின்றன..

காரணம் கூத்தன் பட தயாரிப்பாளரும் ராஜ்குமாரின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் இந்த பகுதிகளில் எல்லாம் செல்வாக்கு பெற்ற மனிதர். அரசியலில் முக்கிய பிரமுகர். அதனாலேயே அவரது மகன் ராஜ்குமாருக்கும் இயல்பாகவே நட்பு வட்டாரம் அதிகம்..

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இவ்வளவு செல்வாக்காக தன்னைத்தானே இவர் விளம்பரப்படுத்தி கொள்கிறாரா என்றால் இல்லை என்கிறார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள்.

ராஜ்குமாரின் நலம் விரும்பிகள் தான் தங்கள் நண்பனின் முதல் படம் சிறப்பாக வரவேண்டும் என ரசிகர்மன்றம் அமைத்து படத்தை புரமோட் செய்து வருகிறார்களாம்.

இன்னொரு பக்கம் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோவின் தந்தையுமான நீல்கிரீஸ் முருகன் தனது பங்கிற்கு 18 பேருக்கு 18 பவுன் தங்கம் பரிசு என்கிற புதிய விளம்பர யுக்தியை ஏற்கனவே துவங்கிவிட்டார்..

இன்றைய சினிமா வியாபார, விளம்பர உலகில் சினிமாவில் நல்ல அறிமுகம் கிடைக்க பலர் போராடும் நிலையில் இந்த ரசிகர் மன்றத்தினர் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்து விடுவார்கள் என தாராளமாக நம்பலாம்.

இப்படம் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது.

ராம் கோபால் வர்மா தயாரித்துள்ள *பைரவா கீதா* அக்டோபர் 26ல் ரிலீஸ்

ராம் கோபால் வர்மா தயாரித்துள்ள *பைரவா கீதா* அக்டோபர் 26ல் ரிலீஸ்

bhairava geethaபிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா.

இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.

இவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார். சாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா ’ ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள்.

ஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் *பியார் பிரேமா காதல்* கூட்டணி

மீண்டும் இணையும் *பியார் பிரேமா காதல்* கூட்டணி

ppkபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’.

அறிமுக இயக்குனர் இளன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது.

எனவே இதன் இயக்குனருக்கு யுவன் ஒரு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

தற்போது மீண்டும் அவர் இயக்க இருக்கும் புதிய படத்தை யுவனே தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

எனவே இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பார் என கூறப்படுகிறது.

மீண்டும் சிக்கல்; சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய கோர்ட் எச்சரிக்கை

மீண்டும் சிக்கல்; சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய கோர்ட் எச்சரிக்கை

simbuசிம்பு என்றாலே அவரை பற்றிய சர்ச்சைகள் வந்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் அவர் தன் வழியில் சென்றுக் கொண்டே இருப்பார். தற்போது மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு, சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை எடுக்க பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

அதற்காக சிம்புவிடம் ரூ.50 லட்சத்தை அட்வான்ஸாக கொடுத்திருந்தாம்.

ஆனால் அந்த நிறுவனத்திற்கு நடிக்க இதுநாள் வரை தேதிகள் ஒதுக்கவில்லையாம் சிம்பு.

இதனையடுத்து தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே சிம்பு பணத்தை திருப்பி தர உத்தரவாதம் அளிக்க வேண்டும், இல்லையேல் சிம்புவின் கார், செல்போன் போன்றவை ஜப்தி செய்யப்படும் என கோர்ட் எச்சரித்து, நான்கு வாரம் காலம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சொன்னபடி சிம்பு செய்யவில்லை.

இந்த வழக்கு இன்று (அக்., 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அக்., 31-ம் தேதிக்குள், பேஷன் மூவி நிறுவனத்திற்கு வட்டியுடன் ரூ.85 லட்சம் பணத்தை திருப்பி தர, சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இல்லையேல், அவரின் வீட்டு உபயோக பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என கோர்ட் எச்சரித்துள்ளது.

More Articles
Follows