4 மாத உழைப்பை நாங்கள் 14 நாட்களில் கொடுத்திருக்கிறோம்.. – சார்லி

4 மாத உழைப்பை நாங்கள் 14 நாட்களில் கொடுத்திருக்கிறோம்.. – சார்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சார்லி பேசியதாவது…

“‘கொன்றால் பாவம்’ திரைப்படம் என்னுடைய சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம். அப்படியான படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் தயாளனுக்கு நன்றி.

என் சினிமா பயணத்தில் அப்பா சரத்குமார் அவர்களுடனும் மகள் வரலட்சுமி அவர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறேன்.

குறைவான நாட்களில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் கிட்டத்தட்ட ஒரு நான்கு மாதங்களுக்கு படப்பிடிப்பு நடந்தால் எந்த அளவுக்கு உழைப்பை கொடுத்திருப்பார்களோ அந்த அளவுக்கு இந்த 14 நாட்களும் எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் உழைப்பை கொடுத்திருக்கிறோம். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்”. என்றார்.

கொன்றால் பாவம்

actor Charle speech at kondraal paavam audio launch

கத்தி மேல் நடப்பது போல நடிகர்கள்.. எனக்கு தான் பெருமை – சாம்.சி.எஸ்

கத்தி மேல் நடப்பது போல நடிகர்கள்.. எனக்கு தான் பெருமை – சாம்.சி.எஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பேசியதாவது…

“இந்தப் படத்தில் வேலை பார்த்தது எனக்கு பெருமை. ஏனெனில் இது மிகவும் இயல்பாக அமைந்தது. இதன் கதையும் க்ளைமாக்ஸூம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் தயாளுடைய தேவை என்பதும் தெளிவாக இருந்தது. இறுதியில் படம் பார்க்கும்போது அதன் வேலை எனக்கு ஆத்மார்த்தமாக இருந்தது.

நடிகர்கள் எல்லாருமே கத்தி மேல் நடப்பது போல சரியான மீட்டர் பிடித்த நடித்துள்ளனர். நீண்ட நாட்களாகவே மியூசிக்கல் படம் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய விருப்பமாக இருந்தது அதற்கான இடம் இந்த படத்தில் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. நான் இசை அமைத்துக் கொண்டிருக்கும் படங்களில் இந்த படம் மிக முக்கியமானதொரு படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை”.

நடிகர் சென்றாயன் பேசியதாவது…

” நான் சினிமாவுக்குள் வந்ததே சரத்குமாரை பார்த்த தான். இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக என்னை குருடனாக நடிக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். நடிக்கும்போதே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது அப்படி என்றால் உண்மையாக அப்படி இருப்பவர்கள் எல்லாம் சாமி என்று தான் சொல்வேன். படம் பிரமாதமாக வந்திருக்கிறது”.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசியதாவது…

” இயக்குநர் தயாள் எனக்கு கிட்டத்தட்ட 20 வருடங்களாக பழக்கம். மிகச் சிறந்த இயக்குநர் என்பதை விட அவரை மிகச் சிறந்த மனிதர் என்று சொல்வேன். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்”.

நடிகர் கவிதா பாரதி பேசியதாவது…

” இதில் எனக்கு போலீஸ் துறை அதிகாரி வேடம். நிறைய இது போன்ற கதாபாத்திரங்கள் நான் நடித்திருந்தாலும் இந்த வேடம் எனக்கு வந்தபோது சரி முதலில் கதை கேட்போம் என்று கேட்டேன்.

நான் பார்த்து வியந்து, நண்பர்களுக்கு பலமுறை பரிந்துரைத்த கன்னட படத்தின் ரீமேக் தான் ‘கொன்றால் பாவம்’ என்பது மகிழ்ச்சியாக இருந்தது. உடனே நடிக்க சம்மதித்தேன். தமிழில் இது ஒரு மிக பிரம்மாண்டமான கதையாக, படமாக அமையும் என வாழ்த்துகிறேன்”.

கொன்றால் பாவம்

Music composer Sam CS speech at kondraal paavam audio launch

2 வாரம் சூட்டிங்… 2 மாதம் எடிட்டிங் அவ்ளோதான்.. – ப்ரீத்தி மோகன்

2 வாரம் சூட்டிங்… 2 மாதம் எடிட்டிங் அவ்ளோதான்.. – ப்ரீத்தி மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி, சார்லி, சென்றாயன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கொன்றால் பாவம்’.

இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எடிட்டர் ப்ரீத்தி மோகன் பேசியதாவது..

“இந்தப் படம் 14 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து 60 நாட்களிலேயே படத்தொகுப்பு முடிந்து விட்டது. எல்லோருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருப்பதால் எனக்கு எடிட்டிங் வேலை ஈஸியாக இருந்தது” என்றார்.

ஒளிப்பதிவாளர் செழியன் பேசியதாவது…

“தமிழ் சினிமாவில் பல முக்கிய இயக்குநர்களோடு பணியாற்றி உள்ளேன். அதுபோன்ற ஒரு முக்கிய இயக்குநராகதான் தயாளைப் பார்க்கிறேன். அந்த அளவுக்கு திட்டமிட்டு எதையும் சரியாக செய்பவர். வரலக்‌ஷ்மி, சந்தோஷ், சார்லி என அனைவரது நடிப்பும் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவில் சில பரிசோதனை முயற்சிகளும் செய்திருக்கிறோம்” என்றார்.

அடுத்து நடன இயக்குநர் லீலாவதி பேசியதாவது…

“இயக்குநர் என்னிடம் எதிர்பார்த்ததும் நான் அவரிடம் சொன்ன விஷயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது. வரலக்‌ஷ்மி மேம்க்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. சந்தோஷ் சார் ரொம்ப சைலண்ட். கொடுத்த வேலையை சிறப்பாக செய்வார். இந்தப் படத்தில் லோலாக்கு பாடல்தான் நான் நடனம் அமைத்துள்ளேன்”.

கொன்றால் பாவம்

Editor Preethi Mohan speech at kondraal paavam audio launch

‘கொன்றால் பாவம்’.. வாழ்த்துவதில் எனக்கு பெருமை.. – கலைப்புலி தாணு

‘கொன்றால் பாவம்’.. வாழ்த்துவதில் எனக்கு பெருமை.. – கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது.

இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியதாவது…

“‘கொன்றால் பாவம்’ படத்திற்கு வருகை தந்திருக்கும் சரத்குமார் அவர்களை இந்த மேடையில் வரவேற்று வாழ்த்துவதில் எனக்கு பெருமை. ஏனெனில் அவருடைய பண்பட்ட நடிப்பு. ‘வாரிசு’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன்.

‘கொன்றால் பாவம்’ படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும்போது இதில் பணிபுரிந்த அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருப்பது தெரிகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் சிறப்பாக படத்தைத் திட்டமிட்டு இயக்குநர் எடுத்திருக்கிறார். அடுத்து எங்கள் குடும்பத்து நாயகி, சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

பின்னணி இசையிலும் பாடல்களிலும் சாம் சி.எஸ். அசத்தி இருக்கிறார். சார்லியின் குணச்சித்திர நடிப்பு மேலும் மெருகூட்டுகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.

கொன்றால் பாவம்

kalaipuli S Thanu speech at Kondraal Paavam audio launch

வித்தியாசமான படத்தலைப்பில் யோகிபாபு உடன் கை கோர்க்கும் பாக்கியராஜ்

வித்தியாசமான படத்தலைப்பில் யோகிபாபு உடன் கை கோர்க்கும் பாக்கியராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் யோகி பாபு தனது அடுத்த படத்தில் அறிமுக இயக்குனர் ஏ பாக்கியராஜுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்தில் யோகி பாபு, அஞ்சு கிருஷ்ணா அசோக், மதுசூதனன் ராவ், ஆடுகளம் முருகதாஸ், மூணார் ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு சாண்டி இசையமைத்துள்ளார்.

படக்குழுவில் ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ, எடிட்டர் சங்கத்தமிழன் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில், இந்த படத்திற்கு ‘ஐகோர்ட் மகாராஜா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-ஐ வருகிற ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக்கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு – மகேந்திரன் ஜெயராஜு.

இசை – சாண்டி

பாடல்கள் – சந்துரு

எடிட்டிங் – சங்கதமிழன்

கலை இயக்குனர் – ஸ்ரீமன் ராகவன்

ஸ்டண்ட் – மெட்ரோ மகேஷ்

நிர்வாக தயாரிப்பு – செல்வகுமார்

தயாரிப்பு மேற்பர்வை – முருகபூபதி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – ஃப்ரிடா எண்டர்டெயின்மெண்ட்

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குக்கிறார் – எ.பாக்கியராஜ். DFT

ஐகோர்ட் மகாராஜா

Yogi Babu’s next titled ‘High Court Maharaja’

பிளாக் பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிம்பு?

பிளாக் பஸ்டர் இயக்குனருடன் மீண்டும் இணையும் சிம்பு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு – தேசிங்கு பெரியசாமி இணையும் படம் ‘STR49’ ஆக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனெனில் அதற்கு விரிவான திட்டமிடல் மற்றும் பட்ஜெட் தேவை.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை சிம்பு உடனடியாக தொடங்குவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2021 ஆம் ஆண்டில் இந்த காம்போ கொடுத்த ‘மாநாடு’ சிம்புவின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும், இது வி.பி.யை ஒரு வலுவான வணிக இயக்குனராக மீண்டும் கொண்டு வந்தது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Simbu to reunite with his blockbuster hit director

More Articles
Follows