தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வரலட்சுமி சரத்குமார் – சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் ‘கொன்றால் பாவம்’.
இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெய குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்ட்ராயன், டிஎஸ்ஆர் சீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மகாதவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதாசிரியரும் இயக்குநருமான தயாள் பத்மநாபன், இந்தப் படத்தை கன்னடத்திலும், தெலுங்கிலும் இயக்கியுள்ளார்.
மேலும், படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர்கள் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமார், தங்களின் தயாரிப்பானது 2023 கோடையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
Varalakshmi Sarathkumar’s ‘Kondraal Paavam’ will release in summer