தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வழக்கமான நாயகி போல இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
சமீபத்தில் இவர் நடித்த வீ3, யசோதா, மைக்கேல் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள ‘கொன்றால் பாவம்’ என்ற படம் விரைவில் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் வரலட்சுமி, சந்தோஷ், ஈஸ்வரி, ராவ் சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தன் சமீபத்திய பேட்டியில் வரலட்சுமி பேசும்போது..
“என்னை லேடி விஜய் சேதுபதி என்கிறார்கள். இது எனக்கு கிடைத்த பாராட்டாக நினைக்கிறேன்.
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்துள்ள சிறந்த நடிகர் விஜய் சேதுபதி.. அவருடன் என்னை ஒப்பிட்டு பேசும்போது அது எனக்கு கிடைத்த பாராட்டாகவே நினைக்கிறேன்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழக ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். வரவேற்கிறார்கள். ஆனால் தமிழ் இயக்குனர்கள் எனக்கான வாய்ப்பை சரியாக வழங்குவதில்லை.
தெலுங்கு சினிமாவில் என்னை கொண்டாடுகிறார்கள்.. கடந்த வருடத்திலேயே நிறைய படங்கள் வந்தன. தற்போது நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன்” என ஓப்பனாக பேசினார் வரலட்சுமி.
Varalakshmi explains about Lady Vijaysethupathi title