வினோத் இயக்கும் படத்தில் வக்கீல் கேரக்டரில் அஜித்

வினோத் இயக்கும் படத்தில் வக்கீல் கேரக்டரில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajith as Lawyer in Vinoth directionஅஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் சூட்டிங் இன்றோடு நடைபெற்றது.

இப்படத்தை அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

விரைவில் வினோத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன் – டாப்சி நடித்து வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகவுள்ளது.

இதில் அமிதாப்பச்சன் நடித்த வக்கீல் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Actor Ajith as Lawyer in Vinoth direction

சர்கார் குறித்து விஜய்யிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது இதுதான்..

சர்கார் குறித்து விஜய்யிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியது இதுதான்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuசர்கார் பிரச்சினையும் அதன் பின்னர் மறுதணிக்கை செய்யப்பட்டு படம் திரையிடப்பட்டது நாம் அறிந்த ஒன்றுதான்.

இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“அண்மைகாலமாக வெளியாகும் பல திரைப்படங்கள் அரசை விமர்சித்து வந்திருக்கின்றன; அவற்றை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை.

சர்கார் படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன்.

பட விநியோகஸ்தரிடம் பேசி தயாரிப்பு நிறுவனம் மூலம் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டது.

தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது.

தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது” என கூறினார்.

விஜய்யின் சர்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இவைதான்…

விஜய்யின் சர்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இவைதான்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkarவிஜய் நடித்துள்ள “சர்கார்” திரைப்படத்தில் அரசியல்வாதிகளையும் தற்போது ஆளும் அதிமுக.வை விமர்சனம் செய்யும் வகையில் பல வசனங்கள் இருந்தன.

மேலும் ஜெயலலிதாவின் இயற்பெயர் என சொல்லப்படும் “கோமளவல்லி” எனும் பெயரை வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து அந்த காட்சிகள் நீக்கப்படும் வரை போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதனால் பல தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன.

எனவே இன்று காலை மறு தணிக்கை செய்யப்பட்டு சில காட்சிகளை நீக்கி சில வசனங்களை மியூட் செய்துள்ளனர்.

அவை..

இப்படத்தில் வரும் கோமளவல்லி என்று பெயர் குறிப்பிடப்படும் காட்சியில் மியூட் (ஒலியடக்கம்) வைக்கப்படுகிறது.

பின்னர் இலவச பொருட்களை தீயில் தூக்கிப் போடும் காட்சிகள் நீக்கப்படுகிறது.

மேலும் பொதுப்பணித்துறை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

சர்காருக்கு ரஜினி-கமல் ஆதரவு.; விஜய் உம்முனு கம்முன்னு இருப்பது ஏன்..?

சர்காருக்கு ரஜினி-கமல் ஆதரவு.; விஜய் உம்முனு கம்முன்னு இருப்பது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayதலைவா படம் முதல் விஜய்க்கு அவரது ஒவ்வொரு பட ரிலீசும் தலைவலி தான்.

கடந்த வருடம் வெளியான மெர்சல் திரைப்படம் பாஜக. தலைவர்களால் பெரும் அவஸ்தைக்குள்ளானது.

இந்த தீபாவளிக்கு வெளியான சர்கார் சர்ச்சை பற்றி கேட்கவே வேண்டாம். மற்ற செய்திகளை மக்கள் மறக்கும் அளவுக்கு சர்கார் பற்றியே பேச்சாக இருக்கிறது.

தமிழக அமைச்சர்கள் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அதிமுகவினரோ சர்கார் தியேட்டர்களை தாக்க தொடங்கினர்.

இதனால் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்கள்.

அதன்படி இன்று அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு படத்திற்கு மறு தணிக்கை செய்யப்பட்டு தற்போது காட்சிகள் ஆரம்பமாகிவிட்டது.

சர்கார் படத்திற்கு ஆதரவாக கமல், ரஜினி, விஷால், பிரசன்னா, மற்றும் குஷ்பூ ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தங்கள் கருத்தை வெளியிட்டனர்.

ஆனால் திரையில் மாஸ் காட்டிய விஜய், ‘சர்கார்’ பட பேனர்கள் கிழிக்கப்பட்டது வரை எதுவும் சொல்லவில்லை.

ஒரு வேளை அவர் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் சொன்னதுபோல உம்முன்னு கம்முன்னு இருக்கிறாரோ? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

நாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்

நாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalசண்டக்கோழி 2 படத்தை அடுத்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடிக்க சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு ஒரு படத்தை இயக்கவுள்ளார் விஷால்.

நிஜ வாழ்க்கையில் விலங்குகளை அதிகம் நேசிப்பவர் விஷால். எனவே நாய்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படம் பற்றிய அறிவிப்பை 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.

மாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

மாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vishnuபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் தனுஷ்.

இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் திரைக்கு வருகிறது.

ரெஜினா கஸாண்ட்ரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எழிலிடம் உதவியாளராக இருந்த செல்லா இயக்கி உள்ளார்.

ஒதில் ஒரு பாடலுக்கு ஓவியா குத்தாட்டம் போட்டுள்ளார்.

சென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

More Articles
Follows