மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அர்ஜுன்; இப்போ ஒர்க் அவுட் ஆகுமா?

Action King Arjuns next risk for his daughter Aishwarya தென்னிந்திய சினிமாவின் ஆக்சன் கிங் என்றால் அது அர்ஜுன் தான்.

படத்தில் நடிப்பதோடு இல்லாமல் படங்களை தயாரிப்பதில் இயக்குவதிலும் ஆர்வம் இவருக்கு உண்டு.
தற்போது சில படங்கள் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் இவரது மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார். இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார்.

இப்படம் வெற்றி பெறவில்லை.

இதன் பின்னர் சொல்லி விடவா எனும் பெயரில் ஒரு படத்தை இயக்கி அதில் தன் மகளை நடிக்க வைத்தார். தமிழ் மற்றும் கன்னடத்தில் இப்படம் வெளியானது.

இந்த படமும் சரியாக போகவில்லை.

இந்த நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் இயக்குநராகிறார் அர்ஜுன். இந்த முறை தெலுங்கு சினிமா செல்கிறார். அங்கு தான் இந்த அறிமுகம்.

இந்த முறையாவது இவரின் முயற்சி வெல்லட்டும் என வாழ்த்துவோம்.

Action King Arjuns next risk for his daughter Aishwarya

Overall Rating : Not available

Latest Post