தர்பார் மோஷன் போஸ்டர்: 4 மொழிகளில் 3 சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர்

தர்பார் மோஷன் போஸ்டர்: 4 மொழிகளில் 3 சூப்பர் ஹீரோக்கள் வெளியிடுகின்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

4 Super Heros releasing Darbar motion poster in 4 languages ரஜினிகாந்த் லைகா முருகதாஸ் ஆகியோரின் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள படம் தர்பார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க ‘தளபதி’(1991) படத்திறகு பிறகு சந்தோஷ் சிவன் அவர்கள் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமத்தை ஃபார்ஸ் ஃபிலிம் என்ற நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் பட மோஷன் போஸ்டரை நாளை நவம்பர்.7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளனர்.

இதனை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரையுலகில் உள்ள டாப் ஹீரோக்கள் வெளியிட உள்ளனர்.

தமிழில் கமல்  & தெலுங்கில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தியில் சல்மான் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

3 Super Heros releasing Darbar motion poster in 4 languages

3 Super Heros releasing Darbar motion poster in 4 languages

27 வருடங்களுக்கு பிறகு சபரிமலையில் சிம்பு; விரைவில் மாநாடு

27 வருடங்களுக்கு பிறகு சபரிமலையில் சிம்பு; விரைவில் மாநாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actors Simbu and Mahath at Sabarimala Maanadu shoot soonசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருந்த மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு.

இப்படம் தொடர்பான அனைத்துப் பணிகளுமே முடிவடைந்த நிலையில் சிம்பு வந்தவுடன் சூட்டிங்கை தொடங்க காத்திருந்தது படக்குழு.

ஆனால் சிம்பு பிரச்சினை செய்யவே, சுரேஷ் காமாட்சி அவர்கள் படத்திலிருந்து சிம்புவை நிறுத்தினார். அவருக்கு பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது.

பின்பு இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெறவே அனைத்துப் பிரச்னைகளுக்கும் முடிவு ஏற்பட்டது.

இதனையடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சிம்பு.

இப்பணி சுமூகமாக முடிந்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதாக சிம்பு வேண்டியிருந்தாராம்.

அதன்படி சிம்பும் அவரின் நண்பர் நடிகர் மகத்தும் மாலை அணிந்துக்கொண்டு சபரிமலை சென்றனர். அந்த படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த 1992ம் ஆண்டு எங்க வீட்டு வேலன் என்கிற படம் சிறப்பாக வந்த சமயத்தில், சபரிமலைக்கு சென்றிருந்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

திரும்பி வந்தவுடன் விரைவில் மாநாடு சூட்டிங்கில் கலந்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

Actors Simbu and Mahath at Sabarimala Maanadu shoot soon

‘ரங்கஸ்தலம்’ தமிழ் ரீமேக்; லாரன்ஸை இயக்கும் லிங்குசாமி

‘ரங்கஸ்தலம்’ தமிழ் ரீமேக்; லாரன்ஸை இயக்கும் லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lawrence to act in Rangasthalam remake in Lingusamy directionராம்சரண், சமந்தா, ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த படம், ’ரங்கஸ்தலம்’.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது.

இந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகர் ராகவா லாரன்ஸ் வாங்கியிருந்த நிலையில் இதன் ரீமேக்கில் அவரே ஹீரோவாக நடிக்கிறாராம்.

இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளார்.

தற்போது அக்‌ஷய்குமார் நடிப்பில் காஞ்சனா’ ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

இந்தப் படத்தை முடித்தபின், ’ரங்கஸ்தலம்’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Lawrence to act in Rangasthalam remake in Lingusamy direction

இயக்குநராக மாறிய பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் !

இயக்குநராக மாறிய பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer dhananjayanதமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான தனஞ்செயன் தற்போது புதியதோர் அத்தியாயத்திற்கு தயாராகியுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக ஆரம்பித்து சினிமாவின் ஒவ்வொரு பிரிவிலும் பயணித்து, இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருக்கும் தனஞ்செயன் தற்போது படைப்பாளி உலகில் இணைந்து இயக்குநராக மாறியுள்ளார்.

BOFTA MEDIAWORKS & Creative Entertainers சார்பில் பல நல்ல படங்கள் தயாரித்து வெளியிட்டு வரும் தனஞ்செயன் தனது இயக்குநர் அவதாரம் பற்றி கூறியதாவது …

நான் நிர்வாக தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது அப்படங்களின் கதை விவாதத்திலும், திரைக்கதை உருவாக்கத்திலும், பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளேன். படத்தின் வெற்றி தோல்விகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் படத்தினை உருவாக்குவதில் நிறைய பாடங்களை கற்று தந்தது.

BOFTA Film Institute ல் எனது பயணம் பல சினிமா ஜாம்பவான்களுடன் அவர்களது பொன்னான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பெருமையான தருணமாக அமைந்தது. அந்த அனுபவங்கள் எனக்குள் கதையை ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை பல வருடங்களாக விதைத்திருந்தது. ஆனாலும் பல்வேறு வேலை தொடர்பான காரணங்களால் அக்கனவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இறுதியில் எனது மனைவி எனது இந்தப்பயணத்தை ஊக்குவித்து துவங்கி வைத்தார்.

கடந்த 4 மாதங்களாக நானும் எனது குழுவும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். பின்னர் நடிகர்களிடமும் தொழில்நுட்ப கலைஞர்களிடமும் எனது திரைக்கதையை சொன்னபோது அவர்கள் வெகுவாக பாராட்டி, மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினார்கள்.

எனது மனைவியின் பிறந்தநாளளையொட்டி சிறப்பான தருணத்தில் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். இப்படத்தில் பங்குபெறவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் இந்த டிசம்பரில் வெளியிட உள்ளோம். ஜனவரி 2020 ல் ஷூட்டிங்கை துவங்க உள்ளோம். இது ஒரு புதிய வகை க்ரைம் திரில்லர் படமாக ஒரு புத்தம்புது அனுமபவமாக இருக்கும்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் மற்றும் சந்துரு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் மற்றும் சந்துரு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் பிரம்மாண்டமான பேண்டஸி படம் ஆலம்பனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aalambanaதமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா.

அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது.

விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். முரளிசர்மா ஒரு கேரக்டரில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநால்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.

மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படம் ரசிகர்களின் ரசனைக்கு பெரு விருந்தாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஆலம்பனா 2020 சம்மர் கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது

சங்கத்தமிழனை எதிர்த்து ஆக்‌ஷனில் இறங்கிய விஷால்

சங்கத்தமிழனை எதிர்த்து ஆக்‌ஷனில் இறங்கிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanga Thamizhan and Action movies clash on 15th November 2019சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடியாக நடித்துள்ள படம் ஆக்‌ஷன்.

இவர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபிர் சிங் துஹான், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் துருக்கி மற்றும் அஸர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன.

விஜயா புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்த படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகிறது.

இதே நாளில்தான் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் ரிலீசாகிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார்.

Sanga Thamizhan and Action movies clash on 15th November 2019

More Articles
Follows