‘ரசிகர்களுக்கு நன்றி மட்டும் சொல்வது போதாது…’ சூர்யா நெகிழ்ச்சி..!

‘ரசிகர்களுக்கு நன்றி மட்டும் சொல்வது போதாது…’ சூர்யா நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriyaதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா.

இந்தாண்டு வெளியான இவரின் 24 படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இதற்குமுன் வெளியான அஞ்சான் மற்றும் மாசு என்கிற மாசிலாமணி படங்கள் ஆகியவை வெற்றிப் பெறவில்லை.

இருந்தபோதிலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் இவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…

“என்னுடைய நல்ல நேரத்திலும் கெட்ட நேரத்திலும் என் மீது அளவு கடந்த அன்பை காண்பித்தீர்கள்.

நன்றி மட்டும் சொல்வது போதாது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

‘அது பீப் சாங்; இது சவுண்டே இல்லாத சாங்குடா…’ சிம்பு அதிரடி..!

‘அது பீப் சாங்; இது சவுண்டே இல்லாத சாங்குடா…’ சிம்பு அதிரடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbu imagesகடந்தாண்டு டிசம்பரில் பெய்த கனமழை தமிழகத்தை தண்ணீரில் மூழ்கடித்தது.

அச்சமயத்தில் வெளியான சிம்புவின் பீப் பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் பல வழக்குகளும் மகளிர் சங்கத்தால் இவர் மீது தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்திற்கு 9 பாடல்களை இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா .

இப்படத்தில் ‘சவுண்டே இல்லாத சாங்குடா’ என்ற வரிகளில் ஒரு காதல் தோல்வி பாடல் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘என் முதல் மரியாதைக்குரிய ஹீரோ அவர்தான்…’ – ஜிவி.பிரகாஷ்

‘என் முதல் மரியாதைக்குரிய ஹீரோ அவர்தான்…’ – ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி வலம் வந்தவர் ஜி.வி. பிரகாஷ்.

தற்போது அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கைவசம் வைத்துக் கொண்டு அதிரடியான படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என விஜய்யை வாழ்த்தி இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளதாவது…

“ஆயிரம் துறைகள் பல லட்சம் சாதனையாளர்கள் எனினும் விவசாயி எப்போதும் கதாநாயகர்கள் முதல் மரியாதைக்குரியவர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

gvprakash tweet about farmers

இப்படி கன்ப்யூஸ் பண்றாங்களே… கபாலி மீது காண்டு ஆகும் ரசிகர்கள்.!

இப்படி கன்ப்யூஸ் பண்றாங்களே… கபாலி மீது காண்டு ஆகும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி.

இப்படம் ஜூலை 15ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் ஜூலை 22க்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இத்தகவல் முக்கியமாக வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கு முதலில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள ‘கபாலி’ விளம்பரங்களில் ஜூலை 29-ம் தேதி உலகமெங்கும் வெளியீடு என்ற வாசகம் இடம்பெற்று உள்ளதாம்.

இது ஒரு புறம் இருந்தாலும் ‘கபாலி’ படத்தின் சென்சார் முடிந்தவுடன்தான் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறாராம் தாணு.

இதனால் ரிலீஸ் தேதி குறித்து மிகுந்த குழப்பத்தில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

இயக்கிய படங்கள் 12; விருதுகள் 50; அசத்திய அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பிறந்தநாள்!

இயக்கிய படங்கள் 12; விருதுகள் 50; அசத்திய அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு பிறந்தநாள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பயணிக்கும் சாதனையாளர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

இவரை மலையாள சினிமாவின் பிதாமகன் என அழைப்போரும் உண்டு.

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவற்றால் சமூகத்தில் பல மாற்றங்களை செய்ய முடியும் என தன் படங்களால் நிரூபித்தவர் இவர்.

இந்நிலையில் இவர் இன்று தனது 75 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.

இந்த 50 வருடங்களில் மொத்தம் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.

இவரது முதல் படமான ‘சுயம்வரம்’ 1972ஆம் ஆண்டு வெளியானது.

மலையாள சினிமாவையே புரட்டி போட்ட படம் இது என்றால் அது மிகையல்ல.

முதல் படமே ஐந்து தேசிய விருதுகளை பெற்றது.

இதனை தொடர்ந்து கொடியேட்டம், எலிப்பத்தாயம் உள்ளிட்ட 10 படங்களை இயக்கியுள்ளார்.

தாதாசாகேப் பால்கே, பத்மஸ்ரீ, 7 தேசிய விருது என 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இவரின் 12வது படமான பின்னேயும் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்துள்ளனர்.

நயன்தாராவுடன் நடிக்க ஆசை; ஆனா இப்படி பண்றாங்களே..!

நயன்தாராவுடன் நடிக்க ஆசை; ஆனா இப்படி பண்றாங்களே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூனியர், சீனியர் என எந்த நடிகர் என்றாலும் ஈகோ பார்க்காமல் நடிப்பவர் நயன்தாரா.

ஆனால் ஜூனியர் நடிகர் என்றால் ஒரு நிபந்தனை விதிக்கிறாராம் இவர்.

அதாவது படத்தின் கதை தன்னை மையப்படுத்தியே இருக்க வேண்டும் என்பதுதான் அது.

அப்படின்னா ஹீரோ கேரக்டர் கொஞ்சம் டம்மிதான்.

என்னடா இது நயன்தாராவுடன் ஜோடி போடலாம்ன்னு பார்த்தா இந்த பொண்ணு இப்படி குண்டை தூக்கி போடுதே என்று நொந்து கொள்கிறார்களாம் ஜூனியர்ஸ்.

More Articles
Follows