சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கார்த்தி கூட்டணி

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் ‘அஞ்சான்’ இயக்குனருடன் கார்த்தி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் அழுக்கு பையனாக அறிமுகமானார் கார்த்தி.

இதன் பிறகு வந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திலும் அவரை ஒரு அழுக்கு நாயகனாகவே காட்டியிருந்தார் செல்வராகவன்.

ஆனால் இந்த இரு படங்களுக்குப் பிறகு கார்த்திகை முற்றிலும் ஒரு மாடர்ன் லுக்கில் கல்லூரி பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக ‘பையா’ படத்தில் மாற்றி இருந்தார் லிங்குசாமி. 2010-ல் இந்த படம் வெளியானது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு ‘பையா’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கு கார்த்தி்ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் ‘பையா 2’ பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

karthi join director lingusamy’s paiyaa 2

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க, மிஷ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

‘மாவீரன்’ படம் ஜூலை 14-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

மாவீரன்

sivakarthikeyan complete his maaveeran dubbing

‘இந்தியன் 2’ படத்தில் கமலை மிரட்டும் வில்லனாக பிரபல நடிகர்

‘இந்தியன் 2’ படத்தில் கமலை மிரட்டும் வில்லனாக பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் எஸ் ஜே சூர்யா.

ஆனால் அண்மைக்காலமாக இயக்கத்திற்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்து நடிகராக முழு நேரமாக பிஸியாக இருந்து வருகிறார் எஸ் ஜே சூர்யா.

வருகிற ஜூன் 16ஆம் தேதி எஸ் ஜே சூர்யா நாயகனாக நடித்துள்ள ‘பொம்மை’ திரைப்படம் வெளியாகிறது.

இந்த படத்தை ராதா மோகன் இயக்க நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார் என தகவல்கள் வந்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற ‘மாமன்னன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல் சாரை பற்றி பேச நிறைய இருக்கிறது. அதை இப்போதைக்கு பேச முடியாது என சூர்யா மேடையில் பேசி இருந்தார்.

அப்போதே இந்தியன் 2 பற்றிய யூகங்கள் கசிந்திருந்தன.

தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் எஸ் ஜே சூர்யா வின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் ஷங்கர் இதற்கு முன்பு இயக்கிய விஜய்யின் ‘நண்பன்’ படத்திலும் தற்போது ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

எஸ் ஜே சூர்யா

sj surya plays villain role in kamal’s indian 2

மறைந்த நடிகரின் இல்ல திருமணம்; மணமக்களை வாழ்த்திய நடிகர் ரஜினி

மறைந்த நடிகரின் இல்ல திருமணம்; மணமக்களை வாழ்த்திய நடிகர் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ்.

இவர் பல கன்னட திரைப்படங்களிலும் ஒரு சில தமிழ், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் அம்பரீஷ் ‘ரிபல் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர்

இவர் ரஜினிகாந்த் நடித்த ‘தாய் மீது சத்தியம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதா என்பதும் இந்த தம்பதிக்கு அபிஷேக் அம்பரீஷ் என்ற மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த்

நடிகர் அம்பரீஷ் உடல்நல கோளாறு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார்.

இந்த நிலையில், அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் மகன் அபிஷேக் அம்பரீஷ் திருமணம் நேற்று பெங்களூரில் நடந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது முன்னாள் குடியரசு துணை தலைவரான வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும், இந்த திருமணத்திற்கு ‘கேஜிஎப்’ நடிகர் யாஷ் உள்பட பல கன்னட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ்

rajini attend rebel star Ambareesh son abhishek Ambareesh marriage

பிரபல மலையாள நடிகர் கார் விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல மலையாள நடிகர் கார் விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த கொல்லம் சுதி.

மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞர் ஆவார்.

2015ல் வெளியான ‘கந்தாரி’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்தார் கொல்லம் சுதி.

கட்டப்பனாவில் ரித்திக் ரோஷன், குட்டநாடன் மார்பப்பா, தீட்டா ராப்பை, வாகத்திரிவ், உள்பட பல படங்களில் நடித்து உள்ளார்.

தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவர் நடிகர் கொல்லம் சுதி

நேற்று (05-06-2023) அதிகாலை 4:30 மணியளவில் கயபமங்கலம் பனம்பின் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு நிகழ்ச்சி முடிந்து வடகரையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கார், எதிரே வந்த பிக்கப் வேன் மீது மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் நடிகர் சுதி, பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோர் காயமடைந்தனர்.

இதில் பலத்த காயம் அடைந்த கொல்லம் சுதியை கொடுங்கல்லூர் ஏஆர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் கொல்லம் சுதி உயிரிழந்தார்.

நடிகர் கொல்லம் சுதியின் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Malayalam actor kollam sudhi passes away

விஜய்யை மிரட்டிய டெரர் வில்லன் அஜித்தை மிரட்ட ரெடியாகிறார்

விஜய்யை மிரட்டிய டெரர் வில்லன் அஜித்தை மிரட்ட ரெடியாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க ரெடியாகி வருகிறார் அஜித்.

மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த ஜூன் மாதம் 2ஆம் வாரத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் நாயகியாக சில பாலிவுட் நடிகைகளை பேசி வந்த நிலையில் இறுதியாக த்ரிஷா நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜூன் தாஸ் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களில் மிரட்டி இருந்தார் என்பது தங்களுக்கு நினைவு இருக்கலாம்.

மற்றொரு வில்லன் கேரக்டருக்கு வட இந்திய நடிகரை நடிக்க வைக்க மகிழ்திருமேனி திட்டமிட்டு இருக்கிறாராம்.

அர்ஜூன் தாஸ்

Arjundass will be baddie in Ajiths Vidaamuyarchi

More Articles
Follows