தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா என்ற ஒரு சாதாரண நடிகரை தன் இயக்கத்தின் மூலம் சிறந்த நடிகர் என பெயர் எடுக்க வைத்தவர் இயக்குனர் பாலா.
நந்தா என்ற பெயரிடப்பட்ட அந்த படத்தை தொடர்ந்து பிதாமகன் என்ற படத்திலும் இவர்கள் இணைந்தனர்.
இன்று சூர்யா முன்னணி நடிகர்கள் வரிசையில் உள்ளார்.
இந்நிலையில் தனக்கு கைகொடுத்த இயக்குனர் பாலாவுக்கு சூர்யா கை கொடுக்க உள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் நாச்சியார்.
இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணியளவில் தன் ட்விட்டர் பக்கத்தில் சூர்யா வெளியிட உள்ளாராம்.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Suriya will reveal Naachiyaar teaser