தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செளந்தர்யா ரஜினி இயக்கும் ‘விஐபி 2’ படத்தில் தனுஷ் உடன் அமலாபால், இந்தி நடிகை கஜோல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் சூட்டிங் முடிந்து, போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதில் முக்கிய வேடம் ஏற்றுள்ள கஜோல், ஒரு பிரபல
ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறிருப்பதாகவது…
தனுஷ் மற்றும் சௌந்தர்யா ஆகியோர் என்னை இப்படத்திற்காக அனுகிய போது முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.
ஆனால் என்னுடைய வசனங்களில் பாதி இங்கிலீஷில் இருந்தது. எனவே ஓகே சொல்லிவிட்டேன்.
மீதி தமிழ் வசனங்கள் பேச தனுஷ் எனக்கு உதவி செய்தார்.
இப்படத்தில் என்னுடைய கேரக்டர் என்ன? என்று சொல்ல முடியாது. எதையும் வெளியில் சொல்லக்கூடாது என டைரக்டர் சௌந்தர்யா ரஜினி ஆர்டர் போட்டுள்ளார்.
ஆனால் இந்த கேரக்டர் எனக்கு நல்ல பேர் வாங்கி தரும்.
சௌந்தர்யா ஒரு சிறந்த பெண். அவருடன் ஒர்க் செய்தது இனிய அனுபவம்.” என்று தெரித்துள்ளார்.
ஷான் ரோல்டான் இசையமைக்க, தனுஷ் உடள் இணைந்து இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kajol working experience with Dhanush and Soundarya Rajini in VIP 2