தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தளபதி 60 படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு சற்றுமுன் வெளியானது.
அதாவது வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி பிறக்கும் 12.01 மணிக்கு இப்படத்தின் தலைப்பு பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நாளில்தான் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இப்படத்தை தயாரிக்கும் நாகிரெட்டியார் குடும்பத்தினர் விநாயகர் மீது தீவிர பக்தி கொண்டவர்கள்.
எனவே அவர்கள் குடும்ப சென்ட்டிமெண்ட் படி, விநாயக சதுர்த்தியன்று தங்கள் புதுப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானால் அதிர்ஷ்டகரமாக இருக்கும் என்று திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு ‘விநாயகம்’ என்று டைட்டில் வைக்கப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜித் நடித்த வீரம் படத்தில் அவரது கேரக்டர் பெயர் விநாயகம் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.