தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ மற்றும் ‘ஆடுகளம்’ படங்களை தயாரித்தவர் கதிரேசன்.
இவர் தற்போது தயாரிக்கவுள்ள படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். இதற்கான பூஜை நேற்று போடப்பட்டது.
அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்தை இயக்குகிறார்.
மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஆர்ஜே அஜய், ஆர்ஜே பிளேடு சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார்.
படத்தின் நாயகி மற்றும் மற்ற கலைஞர்களின் தேர்வு முடிவானவுடன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.