தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’ படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
‘கோலமாவு கோகிலா’ என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து, ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் நெல்சன்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அண்மையில் சூப்பர்ஹிட்டான ‘புட்ட பொம்மா’ பாடலில் அல்லு அர்ஜுனுடன் நடனம் ஆடியவரே பூஜா.
மேலும் பிரபாஸுடன் ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
Famous telugu actress is part of Thalapathy 65