தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.
2டி நிறுவனம் சார்பாக நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் அமேசான் ஓடிடி தளத்தில் படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் சூர்யா – ஜோதிகா இணைந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது…
’பொன்மகள் வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?” என்பதற்கு “2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி பணச் சுழற்சி MONEY ROTATION செய்வோம் ” என்றார்.
அதற்கு ஜோதிகா, “இல்லை இல்லை..
எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யா ரசிகர்கள் தான்.
நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அவ்வளவு இருக்காது. எனது பட ட்ரெய்லர், டீஸர் வந்தால் என் ரசிகர்கள் பார்ப்பதற்குள் சூர்யா ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள்” என்றார் ஜோதிகா.