சிவகார்த்திகேயன்-அஞ்சலி ஜோடியுடன் இணையும் கல்கி கோச்லின்

சிவகார்த்திகேயன்-அஞ்சலி ஜோடியுடன் இணையும் கல்கி கோச்லின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)மிஸ்டர் லோக்கல் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் கைவசம் 4 படங்கள் உள்ளன.

இதில் நம்ம வீட்டுப்பிள்ளை என்ற படம் ரீலீசுக்கு தயாராகவுள்ளது.

தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

இதன் பின்னர் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படங்களை அடுதுது விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் மற்றொரு ஜோடியாக பாலிவுட் நடிகை கல்கி கோச்லின் என்பவரும் நடிக்கிறாராம்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா படத்தில் அஜித் மகள்

கௌதம் மேனன் இயக்கும் ஜெயலலிதா படத்தில் அஜித் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முன்வந்தனர்.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி தி ஐயர்ன் லேடி என்ற படத்தை அறிவித்து அதில் ஜெயலலிதாவாக நித்யாமேனன் நடிக்கிறார் என அறிவித்தார்.

இதனையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.

இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதால் அவர் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறார்.

இவர்களை அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ் ஆக எடுத்து இருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன்.

இபபடத்துக்கு குயின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா கேரக்டர் இதில் இடம் பெறவில்லையாம்.

இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கணவராக அதாவது சோபன்பாபு கேரக்டரில் ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா நடித்துள்ளார்.

சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.

பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு ஏர்போர்ட்டில் தவித்த ரஜினி மகள்

பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு ஏர்போர்ட்டில் தவித்த ரஜினி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சவுந்தர்யா. இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

அதன்பின்னர் தொழில் அதிபரும் நடிகருமான விசாகன் என்பவரை சவுந்தர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார் ரஜினி.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யாவும் விசாகனும் லண்டன் நகரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

லண்டன் ஹீப்ரு விமான நிலையத்தை அடைந்த போது அவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது.

எமிரேட்ஸ் சேவை மையத்தில் பாஸ்போர்ட் அடங்கிய பையை விசாகன் எடுக்க முயன்றபோது, அதில் வைக்கப்பட்டு இருந்த பாஸ்போர்ட் மற்றும் பிரீப் கேஸ் காணாமல் போயிருந்தது.

இவர்களின் பாஸ்போர்ட்டுடன் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலரும் அந்தப் பையில் இருந்ததாம்.

எனவே உடனடியாக எமிரேட்ஸ் விமானத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

பாஸ்போர்ட் இல்லாமல் அவர்களால் விமான நிலையத்தை விட்டு வெளிய வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.

இத்தகவல் இந்திய தூதரகத்துக்கும் ரஜினிக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் சவுந்தர்யா – விசாகனுக்கு தற்காலிக பாஸ்போர்ட் அளிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சூட்கேஸை திருடிய நபர்கள் யார் என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்களாம்.

கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்; மகிழ்ச்சியில் ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள்

கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்; மகிழ்ச்சியில் ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)முதன்முறையாக தனுஷை இயக்குகிறார் கவுதம் மேனன், நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்த நிமிடமே தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

இப்படத்திற்கு எனை நோக்கி பாயும் தோட்டா என்று தலைப்பிட்டு ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கினர்.

ஆனால் வருடங்கள் செல்ல செல்ல… அந்த படம் எப்போது ரிலீஸ்? என்பதே கோலிவுட்டின் பட்டிமன்ற தலைப்பானது.

கிட்டதட்ட 3 வருடத்திற்கு பிறகு ஒரு வழியாக நாளை செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீசாகும் என கௌதம் மேனன் அறிவித்தார்.

ஆனால் கடன் கொடுத்தவர் நீதிமன்றத்தை நாடி படத்திற்கு தடை கேட்டனர். இதன் காரணமாக படம் மீண்டும் தள்ளிப் போனது.

இதனையடுத்து அடுத்த வாரம் வெளியாகவிருந்த ‛சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் நாளை ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜிவி. பிரகாஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‛பிச்சைக்காரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சசி இயக்கியுள்ள இப்படத்தில் ஜிவி. பிரகாஷ் பைக் ரேஸராகவும், சித்தார்த் டிராபிக் போலீசாகவும் நடித்துள்ளனர்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடித்து கொண்டிருக்கும் “வால்டர்”

இறுதிகட்ட படப்பிடிப்பில் சிபிராஜ் நடித்து கொண்டிருக்கும் “வால்டர்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சிபிராஜ் நடிக்கும் கொண்டிருக்கும் “வால்டர்” திரைப்பாட்த்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்க உள்ளது.

சிபிராஜ் நடிப்பில் “வால்டர்” திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஷிரின் காஞ்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்னின்றனர். தற்போது இவர்கள் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் சென்னையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

11:11 நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை டாக்டர் பிரபு திலக் தயாரித்து வருகிறார்.
படம் பற்றி இவர் கூறியதாவது,….

“இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இப்படத்தின் வேலைகள் சரியாக சென்று கொண்டிருப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் சென்னையில் துவங்கி முழுவதையும் அங்கேயே முடிக்க திட்டமிட்டுள்ளோம்.” அதுமட்டுமல்லாமல் இப்படம் நல்ல வடிவில் சரியாக சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறும்போது, “இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பில் பங்கு பெறுவது எங்கள் குழுவிற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாவா செல்லதுரை இப்படத்தில் இணைந்திருப்பது எங்களுக்கு கூடுதம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் இயக்குனர் அன்பரசனைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் பொழுது, “நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, ஆரம்பம் முதல் இறுதிவரை இப்படத்தின் கதையை சரியாக திட்டமிட்டுள்ளார் இயக்குனர் அன்பரசன். இப்படத்தின் முக்கியக்காட்சிகள் கும்பகோணத்தில் சிறப்பான முறையில் படமாக்கப் பட்டுவிட்டது. தற்போது இப்படத்தை முழுவதையும் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“வால்டர்” விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம். இப்படத்தில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். “வால்டர்” என்ற தலைப்பிலேயே பெருவாரியான பார்வையாளர்கள் இதை கணித்திருப்பார்கள். சிபிராஜின் தந்தை சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றியடைந்த “வால்டர் வெற்றிவேல்” படத்தின் தலைப்பின் ஆதர்ஷம் தான் இந்த “வால்டர்”. “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படத்தின் நாயகி ஷிரின் இப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை 11:11 நிறுவனத்தின் சார்பாக டாக்டர் பிரபு திலக் மற்றும் சுருதி திலக் தயாரித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எஃப் ஐ ஆர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectசுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’ | விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர்.

‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம் பதிக்கிறார்.

‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘என்னை அறிந்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘துருவ நட்சத்திரம்’, உள்ளிட்ட பல படங்களில், சுமார் ஏழு வருடங்கள் தலைமை இணை இயக்குனர் – நிர்வாக தயாரிப்பாளர் என பல பொறுப்புகளில் முன்னணி இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் பணியாற்றிய மனு ஆனந்த், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்து, ‘இன்று நேற்று நாளை’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘ஜீவா’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுபட்டி’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ உள்ளிட்ட பன்முகப்பட்ட கதைகளத்தை உடைய பல திரைப்படங்களின் மூலமும், தனது அழுத்தமான நடிப்பின் மூலமும், மக்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த விஷ்ணு விஷால், முற்றிலும் புதிய கோணத்தில் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் முக்கியமான – சுவராஸ்யமான வேடங்களில், மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் இணைந்து நடிக்கின்றனர்.

சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூறமுடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப்போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதை உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகளுடன் இந்த அதிரடி-திகில் படம், நடப்பிலிருக்கும் இன்றைய காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் உருவாகிறது.

இப்படத்தின் முக்கிய வேடங்களில் அமான், பிரவீன் குமார், மாலா பார்வதி, RNR மனோகர், ஷப்பீர், கெளரவ் நாராயணன், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ராகேஷ் பிரம்மானந்தன், பிரவீன் K நாயர், பிரஷாந்த் (itisprashanth), வினோத் கைலாஷ், R ஷ்யாம் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவமான முக்கியத்துவம் பெறுவதால், ஒவ்வொரு நடிகரும் இதுவரை தாங்கள் நடித்திராத வித்தியாசமான, புதிய கேரக்டர்களில் வலம் வந்து மக்கள் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

பி சி ஸ்ரீராமின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியவரும், ‘கிருமி’ புகழ் ஒளிப்பதிவாளருமான அருள் வின்சென்ட் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்படங்கள் என அனைத்து தளங்களிலும் இயங்குகின்ற இசையமைப்பாளர் அஷ்வத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

பிரசன்னா ஜி கே படத்தொகுப்பு பொறுப்புகளை ஏற்க, இந்துலால் கவீத் கலை இயக்கத்தை கவனித்து கொள்கிறார்.

ஆடை வடிவமைப்பு பூர்த்தி பிரவீன் வசமும், சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் வரவிருக்கும் இப்படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இந்த மாதத்தில் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கவிருக்கிறது.

தொழிட்நுட்ப கலைஞர்கள்:
தயாரிப்பாளர் – ஆனந்த் ஜாய்
இயக்குனர் – மனு ஆனந்த்
ஒளிப்பதிவு: அருள் வின்சென்ட்
படத்தொகுப்பு – GK பிரசன்னா
இசை – அஷ்வத்
நிர்வாக தயாரிப்பாளர் – ஷ்ராவந்தி சாய்நாத்
பாடல்கள் – எல் கருணாகரன், மஷூக் ரஹ்மான், பகவதி
ஸ்கிரிப்ட் ஆலோசனை – திவ்யாங்கா ஆனந்த் ஷங்கர்
தயாரிப்பு நிர்வாகம் – ராஜூ வேலாயுதம்

சண்டை பயிற்சி: ஸ்டண்ட் சில்வா
கலை – இந்துலால் கவீத்
ஸ்டைலிஸ்ட் – பூர்த்தி பிரவின்
விஎஃப்எக்ஸ் (ஜெமினி) – ஹரிஹரசுதன்
எஸ்எஃப்எக்ஸ் – எஸ் அழகியகூத்தன்
டப்பிங் – ஹஃபீஸ்
மிக்சிங் – சுரேன் ஜி
இணையதள விளம்பரங்கள்: ஷ்யாம்
போஸ்டர் வடிவமைப்பு: ப்ராதூல் NT
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

More Articles
Follows