தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வருகிற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸாகிறது.
எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது விஜய் ஆண்டனி பேசியதாவது…
தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார்.
கடந்த இரண்டு படங்கள் வியபார ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம்.
இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.
இந்த சந்திப்பில் விசுவல் எஃபெக்ட்ஸ் ரமேஷ் ஆச்சார்யா, நடன இயக்குனர் தஸ்தா, பாடலாசிரியர் அருண் பாரதி, நடிகர்கள் கதிர், வினோத், செந்தில் குமரன், நிக்ஸன், சாய் ராகுல், கிச்சா, ஜாக் ராபின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Hereafter I wish to do more romantic movies says Vijay Antony