செம ஷார்ப்… துப்பாக்கி முனை திரை விமர்சனம்

செம ஷார்ப்… துப்பாக்கி முனை திரை விமர்சனம்

நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஹன்சிகா, மாரிமுத்து மற்றும் பலர்
இயக்கம் – தினேஷ் செல்வராஜ்
இசை – எல்வி. முத்துகணேஷ்
ஒளிப்பதிவு – ராசாமதி
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தானு
பிஆர்ஓ – டைமண்ட் பாபு

கதைக்களம்…

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஆபிசராக விக்ரம் பிரபு. படத்தில் இவரது கேரக்டர் பெயர் பிர்லா போஸ்.

போஸ் என்ற கேரக்டருக்கு போஸ் கொடுத்தப்படியே தன் கதையை ஆரம்பிக்கிறார்.

என்கௌண்டர் என்பதால் யாரையும் பொருட்படுத்தாமல் போட்டுத் தள்ளுகிறார். இதனால் அம்மா, காதலி என அனைவரது அன்பையும் இழக்கிறார்.

இந்நிலையில் பாலியல் குற்றத்திற்காக ஒருவனை என்கௌண்டர் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். ஆனால் அந்த நேரத்தில்தான் அந்த நபர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.

எனவே அவனை குற்றமற்றவர் என்பதை கோர்ட்டில் நிரூபிக்க போராடுகிறார். இதில் அந்த நபரை போட்டுத் தள்ள ஒரு ரவுடி கும்பல் விரைகிறது.

இந்த சூழ்நிலையில் விக்ரம் பிரபு என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

படம் முழுவதும் சீரியசான என்கௌண்டன்ராக விக்ரம் பிரபு ஜொலிக்கிறார். கம்பீரம் தோற்றத்துடன் பிர்லா போஸ்ஸாக மனதில் நிறைக்கிறார்.

ஹன்சிகாவுக்கு படத்தில் அதிக வேலையில்லை.

மற்றொரு நாயகன் போல எம்எஸ். பாஸ்கர். க்ளைமாக்ஸில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். துப்பாக்கி முனையை விட இவர் பேசும் வசனங்கள் செம ஷார்ப்.

பாலியல் குற்றத்தை குறைக்க அடிப்படையிலேயே மாற்ற வேண்டும். விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கினால் இந்த குற்றத்தை குறைக்கலாம் என்பதை ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

அதுபோல் விக்ரம் பிரபுவின் அம்மா பேசும் வசனங்களும் செம. எப்போ பார்த்தாலும் காந்தி, காமராஜரை பற்றியே பேசுகிறோம். அதன்பின்னர் ஏன் யாரும் உருவாகவில்லை. உருவாக்கவில்லை என்பதும் நச் கேள்வி.

கைதியாக வரும் அந்த ஆசாத் நிச்சயம் ரசிகர்களை கவருவார். வேல ராமூர்த்தி மிரட்டல் வில்லனாக ஜொலிக்கிறார்.

இவரின் மகன் மற்றும் அவரின் நண்பர்களும் நல்ல தேர்வு.

எம்எஸ் பாஸ்கரின் மகளாக வரும் அந்த நாயகி நல்ல தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

முத்துகணேஷின் இசையில் மகள் பாடல் நம்மை ஈர்க்கிறது. பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.

ராசாமதியின் ஒளிப்பதிவில் ராமேஸ்வரம் காட்சிகள் சிறப்பு.

இயக்குனர் தினேஷ் செல்வராஜ் ஒரு ஆக்சன் கதையை அதிரடியாக கொடுத்துள்ளார். க்ளைமாக்ஸ் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.

மொத்தத்தில் துப்பாக்கி முனை… செம ஷார்ப்

Comments are closed.

Related News

நடிகர் தினேஷ் நடிக்கும் "இரண்டாம் உலக்ப்போரின்…
...Read More
தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…
...Read More
நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள…
...Read More