சிங்கம் 3 டீசர் விமர்சனம்… எம்ஜிஆர் ஸ்டைலில் கர்ஜிக்கும் சூர்யா

சிங்கம் 3 டீசர் விமர்சனம்… எம்ஜிஆர் ஸ்டைலில் கர்ஜிக்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்து, ஹரி இயக்கியுள்ள படம் எஸ்-3.

இது சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது.

இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியானது.

இந்த டீசர் 1 நிமிடம் 24 நொடிகள் கொண்டது.

இது முழுக்க முழுக்க ஆக்ஷன் டீசராக அனல் பறக்க உருவாகியுள்ளது.

டீசர் தொடங்கும் போதே.. டிரெயின் ஓடுகிறது. பின்னணியில் வேட்டை பாடல் ஒலிக்கிறது.

அதனையடுத்து, ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் என் எம்ஜிஆரின் எங்க வீட்டு பிள்ளை படப்பாடலை பாடுகிறார் சூர்யா.

பாடுகிறார் என்பதை விட கர்ஜிக்கிறார் என்றே சொல்லலாம்.

இதனிடையே பல ஆக்ஷன் காட்சிகள் வந்து செல்கிறது.

அதில் பல கார், கண்டெய்னர் லாரிகள், ஜீப் உள்ளிட்ட பல வாகனங்கள் மற்றும் விமானங்கள் வரை வந்து செல்கிறது.

சிங்கம் சிங்கம் துரை சிங்கம்… சீறும் எங்கும்… என்ற பாடலும் பின்னணியில் ஒலிக்கிறது.

அப்போது அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி மற்றும் வில்லன் தாகூர் அனுப் சிங் காட்சிகளும் இடம்பெறுகிறது.

பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேஷன், ரெயில்வே ஸ்டேஷனில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையம், பஸ் ஸ்டாண்ட், தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சூப்பர் பன்ச் பேசி பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.

நான் பாத்தது எல்லாம் திங்கிற ஓநாய் இல்ல… பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்.

இப்போ நான் கொலை பசியில இருக்கேன். எது கிடைச்சாலும் வேட்டையாடனுங்கிற வெறியில இருக்கேன்.

எதிர்ல எவன் வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன். என்று பேசி முடிப்பதற்குள் கண் முன்னே பல முகபாவங்களை காட்டி ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறார் சூர்யா.

இது நிச்சயம் ஆக்ஷன் ரசிகர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற உணர்வை தரலாம்.

காஷ்மோரா விமர்சனம்

காஷ்மோரா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், சரத் லோகிஸ்தவா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
படத்தொகுப்பு : விஜே சாபு ஜோசப்.
இயக்கம் : கோகுல்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் – பிரபு மற்றும் பிரகாஷ்பாபு

கதைக்களம்…

காஷ்மோரா மற்றும் ராஜ்நாயக் என இரண்டு வேடம் ஏற்றுள்ளார் கார்த்தி.

பில்லி சூன்யம் மற்றும் பேய்களை ஓட்டுபவர் என ஊரையே ஏமாற்றுபவர் காஷ்மோரா கார்த்தி. இவரது அப்பா விவேக், தங்கை மதுமிதா என ஒட்டு மொத்த குடும்பத்திற்கே இதான் வேலை.

மினிஸ்டர் வீட்டிலும் இவரது ஏமாற்று வேலையை காண்பித்து நம்ப வைத்துவிடுகிறார்.

ஒரு சூழ்நிலையில் ஐடி ரெய்டில் இருந்து தப்பிப்பதற்காக கார்த்தி வீட்டில் பணத்தை வைக்கிறார் மினிஸ்டர்.

அத்துடன் எஸ்கேப் ஆகிறார் விவேக்.

இதனிடையில் மிகமிக பழமையான பங்களாவுக்கு பேய் ஓட்ட செல்கிறார் கார்த்தி.

அங்கு நிஜமான பேய்களுடன் கார்த்தி மாட்டிக் கொள்ள, கூடவே ஸ்ரீதிவ்யா மற்றும் விவேக் குடும்பத்தினரை அங்கே வரவழைக்கிறது வில்லன் பேய்.

இவர்களை அங்கே வரவழைக்க என்ன காரணம்? அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? என விடை சொல்கிறார் இந்த காஷ்மோரா.

Kashmora-movie-first-Look-poster-karthi

கதாபாத்திரங்கள்…

காஷ்மோரா, ராஜ்நாயக் என இரண்டிலும் கார்த்தி செஞ்சுரி அடிக்கிறார்.

ஒட்டுமொத்த படத்தையும் இரு கேரக்டரில் தாங்கி நிற்கிறார்.

பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டபின், அட.. உங்க வித்தையெல்லாம் என்கிட்ட ஏன் காட்டுறீங்க. கஸ்ட்மர் கிட்ட காட்டுங்க என்று கூறி கெத்து காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மொட்டைத் தலையுடனும் தலை இல்லாமல் முண்டமாக வந்து மிரட்டுவதும் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

நயன்தாரா எப்போ வருவார் என ஏங்க வைக்கிறார். வந்தபின்னர் ஏங்க வைத்து செல்கிறார்.

ஸ்ரீ திவ்யாவுக்கு மாடர்ன் டைப் கேரக்டர். ஆனால் காட்சிகள் வலுவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு விவேக். வெல்கம் பேக். காமெடி ரசிக்க வைக்கிறது.

இவர்களுடன் சரத் லோகிஸ்தவா, ஜாங்கிரி மதுமிதா ஆகியோரும் உண்டு.

kashmora-new-stills-1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஓயா ஓயா பாடல் மெல்லிசையில் சரித்திரக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் சந்தோஷ் நாராயணன்.

பின்னணி இசை சில இடங்களில் பேச வைக்கிறது.

கலை இயக்குனருக்கு நிறைய நேரம் கை குலுக்கலாம்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இரண்டு விதமான காட்சி அமைப்புகளும் அருமை.

kaashmora nayan

படத்தின் பிளஸ் :

 • கார்த்தி மற்றும் நயன்தாராவின் நடிப்பு
 • சாமியார்களின் பித்தலாட்டம்
 • விவேக் காமெடி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள்
 • ராஜ்நாயக் மற்றும் ரத்னமஹாதேவி காட்சிகள்

படத்தின் மைனஸ் :

 • பெரும்பாலான படங்களில் படத்தின் நீளம் பெரும் குறையாக இருக்கிறது. இதிலும் அதேதான்.
 • மொட்டைத் தலையுடன் இறக்கும் ராஜ்நாயக் பழிவாங்க வரும்போது கொஞ்சம் முடியுடன் வருவது எப்படி? பாஸ் (ஓ. இதான் 3வது கெட்டப்?)

காஷ்மோராகொஞ்சம் கலகல… கொஞ்சம் லகலக

கொடி விமர்சனம்

கொடி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்ஏ சந்திரசேகரன், காளிவெங்கட், மாரிமுத்து, சிங்கமுத்து, நமோ நாராயணன் மற்றும் பலர்.
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஜி வெங்கடேஷ்
படத்தொகுப்பு : பிரகாஷ்.
இயக்கம் : துரை செந்தில்குமார்
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே. அஹ்மது
தயாரிப்பாளர் : வெற்றிமாறன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்

கதைக்களம்…

வாய்பேச முடியாத கருணாஸ் அரசியலில் சாதிக்க விரும்புகிறார்.

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்க, முதல் குழந்தைக்கு கொடி என பெயரிடுகிறார் இவரது கட்சி தலைவர் எஸ்ஏசி.

ஒரு கிராமத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கருணாஸ் தீக்குளித்து இறக்கிறார்.

அதன்பின் தந்தையின் அரசியல் பணியை தொடர்கிறார் கொடி. இவருக்கு ஜோடி ஆளும்கட்சியின் மாவட்ட செயலாளர் த்ரிஷா.

இளைய தனுஷ் காலேஜ் புரபொசராக வருகிறார். இவரது ஜோடி முட்டை விற்கும் அனுபமா.

சில ஆண்டுகளுக்கு மீண்டும் அந்த விஷவாயு பேக்டரி பிரச்சினை எழுகிறது.

இதனால் கட்சித் தலைமைக்கும் தனுஷ் இடையே பிரச்சினை எழுகிறது.

இதனை வைத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆடும் ஆட்டங்களே இந்த கொடி.

kodi 1

கதாபாத்திரங்கள்…

கொடி, அன்பு என இரண்டு கேரக்டரிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ்.

அரசியல்வாதியை மெச்சூர்ட்டியாகவும் இளையவர் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவராகவும் காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.

ஒரு நல்லவர் அரசியல்வாதியானால் அவர் படும் கஷ்டங்களை நடிப்பில் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனுஷின் இரண்டு கேரக்டர்களையும் த்ரிஷா ஒரேஅடியாக தள்ளி முன்னிலை வகிக்கிறார் த்ரிஷா. படத்தின் வில்லியே இவர்தான்.

அவருடைய சினிமா கேரியரில் இப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்த்து இல்லை எனலாம்.

ஒரு பெண்ணாக இருந்து, பாலிடிக்ஸில் சைலண்டாக சாதித்து வருவது அப்ளாஸை அள்ளுகிறது.
செகண்ட் ஹீரோயின் அனுபமா. அளவாக வந்து அழகாக கவர்கிறார்.

இவர்களுடன் எஸ்ஏ. சந்திரசேகரன், விஜயகுமார், சரண்யா, காளிவெங்கட், மாரிமுத்து உள்ளிட்டோர் சிறப்பான தேர்வு.

kodi fight

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சந்தோஷன் நாரயணனின் இசையில் சுழலி, வேட்டு போடு பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

ஜி வெங்கடேஷின் ஒளிப்பதிவில், அரசியல் காட்சிகள் மாஸாக உள்ளது.

படத்தொகுப்பாளர் பிரகாஷ் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம். முதல் பாதியில் வேகம் குறைவு.

kodi movie posters

படத்தின் ப்ளஸ்

 • த்ரிஷாவின் நெகட்டிவ் + தனுஷின் அரசியல் கேரக்டர்
 • ஒரு காரியத்தை தனக்கு சாதகமாகவும், பாதகமாகவும் செய்பவன் அரசியல்வாதி என்பதை அப்பட்டமாக கூறியிருக்கிறார்
 • தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்படும் கிராம மக்கள்

படத்தின் மைனஸ்…

 • அரசியல் களம் என்றாலும் உடனுக்குடன் எம்எல்ஏ, எம்பி ஆவது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.
 • ஆமை வேகத்தில் நகரும் சில காட்சிகள்

மொத்தத்தில் கொடி… அரசியல் ஆட்டம்

பைரவா டீசர் விமர்சனம்

பைரவா டீசர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகிய தமிழ் மகன் படத்தை தொடர்ந்து மீண்டும் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பைரவா.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், சிஜா ரோஸ், பாப்ரி கோஸ், தம்பி ராமையா, டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தி மிகப்பிரம்மாண்டமாக பிரபல நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நாளை அக். 28ந் தேதி தொடங்குபோது இப்படத்தின் டீசர் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகிவிட்டது. இந்த டீசர் எப்படி என்பது பற்றிய ஒரு பார்வை பார்ப்போமா?

கபாலி பட டீசரில் ரஜினியை காட்டுவதற்கு முன்பு யாருடா அவன்? என கிஷோர் கேட்பாரே அதேபோல இதில் ஜெகபதி பாபு கேட்கிறார்.

அதன் பின்னர்… தெரிஞ்ச எதிரியை விட, தெரியாத எதிரிக்குத்தான் அல்லு… அதிகமாக இருக்கனும் என்ற பன்ச் டயலாக் பேசுகிறார் இளைய தளபதி.

bairavaa teaser vijay

பொதுவாக விஜய் பன்ச் வசனங்களில் பாசிட்டிவ்வான வார்த்தைகளே இருக்கும்.

இன்னைக்கு நிறைய பேருகிட்ட இல்லாத ஒரு கெட்ட பழக்கம் ஒன்னு என்கிட்ட இருக்குது என்கிறார். அது என்ன என்பது படம் வந்தபிறகுதான் தெரியும்.

இதனிடையில்…

யார்ரா யார்ரா இவன் ஊர கேட்ட தெரியும் வாடா
வந்து முன்ன நின்னு பாரு தெரியும்
வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா பைரவா என்ற பாடல் வரிகளிலும் குரலிலும் அருண்ராஜா காமராஜ் ரசிகர்கள் கவர்கிறார்.

பின்னணி இசையை பேசும்படி கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

மேலும் கீர்த்தி சுரேஷ் அழகான முகபாவனைகளுடன் ஹோம்லியாக வந்து செல்கிறார்.

இடையில் ஒரு காட்சியில் சதீஷை ஆடவிட்டு பார்க்கிறார் விஜய்.

bairavaa keerthy

தன் விரல்களிடையே ஒரு நாணயத்தை சுற்றி உள்ளே விட்டு விட்டு எடுக்கிறார் விஜய். அப்போது அவருக்கு பின்னால் வில்லன் கும்பல் சுற்றி வளைக்கிறது. இது படத்தில் செம பைட் சீனாக இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடையில் மைம் கோபி.. நீ என்ன பெரிய வசூல் மன்னனா? என்று கேட்கிறார்.?

தெரியல. அப்படிதான் பேசிறாங்க என்கிறார் விஜய். இது படத்திற்கா? அல்லது படத்தின் வசூலுக்காக எழுதப்பட்டதா? என்று தெரியவில்லை.

இறுதியாக எப்ப வரும்ன்னு சொல்லனுமா? என்று கேட்பதுடன் இந்த டீசர் முடிவடைகிறது.

ஆக மொத்தம் விஜய்யின் வழக்கமான பார்முலாவில் பைரவா வந்து இருக்கிறது.

அம்மணி விமர்சனம்

அம்மணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : லட்சுமி ராமகிருஷ்ணன், சுபுலட்சுமி பாட்டி, நிதின் சத்யா, ரோபா சங்கர் மற்றும் பலர்.
இசை : கே
ஒளிப்பதிவு : இம்ரான் அஹ்மது
படத்தொகுப்பு : ரெஜித் கே.ஆர்.
இயக்கம் : லட்சுமி ராமகிருஷ்ணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : டேஹ் எண்டர்டெயின்மென்ட் வென் கோவிந்தா

கதைக்களம்…

சினிமாத்தனம் இல்லாத படங்கள் எப்போதாவது அரிதாக வரும். அந்த வகையில் வந்திருக்கும் அரிதான அம்மணி இவள்.

‘ஜீ தமிழ்’ டிவியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையின் பதிவுதான் இது.

ammani movie stills

அரசு பொது மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளி (ஆயா)வாக வேலை பார்க்கிறார் சாலம்மா.

இவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகனுக்கு 10 வயதாகும்போதே கணவர் இறந்து விடுகிறார்.

வளர்த்த மகளோ ஒரு ரெளடியை காதலித்து ஓடி விடுகிறாள்.

மூத்த மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்.

இளைய மகன் மனைவியின் பேச்சுக்கு ஆடும் ஆட்டோ டிரைவர்.

இப்படியான இவரது வாழ்க்கையில் கடன் வாங்கி ஒரு சொந்த வீடு கட்டுகிறார்.

அதனை கட்டமுடியாமல் தவிப்பதால் வேலையை விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு கட்ட நினைக்கிறார்.

அதன்பின் ஒரு இக்கட்டான சூழநிலையில் சுபுலட்சுமி பாட்டியை சந்திக்கிறார். அவரால் இவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகிறது.

அதனை படு யதார்த்தமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் சாலம்மா லட்சுமி ராமகிருஷ்ணன்.

?????????????????????????

கதாபாத்திரங்கள்…

பெரிய நட்சத்திரங்களின் அம்மாவாக நடித்தவர் என்ற போர்வையில்லாமல், தன்னால் எப்படியும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

குடிசைப் பகுதி ஜனங்களின் வாழ்க்கையை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் லட்சுமி.

பணம்தான் இன்றைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதையும் நாசுக்காக சொல்லியிருக்கிறார்.

இந்த சாலம்மாவுக்கே சவால் விடும் கேரக்டரில் நடித்துள்ளார் 80 வயதான பாட்டி சுபுலட்சுமி.

பாட்டு பாடிக் கொண்டு சின்ன சின்ன விஷயங்களை இவர் செய்யும்போது, ஒரு குழந்தைத்தன்மை இவரிடம் நிழலாடுகிறது.

இவரது துறு துறு நடிப்பு, பலருக்கு தங்கள் பாட்டியை நினைவு படுத்தலாம்.

எமதர்மன் ‘ரோபோ’ சங்கரின் குத்துப் பாடலுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

நிதின்சத்யாவும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.

?????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இம்ரானின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

“மழை இங்கில்லையே வெயிலும் இல்லையே…. வானவில் வந்ததே…”, “நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள் தானடா…”, “லைப்பு மச்சான் மச்சான்…”, ஆகிய பாடல் வரிகளில் இன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கே-யின் இசை உணர்வு பூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிக்கிறது.

Ammani-movie-poster

இயக்குனர் பற்றிய பார்வை…

ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறி வருகிறார்.

படத்தின் வசனங்கள் பல இடங்களில் பலத்த கைத்தட்டலை பெறுகிறது. அவற்றில் சில…

 • “வலையில மீன் மாட்டட்டும் அப்புறம் குழம்பு, வறுவல பத்தி முடிவு பண்ணலாம்…”
 • “கண்ண மூடி போயிட்டா அமைதியா போறமா, ஆரவாரமா போறமா…ன்னு யாருக்குத் தெரியும்…?”
 • “நம்ம நாட்டு பிரதமரே குப்பை பொறுக்கதான் சொல்றார்டி….”
 • இந்த வெளிச்சம் போன நிழல் கூட சொந்தமில்லை…”

?????????????????????????????????????????

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்தாலும் இறந்தாலும் கைநீட்டும் ஊழியர்களின் அவல நிலையை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இவைகளை விட பெற்ற பிள்ளைகளை மலைபோல நம்பும் பெற்றோருக்கு சரியான பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அம்மணி… அவசிய கண்மணி

ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், கல்யாணி நட்ராஜன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர்.
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : பி.சி. ஸ்ரீராம்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : பாக்யராஜ் கண்ன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : 24ஏஎம் ஸ்டூடியோஸ் – ஆர்.டி.ராஜா

remo 3

கதைக்களம்…

சினிமாவில் நடித்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை போல வரவேண்டும் என துடிக்கும் சிவகார்த்திகேயன் சான்ஸ் தேடி அலைகிறார்.

அதற்காக பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்திக்கிறார்.

ஆனால், அவரின் கதைப்படி பெண் வேடமிட ஒரு ஹீரோ தைரியமாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

அதற்காக துணியும் சிவகார்த்திகேயன், பெண் வேடமிட்டு கேஎஸ்ஆரை கவர நினைக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பெண் வேடத்தில் இருக்குபோது இவர், கீர்த்தி சுரேஷை சந்திக்க அவர் மீது காதல் வருகிறது.

அப்போது எஸ்கே பெண் என்று நினைத்து கீர்த்தி இவரிடம் நெருங்கி பழகிறார்.

அதன்பின்னர் நாம் என்ன சொல்லபோகிறோம் என்று தெரியாதா உங்களுக்கு..? காதல் கைகூடியதா? பெரிய நடிகர் ஆனாரா? என்பதே இந்த ரெமோ.

remo 1

கதாபாத்திரங்கள்…

படத்தின் நாயகன் நாயகி எல்லாம் எஸ்கே.தான். அதிலும் ரெஜினா மோத்வானி (ரெமோ) ஆக வரும் காட்சிகளில் டபுள் சென்சுரி அடிக்கிறார்.

நிச்சயம் இதற்கு ஒரு கெத்து வேண்டும். ஆணழகன் படத்தில் பிரசாந்துக்கு பொருந்திய பெண் வேஷம் போன்று சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு பொருத்தம்.

லேடி கெட்டப்பில் இடும் பைட் செம. எதிரிகளை அடித்து விட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சியின் போது, ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகும்.

காதலி வீட்டுல படுக்கிற பாக்கியம் எத்தனை பசங்களுக்கு கிடைக்கும், அதுவும் அவ நைட்டிய போட்டுக்கிட்டு படுற சுகமே தனி தான் எனும் போது கிளுகிளுக்க வைக்கிறார்.

இவர் பெண்ணாக இருக்கும்போதும், ஆணாக வரும்போதும் அது என்னமோ கீர்த்தியிடம் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. எப்படி ப்ரோ? இதெல்லாம்?

ஹீரோயின் கேரக்டரும் படத்தில் செம வெயிட். அதில் குறை வைக்காமல் ஸ்கோர் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்.

நிச்சயம் செய்தபின் காதல் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் படி தன் அழகிய கண்களால் உணர வைக்கிறார்.

அப்பா, நீங்க பார்த்த மாப்பிள்ளையோட என்னால நிம்மதியா வாழ முடியாது என்று சொல்லும்போது கண் கலங்க வைக்கிறார்.

மேலும் பி.சி. ஸ்ரீராமின் கேமரா கண்களில் செம பிகராய் தெரிகிறார் கீர்த்தி. மேனகா மேடத்திடம் சொல்லி திருஷ்டி சுத்திதான் போடனும் போல.

சதீஷின் ஒன் லைன் காமெடி வரிகள் ரெமோவுக்கு கைகொடுத்திருக்கிறது. இவருடன் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கிறார்.

உதாரணத்திற்கு… முகத்தில மாவு இருக்கும்போது.. அடிக்கிற வெயிலுக்கு வெளியில போனா தோசையாயிடும் அதான் உள்ளிட்ட படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்.

சில நேரமே வந்தாலும் என் காமெடி சோடை போகாது என்கிறார் யோகி பாபு.

பஸ்சில் ஸாரி சொல்லும்போது, கண்டக்டர் டிரைவர் இருவரையும் பிரித்து எடுத்துக்க சொல்லுவது, டானு டானு பாடல்கள் என இவர் வரும்போது எல்லாம் ரசிக்க வைக்கிறார்.

வழக்கம்போல் லவ்வுக்கு கீரின் சிக்னல் காட்டும் சினிமா அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்.

கீர்த்தியின் அப்பாவாக நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

remo 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இப்படத்தை முழுமையாக ரசிக்க வைக்க முழுக்காரணமே பி.சி. ஸ்ரீராம்தான். அவ்வளவு அழகாக ஒவ்வொரு ப்ரேமையும் பார்க்க வைக்கிறார்.

இத்தனை நாட்களாக பாடல்களில் கவனம் செலுத்திய அனிருத், இப்படம் மூலம் பின்னணி இசையில் முன்னணிக்கு வருகிறார். கமான் அனி.

கலை இயக்குனர் முத்துராஜின் கைவண்ணத்தின் மருத்துவமனை, வீடு, சூட்டிங் லொக்கேஷன் அனைத்தும் ரசிக்கும் ரகமே.

சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, எஸ்.கேயின் குரலை அழகான பெண் குரலாக மாற்றியிருப்பது சிறப்பு.

remo 4 stills

படத்தின் ப்ளஸ்

 • சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் அழகும் நடிப்பும்
 • பி.சி.ஸ்ரீராம் மற்றும் அனிருத்
 • ‘பொண்ணுகளை கண்ட்ரோல் பண்றது கஷ்டம் கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி’… புடிச்ச புடவைய கட்டிகிட்டு இவ்ளோ அழகா இருக்கீங்க, புடிச்சவனையே கட்டிக்கிட்ட வாழ்க்கையே அழகா இருக்கும்…  உயிரா காதலிப்பாங்க, உயிரை கொடுத்தும் காதலிப்பாங்க பசங்க… உள்ளிட்ட பல வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

remo 5

இயக்குனர் பற்றி…

அண்மைக் காலமாக வரும் படங்களில் ஒரு குரல் பேச படம் ஆரம்பிக்கும்.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணனும் அந்த பாணியில் ஆரம்பித்து, கடைசியில் கே.எஸ்.ரவிகுமாரையே ‘ரெமோ நீ காதலன்’ படத்தின் டைரக்டர் ‘பாக்யராஜ் கண்ண’னாக  மாற்றியிருப்பது நச்.

முதல் படம் என்று தெரியாத அளவிற்கு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ரெமோ… சிவகார்த்திகேயனின் அடுத்த லெவல்

More Articles
Follows