பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அரவிந்த்சாமி, அமலாபால், மீனா மகள் பேபி நைனிகா, மாஸ்டர் ராகவ், ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா, நாசர் மற்றும் பலர்
இயக்கம் – சித்திக்
ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்
இசை – அமரேஷ் கணேஷ்
தயாரிப்பு – முருகன்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மத்

கதைக்களம்…

தந்தை இல்லாத பேபி நைனிகா தன் அம்மா அமலா பாலுடன் வசிக்கிறார்.

தாய் இல்லாத பையன் மாஸ்டர் ராகவ் தன் தந்தை அரவிந்த் சாமியுடன் வசிக்கிறார். இவரின் தாத்தா நாசர்.

நைனிகாவும் ராகவ்வும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.

அரவிந்த் சாமி எந்தவொரு அடிதடி என்றாலும் இறங்கி அடிப்பார். இவருடன் ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் ஆகிய மூவரும் எப்போதும் இருப்பார்கள்.

அரவிந்த்சாமியின் அடிதடி என்றால் நைனிகாவும் ரொம்ப பிடிக்கும். ஆனால் ராகவ்வுக்கு பிடிக்காது. இதனால் நைனிகா நான் உங்க அப்பாவுடன் இருக்கேன். நீ என் அம்மாவுடன் இரு என்கிறார்.

குழுந்தைகளில் இந்த எக்ஸ்சேஞ்சில் தங்கள் இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க நினைக்கிறார்கள்.

குழந்தைகளின் ஆசையை அமலாபாலும் அரவிந்த் சாமியும் நிறைவேற்றினார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொதுவாக அழகான அரவிந்த் சாமி என்றால் சாப்ட் கேரக்டராகவே காட்டுவார்கள். ஆனால் இதில் அரவிந்த்சாமி அடிதடியில் மிரட்டியிருக்கிறார்.

பறந்த பறந்து அடிப்பதும் மகனுக்கு அடங்கி போவதும் ரசிக்க வைக்கிறார். பின்னர் அமலா பாலை கட்டிக்க வைக்க நினைப்பதில் ரசிக்க வைக்கிறார்.

அரவிந்த் சாமியின் வேஷ்டி மற்றும் சட்டை டிசைன்கள் காஸ்ட்யூம் டிசைனர் யார்? என்று நிச்சயம் கேட்க வைக்கும் அளவில் நன்றாக இருக்கிறது.

நைனிகாவின் அம்மாவாக இவர் நடித்தாலும் நம்மால் அமலாபாலை அப்படி பார்க்க முடியவில்லை. ஆடைகளில் தன் அழகை ரசிக்க வைக்கிறார்.

சூரி, ரோபோ சங்கர் மற்றும் ரமேஷ் கண்ணாவின் காமெடி காட்சிகளில் நிறைய இடங்களில் கை தட்டல்களை வரவைக்கிறது. நாசர் கேரக்டர் கச்சிதம்.

ஒரே காட்சியில் வந்தாலும் சித்ரா லட்சுமணன் நிறைவாக செய்துள்ளார்.

அமலாபாலின் கணவராக வருபவர் நல்ல உடற்கட்டுடன் பளிச்சிடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அம்ரேஷின் இசையில் பாடல்கள் அருமை. பாஸ்கரு ஒரு ராஸ்கோலு பாடல் தாளம் போட வைக்கும். ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டல்.

விஜய் உலகநாதன் படத்தை கலர்புல்லாஃக காட்சி நம்மை ஈர்க்கிறார்.

மலையாள டைரக்டர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் சித்திக்.

சித்திக் படம் என்றாலே சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. இதில் வடிவேலுவை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிரிக்க வைத்திருக்கலாம்.
(உதாரணம் சித்திக் இயக்கிய எங்கள் அண்ணா, ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்கள்)

மற்றபடி குழந்தைகளுடன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்… பாஸ்கர் ஒரு ரசனைக்காரன்

இரும்புத்திரை விமர்சனம்

இரும்புத்திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷால், அர்ஜீன், சமந்தா, காளி வெங்கட், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : பிஎஸ். மித்ரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஜார்ஜ்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: விஷால் பிலிம் பேக்டரி

கதைக்களம்…

கையில் பணமிருந்தால் பாதுகாப்பில்லை என் பேங்க்கில் டெபாசிட் செய்கிறோம். ஆனால் நம் பேங்க் அக்கௌண்டில் இருந்து பணம் திருடு போகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியா? என்பதை ஒன் லைனில் ஓங்கி அடித்திருக்கிறார் மித்ரன்.

மிலிட்டரி மேன் கதிரவன் (விஷால்) பயங்கர கோபக்காரர். இவரின் கோபத்தால் பல பிரச்சினைகளை இவர் ஆர்மியில் சந்திக்கிறார்.

எனவே இவரின் கோபத்தை கட்டுப்படுத்தும் வகையில் மனநல மருத்துவர் சமந்தாவிடம் இருந்து ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வரச் சொல்கிறார் உயரதிகாரி.

அங்கு வரும் விஷால் சில நாட்கள் தன் தங்கை, அப்பா, மாமா ஆகியோருடன் செலவழிக்கிறார்.

அப்போது தங்கையின் திருமணத்திற்காக ஒரு கடை வைத்திருப்பதாக பொய் சொல்லி லோன் வாங்க வேண்டி சூழ்நிலை. அதன் படி லோன் அமௌண்ட் 6 லட்சம் இவரது அக்கௌண்டிற்கு வருகிறது.

ஆனால் வந்த அடுத்த நாளே இவரது மொத்த பணத்தை ஒருவர் எடுத்து விடுகிறார். ஆனால் இவருக்கான பேங்க் எஸ்எம்எஸ் வரவில்லை. அப்படியென்றால் அதன் பின்னணியில் செயல்படுவது யார்?

வாங்கிய லோனுக்கு தானே பொறுப்பு. எப்படி கடனை அடைப்பது? என போராடுகிறார் விஷால். இதுபோல் பலருக்கும் நடக்க, அவர் என்ன செய்தார் என்பதே இந்த இரும்புத் திரை.

கேரக்டர்கள்…

மிடுக்கான மிலிட்டரி கதிரவனாக விஷால். அவரது உயரத்திற்கு ஏற்ப கேரக்டர். வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஏன்டா கோடிக்கணக்குல லோன் வாங்குனா கேட்க துப்பில்லை. விவசாயிகள் லோனு கேட்டா அவன் திருப்பி கொடுக்கலேன்னா அவன என்னவெல்லாம் பண்னுறீங்க. என பின்னி எடுக்கிறார். அவரைப் போலவே தியேட்டரிலும் செம ரெஸ்பான்ஸ்.

ஆக்சன், கோபம், அடிதடி என மிரட்டினாலும் சமந்தா உடன் சுத்தமாக கெமிஸ்ட்ரி ஒட்டவில்லை.

சமந்தா கேரக்டர் நாயகி என்ற அளவில் மட்டுமே கதையில் ஒட்டுகிறது. சமந்தா கேரக்டரை சாந்தமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஏதோ சீரியல் நடிகையை போல படு பொறுமையாக பேசுகிறார்.

ஆக்சன் கிங் அர்ஜீன் இனி வில்லன் வேடத்திலும் கலக்குவார். ஒய்ட் டெவிலாக வந்து தெறிக்கவிடுகிறார்.

மிரட்டல் தோனியில் பேசிக் கொண்டே டிஜிட்டல் முறையில் டீசென்டாக தன் கேரக்டரை நிறுத்துகிறார்.

ரோபோ சங்கர் சில காட்சிகள் என்றாலும் சிரிக்க வைத்துவிடுகிறார்.

டெல்லி கணேஷ், காளி வெங்கட் ஆகியோர் கேரக்டர்கள் நிறைவு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். டைட்டில் கார்டு முதல் ட்விஸ்ட் காட்சிகளை தன் பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார்.

ஜார்ஜின் ஒளிப்பதிவு நிறைவு. ஆனால் ரூபனின் எடிட்டிங் முதல் பாதி தேவையில்லை என தோன்றுகிறது. படத்தின் கதையே 2ஆம் பாதி மட்டும்தான்.

கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் லோன், ஜெராக்ஸ் கடை, ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் என எல்லாவற்றின் மீதும் இனி பயம் உண்டாகும் வகையில் ஒரு விழிப்புணர்வு படத்தை கொடுத்துள்ளார் மித்ரன்.

ஆனால் இந்த கேரக்டருக்கு ஏன் விஷால் மிலிட்டரி மேனாக வருகிறார். அவர் ஆர்டினரி மேனாகவே வந்திருக்கலாமே டைரக்டர் சார்?

எப்போதும் ஆர்மியில் இருக்கும் நபர்களுக்கு நாட்டுப் பற்று இருக்கும். ஆனால் விஷால் எப்போதும் வெளிநாடு செல்ல வேண்டும் என நினைக்கிறார்.

இரும்புத் திரை… டிஜிட்டல் விழிப்புணர்வு திரை

நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, ராஜேந்திர பிரசாத், பானுப்பிரியா மற்றும் பலர்
இயக்கம் : நாக் அஷ்வின்
இசை : மைக்கி ஜே மேயர்
ஒளிப்பதிவு: டேனி சான்சேஷ் லோபஸ்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: அஸ்வின் தத், ஸ்வப்பனா தத், பிரியங்கா தத்

கதைக்களம்…

நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்ட சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

சாவித்திரி பற்றி தெரிந்த விஷயங்களையும் சிலருக்கு தெரியாத விஷயங்களையும் இதில் சுவையாக சொல்லியிருக்கிறார்.

அப்பா இல்லாமல் அம்மாவின் பாதுகாப்பில் ஆந்திராவில் வளர்கிறார் சாவித்ரி. பின்னர் தன் பெரியப்பாவின் துணையுடன் நாடகத்தில் நடிக்கிறார்.

அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆரவத்தை புரிந்துக் கொண்டதாலும் நிறைய பணம் கிடைக்கும் என்பதாலும் சாவித்ரியை நடிகையாக்க ஆசைப்படுகிறார் பெரியப்பா.

சென்னைக்கு வந்து 14 வயதிலேயே நடிகையாகிறார். பல வருட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாகி விடுகிறார்.

தென்னிந்திய சினிமாவின் நடிகையர் திலகமாக உருவெடுக்கிறார்.

ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஜெமினி கணேசனை (துல்கர் சல்மான்) அவர் வற்புறுத்தலால் காதலிக்கிறார் சாவித்ரி.

ஊருக்கு நடிகர்களாகவும், வீட்டுக்குள் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். சில நாட்களில் இது ஊருக்கே தெரிய வருகிறது.

இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் பிறக்கிறது.

இதனிடையில் எவர் உதவி என்று கேட்டாலும் பெரிய தொகைகளை கூட கொடுத்து உதவுகிறார் சாவித்ரி. ஊரே அசந்து பார்க்கும் அளவுக்கு பெரிய பங்களாவை கட்டுகிறார்.

ஆனால் ஜெமினியின் காதல் லீலைகள் சில பெண்களுடன் தொடர, விரக்தியில் குடிக்கு அடிமையாகிறார் சாவித்ரி.

அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை இழக்கிறார். எனவே படங்களை தயாரிக்கிறார். அதுவும் பெரும் தோல்வியில் முடிகிறது.

இறுதியில் அனைத்தையும் இழந்து ஒரு அனாதை போல் மரண படுக்கையில் பல மாதங்கள் போராடி இறக்கிறார்.

ஆனாலும் தான் ஆசைப்பட்ட படி அறக்கட்டளையை நிறுவி ஆதரவற்றோருக்கு உதவி செய்தே உயிரை விடுகிறார் இந்த நடிகையர் திலகம்.

கேரக்டர்கள்…

ஒரு மாபெரும் நடிகை சாவித்ரி. அவரின் கேரக்டரை எப்படி செய்ய போகிறார் கீர்த்தி சுரேஷ்? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

ஆனால் இப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் கீர்த்தி (புகழ்) இனி சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும். அருமையான நடிப்பை வழங்கியுள்ளார்.

இந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவிப்பார் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

நாடக நடிகையாக இருப்பது முதல், மாபெரும் நடிகையாக மாறியது வரை பல பரிமாணங்களை தன் நடிப்பால் ரசிக்க வைக்கிறார். வாழ்க்கையில் எந்த நிலை வந்தாலும் தன் நிலை மாறாது அதே துறு துறு, உதவும் குணம் என அவரது நவரசங்களை அடிக்கி கொண்டே போகலாம்.

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான். திருமணமாகி இருந்தாலும் பெண்களை வசியப்படுத்தி காதல் வலையில் வீழ வைப்பது எப்படி என்பதை வார்த்தை விளையாடி இருக்கிறார். வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு அந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கலாம்.

சமந்தா மற்றும் விஜய் தேவரெகொண்டா இருவரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷின் பெரியப்பாவாக வரும் அந்த நபர் பழங்கால தெலுங்கு நடிகர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பானுப்ரியா, நாக சைதன்யா ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் கலை இயக்குனருக்கு பத்து பூங்கொத்துக்களை கொடுத்து பாரட்டலாம். 1945 முதல் 1985 வரையிலான சினிமாக்கள் அது பெற்ற தோல்விகள் வெற்றிகள் என அனைத்தையும் சினிமா ரசிகர்களுக்காக அறிந்து கொள்ள அருஞ்சுவை படைத்திருக்கிறார்.

பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை என்றாலும் அதன் கலை, நடன அசைவுகள் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும்.

நடிகையர் திலகம் சாவித்ரி நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என்ன?

எந்த நிலை வந்தாலும் உன் சுயரூபத்தை மாற்றாதே. காலங்கள் மாறும் நீ மாறாதே.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தனக்கு மிஞ்சியே தானம் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

அடுத்தவள் கணவனை கரம் பிடித்ததால் வந்த வினை.

கொடுத்த தர்மம் தலை காக்கும். குடி குடியை கெடுக்கும்.

திறமையிருந்தால் நீ விண்ணைத் தொடலாம் என பல உண்மைகள் தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியிருக்கிறார் இந்த நவீன சாவித்ரி.

நடிகையர் திலகம்… வாழ்க்கையில் நடிக்காத திலகம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

இரவுக்கு ஆயிரம் கண்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அருள்நிதி, மஹிமா நம்பியார், சுஜா வருணி, ஜான் விஜய், அஜ்மல், லட்சுமி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ், சாயா சிங், வித்யா பிரதீப் மற்றும் பலர்
இயக்கம் : மாறன்
இசை : சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்
எடிட்டிங்: சான் லோகேஷ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஆக்சஸ் பிலிம் பேக்டரி
வெளியீடு : 24 பிஎம்

கதைக்களம்…

கால் டாக்சி டிரைவர் அருள்நிதி. இவருடைய காதலி மகிமா. ஒரு நாள் இரவில் மகிமாவை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் அஜ்மல். அதுமுதல் மகிமாவை பின் தொடர்கிறார் அஜ்மல்.

இதனால் மகிமா அவரை கண்டிக்க, அருள்நிதியை காலி செய்ய நினைக்கிறார் அஜ்மல்.

இதனிடையில் மகிமாவுக்கு தெரிந்த சாயா சிங்குக்கு அஜ்மலால் ஒரு பிரச்சினை வர, அஜ்மலை கொல்ல திட்டமிடுகிறார் அருள்நிதி.

ஒரு நாள் இரவில் ஒரு பங்களாவில் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவர் சுஜா வருணி.

அப்போது அந்த பங்களாவில் இருந்து அருள்நிதி வெளியே வர, ஒருவர் அவரை பார்த்துவீட்டு போலீசில் புகார் கொடுக்கிறார்.

ஆனால் தான் கொலை செய்யவில்லை என்று போராடும் அருள்நிதி அங்கிருந்து தப்பிக்கிறார்.

அதன்பின்னர் அவர் கொலையாளியை கண்டு பிடித்தாரா? அவரை கொல்ல என்ன காரணம்? அஜ்மல் அருள்நிதி மோதல் என்ன ஆனது? என்று பல பல திருப்படங்களுடன் எவரும் எதிர்பாரா வகையில் படம் முடிகிறது.

கேரக்டர்கள்…

படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு சின்ன சின்ன ப்ளாஷ்பேக்குகள் இருக்கிறது.

அலட்டிக் கொள்ள நடிப்பில் அருள்நிதி. கதைக்கு ஏற்ற நாயகனாக நடிப்பை கொடுத்திருக்கிறார் அருள்நிதி.

நாளுக்கு நாள் மஹிமாவின் அழகு கூடிக் கொண்டே போகிறது. மகிழ்ச்சி மஹிமா நம்பியார்.

வில்லன் வேடத்தில் ஸ்மார்ட் அஜ்மல். இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு இவர் ஆடும் ஆட்டங்கள் ரசிக்க வைக்கிறது.

சில காட்சிகளே இப்படத்தின் காமெடிக்கு கை கொடுத்திருக்கிறார் ஆனந்த்ராஜ்.

வித்யா பிரதீப் மற்றும் சுஜா வருணி ஆகியோருக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவு.

இவர்களுடன் ஆடுகளன் நரேன். எழுத்தாளராக லட்சுமி ராமகிருஷ்ணன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை கதைக்கு கை கொடுத்துள்ளது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில் இரவு மழை காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

மாறன் இயக்கத்தில் இந்த மர்ம படத்தை நிச்சயம் ரசிக்கலாம்.

த்ரில்லர் படம் என்றாலும் ஆக்சன் காட்சிகள் குறைவுதான். ட்விஸ்ட் வைக்கலாம். அதற்காக இத்தனை ட்விஸ்ட்டா என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.

இரவுக்கு ஆயிரம் கண்கள்… பார்த்து ரசிக்கலாம்.

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அல்லு அர்ஜுன், அனு இமானுவேல், சரத்குமார், அர்ஜுன், நதியா, சாருஹாசன், போமன் இரானி, சாய்குமார், ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர்
இயக்கம் : வி. வம்சி
இசை : விஷால் – சேகர்
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி
எடிட்டிங்: கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: ஸ்ரீசா ஸ்ரீதர் லகடபாடி

en peyar suriya en veedu india anu emmanuel

கதைக்களம்…

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.. இந்த டைட்டிலேயே நாயகனின் பெயரையும் அவரின் தேச வெறியையும் புரிந்துக் கொள்ளலாம்.

ராணுவ வீரரான அல்லு அர்ஜுன், தன் தாய் நாட்டு மீதும், ராணுவ பணி மீதும் வெறித்தனமான பாசம் வைத்திருக்கிறார்.

பசி வந்தால் அதிகமாக சாப்பிடுவேன். உறக்கம் வந்தாலும் அதிக நேரம் உறங்குவேன். கோபம் வந்தாலும் அப்படித்தான் என அதிரடியான மனிதர் இவர்.

இவரது கோப சுபாவமே ராணுவத்தில் இவருக்கு பின்னடைவாக அமைந்துவிடுகிறது. ஒரு முறை மேலதிகாரின் அனுமதியின்றி தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார்.

இதனால் இவர் நேசிக்கும் ராணுவ பணியையும் இழக்க நேரிடுகிறது. மேலும் இவரின் கோபத்தால் காதலியையும் இழக்கிறார்.

ஆனால் மீண்டும் ராணுவ பணியில் சேர வேண்டுமென்றால் இந்தியாவின் பிரபல மனநல மருத்துவரான அர்ஜுனிடம் சான்றிதழ் வாங்கி வர உயர் ராணுவ அதிகாரி உத்தரவு இடுகிறார்.

அர்ஜுன் தான் அல்லு அர்ஜுனின் அப்பா என்றாலும் இருவருக்கும் தீராத பகை ஒன்று இருக்கிறது.

இதனிடையில் 21 நாட்கள் கோபத்தை கட்டுப்படுத்தி, அமைதியாக வாழ்ந்தால் சர்ட்பிகேட் தருகிறேன் என்கிறார் அர்ஜுன்.

இவரது தன் அமைதியான வாழ்க்கையை தொடங்கும்போது அந்த ஊர் தாதா கல்லாவால் (சரத்குமார்) பல பிரச்சினைகள் உருவாகிறது.

தன் கண் முன் நடக்கும் தவறுகளை தட்டிகேட்டாரா? அல்லது 21 நாட்கள் அடிதடியில் இறங்கினாரா? தந்தை போட்டியில் வென்றாரா? மீண்டும் ராணுவ பணியில் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

surya india song
கேரக்டர்கள்…

அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கில் ஸ்டைலிஷ் ஸ்டார் என்ற பட்டம் உண்டு. அந்த பட்டத்தை அக்கறையுடன் படம் முழுவதும் நிறுத்தியிருக்கிறார்.

அப்படியொரு ஸ்டைலிஷ் லுக்கை தன் பாடி லாங்குவேஜ் முதல், ரொமான்ஸ், டான்ஸ், சென்டிமெண்ட், தேச பக்தி என அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

சுருட்டு குடிப்பது முதல் வில்லன்களை புரட்டி எடுப்பது வரை அமர்க்களம் பண்ணி விட்டார் அல்லு.

உடம்மை பிட்டாக வைத்திருப்பதால் ஒவ்வொரு காட்சியிலும் கம்பீரத்துடன் தெறிக்க விட்டுள்ளார் அல்லு.

நாயகி அனு இமானுவேல்… ரசிகர்களை அனு அனுவாக ரசிக்க வைக்கிறார்.

en peyar suriya en veedu india sarathkumar

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அர்ஜுன். தந்தையாகவும் ஆபிசராகவும் பேசும் காட்சிகள் அருமை.

சரத்குமாருக்கு மிரட்டல் வில்லன் வேடம். சாப்பிட்டுக் கொண்டே எதிரிகளை துவம்சம் செய்து செம. அதுபோல் இறுதியில் அல்லு அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டே சண்டை போடுவது செம மாஸ்.

ஆனால் க்ளைமாக்ஸில் சரத்குமாரின் மாஸ் கொஞ்சம் டம்மியாகி விட்டது.

நதியா மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோருகு குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவை தந்துள்ளன.

இவருடன் சாய்குமாரின் மகனாக வரும் அந்த அன்வர் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.

en peyar suriya en veedu india allu arjun anu

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஷால் – சேகர் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் அந்த ஆட்டம் அருமை.

ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அருமையான காட்சிகளை கண்முன் கொண்டு வந்து ரசிக்க வைக்கிறார்.

படத்தின் பைட் மாஸ்டர்களை (கோச்சா, ரவி வர்மா, பீட்டர் ஹைன்) பாராட்டிக் கொண்டே இருக்கலாம்.
எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

வழக்கமான தெலுங்குப் படம் போல அல்லாமல் நேரடி தமிழ் படத்தை பார்ப்பதை போன்று கொடுத்து அசத்தியிருக்கிறார் வம்சி.

ஒரு படத்தில் காதல், மோதல், ஆக்சன், சென்டிமெண்ட், தேச பக்தி, பாட்டு டான்ஸ் என அனைத்திலும் சரி சமமாக கொடுத்து விருந்து படைத்திருக்கிறார்.

படத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் சரியாக வேலை வாங்கியிருக்கிறார் வம்சி.

இரண்டாம் பாதி இறுதியில் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். தெலுங்கு பாடல்கள் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டவில்லை.

மற்றபடி எந்த குறையும் இல்லை.

என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.. படக்குழுவினருக்கு ராயல் சல்யூட்

இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

இருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சாரா, யாசிகா ஆனந்த், கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா மற்றும் பலர்
இயக்கம் : சந்தோஷ் பி ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
ஒளிப்பதிவு: பல்லு
எடிட்டிங்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு: ப்ளு கோஸ்ட்

கதைக்களம்…

கௌதம் கார்த்திக், அவருடைய நண்பர் ஷாரா, நாயகி வைபவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பாங்காக் செல்கின்றனர்.

அந்த பங்களாவில் 25 வருடங்களுக்கு முன் செக்ஸ் உறவை அனுபவிக்காமல் இறந்த ஆன்மா.. அதாவது பேய் ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கெளதமையும், அவருடைய நண்பரையும் பயமுறுத்தும் அந்த பெண் பேய், இருவரில் யாராவது ஒருவர் தன்னுடன் உறவு கொண்டால் இருவரையும் விட்டுவிடுவதாக சொல்கிறது.

இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது.

பேய்யுடன் எப்படி செக்ஸ் என்பதால் ஆண்கள் தயங்குகின்றனர்.

இதனிடையே பேயை விரட்டும் சாமியார்களாக மொட்டை ராஜேந்திரன், பாலா சரவணன், ஜான் விஜய் மற்றும் கருணாகரன் பங்களாவிற்குள் நுழைகின்றனர்.

அவர்களும் அந்த செக்ஸ் பேயிடம் மாட்டி கொள்கிறார்கள்.

பேயிடம் செக்ஸ் வைச்சது யார்? என்பதுதான் மீதிக்கதை.

DcPvoyBU8AEmJUs

 

கேரக்டர்கள்..

கவுதம் கார்த்திக்கும் அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஷாராஜா இருவரும் பக்கா ப்ளானில் வந்திருப்பார்கள் போல.

டபுள் மீனிங் இல்லாமல் எல்லாமே ஓபனாகவே பேசிவிட்டார்கள்.

ஒரு மாசம் போடல ஓட்டை மூடிகிட்டு என்று ஒரு பெண் சொல்வாள்.

அவன் அவன் 25 வருசமா போடமாக இருக்கான். இவ ஒரு மாசம் போடல மூடிக்கிட்டு சொல்ற.

கடைசியா எவன் போட்டோன்னோ? எப்படி போட்டோனா? என்ற உச்சகட்ட வசனங்களை பேசிவிடுகிறார் ஷாரா.

அதேபோல் நாயகிகள் வைபவி மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் செக்ஸ் வசனங்களும் உண்டு.

படம் முழுக்க அரை கால் உடையில் வந்து இளைஞர்களை ஒருவழியாக்கி விடுவார்கள்.

பேயாக நடித்திருப்பவரும் கிளாமரில் தோன்றி செம காட்டு காட்டுகிறார்.

மேலும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா ஆகியோரும் உண்டு.

இந்த செக்ஸ் கதையில் கொஞ்சம் கருணாகரன் மாறுபட்டு நிற்கிறார். அது வேறமாதிரியான செக்ஸ் காமெடியாம்.

DcQeFRbVQAA87CX

 

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாலுவின் ஒளிப்பதிவு மற்றும் பிரச்சன்னாவின் எடிட்டிங் ஓகே.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் படத்திற்கு ஏற்ற போல் உள்ளது.

மெசேஜ் எல்லாம் சொல்ல முடியாது. இப்படிதான் படம் எடுப்பேன் என சந்தோஷ் ஜெயகுமார் கூறிவிட்டார்.

18+ இளைஞர்கள் மட்டும் படத்திற்கு வந்தால் போதும் எனவும் சொல்லிவிட்டார்.

க்ளைமாக்ஸில் இப்படியொரு உச்ச கட்ட ஆபாசத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.

அதற்கு மேல் என்ன சொல்வது. செக்ஸ் காமெடி பிடிச்சா படத்தை பாருங்க. இல்லேன்னா வேண்டாம்.

முக்கியமாக தயவுசெஞ்சு குடும்பத்தோட போய்டாதீங்க மக்களே….

இருட்டு அறையில் முரட்டு குத்து… ஆபாச அறையில் அதிரடி குத்து

More Articles
Follows