FIRST ON NET கேடுகெட்ட போலீஸ்.. கெட்டிக்கார சந்TRUE… ஜெய் பீம் விமர்சனம் 4.25/5

FIRST ON NET கேடுகெட்ட போலீஸ்.. கெட்டிக்கார சந்TRUE… ஜெய் பீம் விமர்சனம் 4.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பழங்குடி இன மக்களுக்காக அரசையும் அதிகாரத்தையும் எதிர்த்து நீதி பெற்று தந்த வக்கீல் சந்துருவின் சாதனை கதை.

1990களில் கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தில் நடந்த ஓர் உண்மைக் கதையின் பதிவு இது. இந்த வழக்கிற்காக வாதாடியவர் சந்துரு. அவர் மனித உரிமை வழக்குகளுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காமல் வாதாடி ஜெயித்தவர்.

கதைக்களம்…

ரேஷன் கார்டு கூட இல்லாமல் இந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள் பழங்குடியின மக்கள். போலீசுக்கு குற்றவாளிகள் கிடைக்காவிட்டால் இந்த மக்கள் மீது வீண்பழி சுமத்தி கைது செய்து வழக்கை முடித்துவிடுவது வழக்கம்.

ராசாக்கண்ணு செங்கனி தம்பதிகள். இவர்களுக்கு ஒரு 5 வயது மகள். செங்கனி இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கும் காலகட்டம் அது.

இந்த சூழ்நிலையில் ஆளுக்கட்சி கவுன்சிலர் வீட்டில் நகைகள் திருடப்படுகிறது. யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா? என போலீஸ் கேட்க… ராஜாக்கண்ணு மீது சந்தேகம் உள்ளதாக அந்த கவுன்சிலர் வாய்போக்கில் சொல்ல அதையே வாக்காக எடுத்துக் கொண்டு விசாரணைக்காக ராஜாக்கண்ணு மற்றும் அவரது உறவினர்கள் சிலரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் போலீஸ்.

திருடியதை ஒப்புக் கொள்ள போலீஸ் அடித்து துவைக்கிறது. செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளமாட்டேன் என நேர்மையாக இருக்கிறார் ராஜாக்கண்ணு. போலீஸ் ட்ரீட்மெண்ட்டுக்கு பிறகும் கடைசி வரை உண்மையாக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து அந்த மூவரும் தப்பித்துவிட்டார்கள் என சொல்கிறது காவல்துறை.

ஒரு குடும்பத்தில் ஒரு நபர் காணாமல் போனால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் காவல் நிலையத்திலேயே அவர் காணாமல் போனால்? எனவே வக்கீல் சந்துருவை நாடுகிறார் செங்கனி.

அதன்பின்னர் என்ன ஆனது? ராஜாக்கண்ணு நிஜமாகவே காணமால் போனாரா? எப்படி எங்கே போனார்? செங்கனிக்கு ராஜாக்கண்ணு கிடைத்தாரா? வக்கீல் சந்துரு செங்கனிக்கு நீதிமன்றத்தில் நீதி பெற்று தந்தாரா? என்பதே கதை.

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவில் ஒரு சில கேரக்டர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும். அன்புச் செல்வன், சஞ்சய் ராமசாமி, துரை சிங்கம் ஆகிய கேரக்டர்கள் வரிசையில் சூர்யாவுக்கு சந்துரு என்ற பெயரும் இனி இணைந்துவிடும். அப்படியொரு பவர்ஃபுல் கேரக்டர் லாயர் சந்துரு. சபாஷ் சந்துரு.

வசனங்களில் தெளிவு… தொழிலில் கண்ணியம்… பார்வையில் பஃயர் என அசத்தியிருக்கிறார். சூர்யாவின் சிகை அலங்காரமும் சிறப்பு.

நேர்மையான போலீஸ் பெருமாள் சாமியாக பிரகாஷ்ராஜ். அலட்டிக் கொள்ளாத நடிப்பு. தன் துறையில் கருப்புக் ஆடுகள் இருந்தாலும் சட்டத்தை மதித்து இவர் காட்டும் நடவடிக்கைகள் அசத்தல்.

செங்கனியாக லிஜா மோல்.,, ராசாகண்ணுவாக மணிகண்டன். அப்படியொரு நடிப்பு. இவர்களுக்கு விருதுகள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.

சட்டத்திற்கு பயந்து போலீஸ் பணத்தை தர ரெடியாக இருந்தாலும் அதை வாங்காமல் செங்கனி பேசும் அந்த பேச்சுகள்.. யப்ப்பா… செம அள்ளு. கொலைக்கார பாவிகளின் பணத்தில் நான் வாழமாட்டேன் என வீம்பு பிடிக்கும்போதும்.. போலீஸ் ஜீப்பே தன் பின்னால் வரும்போதும் அலட்சியமாக நடக்கும்போதும் அடடா..

போலீஸ் ஸ்டேஷனில் ராஜாக்கண்ணுக்கு ஏற்படும் நிலையை பார்த்து உங்கள் கண்கள் கலங்கினால் அதுவே அவர் நடிப்புக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை எனலாம்.

அதுபோல் இன்ஸ்பெக்டராக ஆசைப்படும் தமிழ் என்பவரின் கேரக்டர் வேற லெவல். நீங்கள் படத்தை பார்த்து இவரை திட்டாமல் இருக்க மாட்டீர்கள்.. திட்டு வாங்குவதே இவருக்கு நீங்கள் கொடுக்கும் பாராட்டு.

இவருடன் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோரும் உண்டு. ராஜாக்கண்ணுவின் மகளாக வருபவர் கடைசியில் சூர்யாவுடன் அமரும் காட்சி மாஸ் சீன்.

இவர்கள் எல்லாம் போலீஸா? ச்சே… திருடன்களை விட மகாபாவிகள் என திட்டுமளவுக்கு காவல்துறையின் அசிங்கத்தை போட்டு உடைத்துள்ளனர்.

டீச்சராக வரும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயனும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம், எம்எஸ் பாஸ்கர் ஆகியோரின் கேரக்டர்களும் நிறைவை தருகின்றன.

டெக்னீஷியன்கள்..

ஷான் ரோல்டன் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பு.. பவர் சாங்… தல கோதும்… போன்ற பாடல்கள் செம. அதுபோல் சூர்யாவுக்கு வழக்கில் ஒரு ஐடியா கிடைக்கும்போதெல்லாம் ஒலிக்கும் இசை சூப்பரோ சூப்பர்.

படத்திற்கு ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர். அடடா என்ன அழகு என வியக்க வைக்கிறார். போலீஸ் ஸ்டேசன் விசாரணை காட்சிகள் நம்மை நிச்சயம் அழவைக்கும். காட்டுமிராண்டி காவலர்கள் என நிச்சயம் திட்ட வைக்கும்.

இந்த படம் ஓடிடியில் ரிலீசானாலும் எங்கும் பார்வேர்ட் செய்து பார்க்காத அளவுக்கு எடிட்டிங் செய்துள்ளார் ஃபிலோமின்ராஜா. அப்படியொரு நேர்த்தி.

அதுபோல கலை இயக்குநர் கதிரும் தன் பணியில் சிறப்பு. 1990களில் உள்ள டேர் ரிக்கார்டர் முதல் வீடியோ கேசட் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார்.

இயக்கம் பற்றிய அலசல்…

க்ரைம் த்ரில்லர் படங்களில் நிறைய ட்விஸ்ட்டுகள் இருப்பதை பார்த்திருப்போம். இந்த வழக்கு விசாரணையில் இத்தனை ட்விஸ்ட்டுகளா? என கற்பனை செய்யாத முடியாத அளவுக்கு கொடுத்து நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து இயக்குனர் ஞானவேல்.

இந்த காட்சி அந்த காட்சி போரடிக்கிறது என சொல்லிவிடாத அளவுக்கு காட்சிக்கு காட்சி கவனம் எடுத்து திரைக்கதை அமைத்து நம்மை கவர்ந்துள்ளார் இயக்குனர்.

லிஜா மோல், மணிகண்டன், ரஜிஷா, போலீஸ் ஏட்டு, விசாரணை கைதிகள், இளவரசு, கவுன்சிலர், எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ் வரை அனைவரையும் சிறப்பாக கேரக்டரில் வாழ வைத்துள்ளார் எனலாம்.

எந்த ஒரு நபரும் தன் தொழிலை காட்டி அடுத்தவடிர மிரட்ட மாட்டான். ஆனால் போலீஸ் மட்டும் அப்படி செய்வார்கள்…. ஹேய்.. யார்கிட்ட வச்சிக்கிற? நான் போலீஸ் என அதிகாரம் காட்டுபவர்கள் போலீஸ்.

அந்த அதிகார திமிரில் அவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. அதை அப்படியே தோலுரித்திக் காட்டியிருக்கிறார்கள். கற்பனை செய்யாத முடியாத அளவுக்கு ஒரு குற்றத்தை போலீஸ் ஜோடிக்கும் விதங்கள் நம்மை வியக்க வைக்கும்.

போலீஸ் லாயர் இருவரும் பாம்பு கீரி மாதிரிதான் என்றாலும் இருவரையும் இணைத்து ஒரு வழக்கை நியாயமாக முடித்து சிறப்பு சேர்த்துள்ளார். இந்த இரண்டு துறையால் மட்டுமே சமூகத்தை சிறப்பாக வாழ வைக்க முடியும் என்பதையும் ஆணித்தரமாக சொல்லியுள்ளார்.

ஆக.. இந்த ஜெய் பீம்.. கேடுகெட்ட போலீஸ்.. கெட்டிக்காரர் சந்TRUE எனலாம்.

Jai Bhim movie review and rating in Tamil

அரவாணியின் அந்நியன் அவதாரம்.; FILTER GOLD விமர்சனம் 3.25/5

அரவாணியின் அந்நியன் அவதாரம்.; FILTER GOLD விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன் : FILTER GOLD என்றால் வடிகட்டின தங்கம் என்று அர்த்தம்.

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சியிலேயே திருநங்கை விஜியை கொலை குற்றத்திற்காக புதுச்சேரி போலீஸ் கைது செய்கின்றனர். அப்போதும் காவல் துறையினரை தாக்குகிறார். அதிலிருந்தே திருநங்கை விஜியின் தைரியம் நமக்கு தெரிகிறது.

திருநங்கைகள் விஜி, டோரா, சாந்தி ஆகிய மூவரும் நெருங்கிய தோழிகள். இதில் டோரோ ஆசாரியின் மகன் ரமேஷ் என்பரை காதலிக்கிறார். சாந்தி விபச்சார தொழில் செய்கிறார்.

ஆசாரி தரும் (கொலை குற்றம்) அசைன்மெண்ட்களை தடயம் இல்லாமல் செய்கிறார் திருநங்கை விஜி. அதே சமயம் தன் இனத்துக்கு மக்களால் அல்லது காவல்துறையினரால் ஏற்பட்டால் அவர்களையும் போட்டுத்தள்ள தயங்கமாட்டாள்.

தன் திருநங்கை இனத்தவர்கள் 18 வயதிற்குள் உட்பட்டோரிடம் உடலுறவு வைத்துக் கொள்ள கூடாது என்பதையும் அறிவுறுத்தும் குணம் கொண்டவர் விஜி.

ஒருமுறை கவுன்சிலரின் 17 வயது மகனால் தன் தோழி கொல்லப்படுகிறார். முதலில் காரணம் தெரியாத விஜி அவனை தண்டிக்க மறுக்கிறார்.

ஆனால் காரணம் தெரிந்தபின் விஜி எடுக்கும் அவதாரமே இந்த பில்டர் கோல்டு படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தின் நாயகன் நாயகி எல்லாமே திருநங்கை விஜிதான் (படத்தில் மட்டுமே திருநங்கை) இவர் தான் படத்தின் இயக்குனரும் கூட. இவரது முழுப்பெயர் விஜயபாஸ்கர்.

திருநங்கைகள் பிச்சை எடுப்பதும் பாலியல் தொழில் செய்வதையும் பல படங்களில் பார்த்து இருப்போம். சிரித்து இருப்போம். ஆனால் இதில் தன் கேரக்டரால் விஜி என்ற விஜயபாஸ்கர் மிரட்டியிருக்கிறார். யப்பா… இனி திருநங்கைகள் பார்த்தால் கேலி செய்ய கூட பயப்படுவார்கள்.

புல்லட் பைக்கில் பறப்பதும்… கொலை செய்வதும்.. போலீசையே தாக்குவதும் என விஜி தன் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார். திருநங்கைக்கு ஏற்ப உடல் மொழியையும் கொடுத்திருப்பது சிறப்பு. (ஆனால் ஓவர் வன்முறை) இவருடன் படத்தில் பல திருநங்கைகள் நடித்துள்ளனர்.

சுகு கேரக்டரில் நடித்துள்ள வெற்றி என்ற 17 வயது இளைஞரை பார்த்தால் நிச்சயம் கோபம் வரும். அப்படியொரு நடிப்பை அவர் கொடுத்துள்ளார்.

இவர்களுடன் நடித்துள்ள ஆசாரி சிவஇளங்கோ மற்றும் கவுன்சிலர் நட்ராஜ் ஆகியோரின் நடிப்பும் நம்மை நிச்சயம் கவனிக்க வைக்கிறது.

திருநங்கை என்றாலும் அவளையும் காதலிக்கலாம் என ரமேஷ் (சாய் சதீஷ்) சொல்லும்போது பரிதாபம் ஏற்படுகிறது.

திருநங்கைகள் மொழியில் நிறைய கெட்ட வார்த்தைகள் வருவது சகஜம் தான். அதை என்னதான் சவுண்ட் ஆஃப் செய்து மறைத்தாலும் அது திரையில் வெளிப்படுவதை தவிர்த்திருக்கலாம். இது சென்சாரில் ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட படம் என்பதால் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் போல.

அதுபோல் படத்தில் வன்முறைக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை. ரத்தம் நம் மேல் தெறிப்பது போல ஒரு உணர்வு வருகிறது.

சின்ன பட்ஜெட் படம் என்பதால் ஆங்காங்கே மேக்கிங்கில் சில குறைகளை காண முடிகிறது. ஆனாலும் அதை பெரிதுப்படுத்த தேவையில்லை.

பரணிக்குமார் ஒளிப்பதிவும், ஹூமர் எழிலன் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. திருநங்கைகளின் திருவிழா களைக்கட்டி இருக்கிறது.

ஆர்.எம். நானு என்பவர் தயாரித்துள்ளார். எடிட்டிங் கிங் டேவிட்.

இந்த படத்திற்கு தமிழில் தலைப்பு வைத்திருக்கலாம். இன்னும் நிறைய ரசிகர்களிடம் செல்ல அது ஏற்றதாக இருந்திருக்கும்.

தமிழ் சினிமாவில் இதுவரையில் காட்டப்படாத திருநங்கைகளின் வாழ்வியல் பக்கத்தை நமக்கு காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஆக… திருநங்கைக்கு ஒரு பிரச்சினை என்றால் நான் அந்நியனாக வருவேன் என சவால் விடுகிறார் இந்த திருநங்கை விஜி என்ற விஜயபாஸ்கர்.

FILTER GOLD TAMIL REVIEW RATING

எவரையும் ஓவரா நம்பாதே..; அகடு விமர்சனம் 3.25/5

எவரையும் ஓவரா நம்பாதே..; அகடு விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன் : அகடு என்றால் பொல்லாங்கு என்று அர்த்தம்.

கதைக்களம்…

கொடைக்கானலுக்கு 4 இளைஞர்கள் சுற்றுலா செல்கின்றனர். அங்கு ஒரு காட்டேஜ்ஜில் தங்குகின்றனர்.

இவர்களுக்கு நேர் எதிரே உள்ள ஒரு காட்டேஜ்ஜில் சுற்றுலா வந்த டாக்டர் தம்பதியினர் அவர்களின் 12 வயது மகளுடன் தங்குகின்றனர்.

ஒரே நாளில் 4 இளைஞர்களுடன் நெருங்கி பழகுகிறாள் அந்த சிறுமி ஷாலினி மற்றும் டாக்டர் ஃபேமிலி.

இரவு சரக்கு பார்ட்டியில் 4 வாலிபர்களுடன் சரக்கடிகிறார் டாக்டர். அனைவரும் மதுபோதையில் உறங்கி விடுகின்றனர்.

மறுநாள் காலை 4 இளைஞர்களில் கார்த்திக் என்ற ஒருவனும் அந்த 12 வயது சிறுமியும் மாயமாகின்றனர். காணாமல் போனவர்களை இரு தரப்பிலும் தேடிகின்றனர். போலீசில் டாக்டர் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார்.

அவர்கள் எங்கே சென்றனர்.? என்ன நடந்தது.? போலீசார் கண்டு்பிடித்தார்களா.? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அஞ்சலி நாயர், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இன்னும் கொஞ்சம் சிரமம் எடுத்து நடித்திருக்கலாம்.

இதில் சார்பட்டா பரம்பரை புகழ் “டாடி” ஜான் விஜய் போலீசாக நடித்துள்ளார். மிகையில்லாத நடிப்பு.

வனத்துறை அதிகாரி நடிப்பு மிரட்டல். அவர்தான் காரணமோ? என பதைபதைக்க வைக்கிறார்.

புதுமுக இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார். க்ளைமாக்ஸில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து படத்தை காப்பாற்றி விட்டார்.

போதை பழக்கம் நட்பையும் கெடுக்கும். கணவன் மனைவி உறவையும் கெடுக்கும் என பாடம் நடத்தியிருக்கிறார்.

ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நண்பர்கள் பாடும் பாட்டு ரசிக்க வைக்கிறது. ஆட்டமும் போட வைக்கிறது.

பாடல் வரிகளை கபிலன் எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனித்திருக்கிறார். இரண்டுமே சிறப்பு சேர்த்துள்ளன.

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ் சிங்காரவேலு, சஞ்சீவ் இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.

ஆக அகடு… யாரை நம்பினாலும் அளவுக்கதிமாக நம்ப வேண்டாம் என அட்வைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் சுரேஷ்குமார்.

Agadu movie review and rating in Tamil

FIRST ON NET மேரேஜ் பிசினஸ் கலாட்டா… ஓ மணப்பெண்ணே விமர்சனம் 3.75/5

FIRST ON NET மேரேஜ் பிசினஸ் கலாட்டா… ஓ மணப்பெண்ணே விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா நடிப்பில் தருண் பாஸ்கர் இயக்கிய பெல்லி சூப்புலுவை அப்படியே ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுந்தர்.

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சியிலேயே…. பிரியா பவானி சங்கர் வீட்டுக்கு பெண் பார்க்க செல்கிறார் ஹரீஷ் கல்யாண். அப்போது எதிர்பாரா விதமாக இருவரும் கதவு பிரச்சினை உள்ள ஒரு அறையில் மாட்டிக் கொள்கின்றனர்.

கதவை திறக்க ஆசாரி வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. பிரியாவுக்கு கல்யாணமே வேண்டாம். ஆஸ்திரேலியா போகவேண்டும் என்பதுதான் முடிவு. ஹரிஷ் வேலை வெட்டி இல்லாதவர்.

இந்த சூழ்நிலையில் இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள்?

கதவை திறந்தபின் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்களா? அப்படி என்ன பேசினார்கள்? ஹரிஷ் வேலைக்கு சென்றாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஹரிஷ் கல்யாண் ஹீரோ என்றாலும் அவருக்கு மிகவும் சாதாரணமான ஓப்பனிங். ஆனால் பிரியாவுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்து ஒரு இன்ட்ரோ.

இவர்கள் சந்திக்கும் ஆரம்ப காட்சியை க்ளைமாக்சில் காட்டியது இயக்குனரின் ரொமான்ஸ் டச். சூப்பர்.

தமிழ் சினிமாவின் தண்டச் சோறு கேரக்டரில் கொஞ்சம் காலம் தனுஷ் இருந்தார். அவரின் லெவல் இப்போது எகிறி விட்டது. அந்த தண்டச்சோறு கேரக்டருக்கு இப்போது ஹரிஷ் பொருத்தமாக இருக்கிறார். வழக்கமாக இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன். அதை பெண்களும் ரசிக்கும் வகையில் சிறப்பாக செய்துள்ளார். செமயாய் கஷ்டப்படுவேங்க என சொல்லும் போதும் பிரியாவை கலாய்க்கும்போது கெத்தாக இருக்கிறார்.

ஹீரோவை மிஞ்சும் கேரக்டர் பிரியாவுக்கு. ஹோம்லியாக இருக்கிறார். மிகையில்லாத நடிப்பை கொடுத்துள்ளார் பிரியா.

Priya Bhavani Shankar latest photos

ஒரு சில இடங்களில் கொஞ்சம் டல்லாக தெரிகிறார் பிரியா. முக்கியமாக அஷ்வினுடன் ட்ராக் புட் பற்றி பேசும் காட்சியில். மற்ற காட்சிகளில் பிரியா ரசிகர்களுக்கு பிரியமான ப்ரியா தான்.

குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் ஆரம்ப காட்சியே அசத்தல்தான். கொஞ்சம் நேரமே என்றாலும் பெண்களை கவர்ந்துவிடுவார்.

ஹரிஷ் அப்பாவாக வேனு அரவிந்த். நல்ல மிகையில்லாத நடிப்பு. அதுபோல ஹரிஷின் அம்மா பாட்டி ஆகியோரின் நடிப்பும் நம் கவனம் ஈர்க்கும்.

ஹரிஷின் நண்பர்கள் அன்பு. இருவரும் படத்தின் கதையோட்டத்துக்கு தேவையான காமெடியை அள்ளி அளவாக தெளித்திருக்கிறார்கள்.

ப்ரியாவின் கண்டிப்பான அப்பாவும் நம்மை ரசிக்க வைக்கிறார்.

டெக்னீசியன்கள்..

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசையும் படத்தை ரசிக்க வைக்க உதவியுள்ளது.

அனிருத் மற்றும் ஷாஷா திருப்பதி பாடிய ‘போதை கணமே…’ இனி காதலர்களின் காலர் டியூனாக மாறும்.

காதல் ரொமான்ஸ் படம் என்றால் எந்த ஒளிப்பதிவாளர் என்றாலும் அதை ரசிக்க வைக்க வகையில் சிறப்பாக படம் பிடித்து விடுகின்றனர்.

இதிலும் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் அதை சிறப்பாக செய்துள்ளார். அவரது ஒளிப்பதிவில் காட்சிகள் மிக சிறப்பு. எடிட்டர் கிருபாகரனும் தன் பங்கை நிறைவாக செய்துள்ளார். எந்த காட்சிகளும் பெரிதாக போரடிக்கவில்லை.

இயக்கம் பற்றிய அலசல்…

பெண் பார்க்கும் படலத்தை வித்தியாசமாக புதுமையாக சொன்ன விதத்தில் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுந்தர்..

இப்படத்தின் இடைவேளை வரை ஹரிஷ் கல்யாணும் பிரியாவும் தங்களுக்கு ஏற்பட்ட காதல் கதைகளை மாறிமாறி சொல்வது கூட ஒரு விதமான சுவாரசியத்தை ஏற்படுத்தை நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது.

வரதட்சணையாக கொடுக்கும் பணத்தை வைத்து அதை வங்கியில் போட்டு வாழ்க்கையை ஓட்டலாம் என்ற ஹரிஷின் கணக்கு இன்றைய வாழ்க்கைக்கு ஒத்துவராது. இன்றைய இளைஞர்களுக்கு அது தவறான முன் உதாரணம்.

அதுமட்டுமில்லாமல் வேலைக்கே செல்லாத ஒருவருக்கு எப்படி வரதட்சணை நிறைய கொடுப்பார்கள். அதை டைரக்டர் தவிர்த்து வேறுமாதிரியாக காட்சிகளை வைத்திருக்கலாம்.

அதன்பின் வைத்த இண்டர்வெல் ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

ஆனால் 2ஆம் பாதியில் ஹரீஷ் மற்றும் பிரியாவின் காதலை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம். அவர்களுக்கு காதல் எப்போது ஏற்படுகிறது? என்பதற்காக காரணங்கள் இல்லை. ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் பேசி காதல் வந்துவிட்டதா? என்பதுதான் கொஞ்சம் நெருடல்.

ஆனால் இது ரீமேக் படம் என்பதால் அதை அப்படியே சுட்டுவிட்டார் போல இயக்குனர்.

ஆக இந்த.. ஓ மணப்பெண்ணே… மேரேஜ் பிசினஸ் கலாட்டா

Oh Manapenne movie review and rating in Tamil

நாம் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும்.; ‘விநோதய சித்தம்’ விமர்சனம் 4/5

நாம் இல்லாவிட்டாலும் எல்லாம் நடக்கும்.; ‘விநோதய சித்தம்’ விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, முனிஸ்காநத், தீபக், ஜெய பிரகாஷ், ஹரிகிருஷ்ணன், அசோக் மற்றும் பலர்.

இசை – சத்யா சி
இயக்கம் – சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு – ஏகாம்பரம்
படத்தொகுப்பு – எ.எல். ரமேஷ்.
தயாரிப்பு – அபிராமி மீடியா ஒர்க்ஸ்.

ZEE5 ஓடிடி ரிலீஸ் : 13 -10- 2021

ஒன் லைன்…

ஒரு குடும்பமாகட்டும்… ஒரு ஊராகட்டும்… ஒரு நிறுவனமாகட்டும்… ஒரு நாடாகட்டும்.. ஒரு கட்சியாகட்டும்… நாம் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என நினைக்கும் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்..

எவர் இல்லாவிட்டாலும் எல்லாமே நடக்கும். ஆணவத்தில் ஆடக்கூடாது என்பதே இப்படத்தின் கரு.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்திருக்கும் படம்.

கதைக்களம்…

பிரபலமான நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர் பரசுராம் (தம்பி ராமையா).

தன் வீடு முதல் தன் ஆபிஸ் வரை எல்லாமே தன் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது என்ற நினைப்பு இவருக்கு. நம் பேச்சுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நிற்க வேண்டும் என்ற எண்ணமும் இவருக்குண்டு.

ஒரு சூழ்நிலையில் அவசரமாக செல்லும்போது ஒரு கோர விபத்தை சந்திக்கிறார் பரசுராம்.

அதில் படுகாயமடைந்த அவரின் உயிர் மெல்ல மெல்ல பிரிகிறது..

அப்போது அந்த விண்ணுலகத்தில் காலத்தை மனிதரூபத்தில் (சமுத்திரக்கனி) சந்திக்கிறார்.

தான் இல்லையென்றால் ஆபிஸ் & வீடு எதுவும் இயங்காது. எனவே தான் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்க கால அவகாசம் தருமாறு காலத்திடம் கேட்கிறார்.

அதுவரை தம்பி ராமையாவுடன் தானும் கூடவே இருப்பதாகவும் சொல்லி அவகாசம் தருகிறார் சமுத்திரக்கனி்.

அதன்படி 90 நாட்கள் ( 3 மாதங்கள்) அவகாசம் கொடுக்கப்படுகிறது.

விபத்தில் மீண்டு கண்விழிக்கும் தம்பி ராமையா அந்த 3 மாதத்தில் என்ன செய்தார்.? அவருடைய கடமைகளை செய்து முடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

காமெடியாக இருந்தாலும் குணசித்திர கேரக்டர் என்றாலும் அதை சிறப்பாக செய்பவர் தம்பி ராமையா.

இந்த படத்தில் அவர்தான் ஹீரோ. சும்மா விடுவாரா..? அடுத்த தேசிய விருதுக்கு முன்பதிவு செய்துவிட்டார் தம்பி ராமையா எனலாம்.

சிடுசிடுவென கண்டிப்பாக பேசுவது முதல் கால தேவனிடம் கெஞ்சுவது முதல் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.

மீண்டும் மண்ணில் வாழ ஆரம்பித்ததும் அவரிடம் நிறைய மாற்றங்கள்.. அதை உணர்ந்து நடித்திருக்கிறார்.

தம்பி ராமையாவின் மகனாக தீபக், மகளாக சஞ்சிதா ஷெட்டி, நண்பனாக முனிஷ்காந்த், தம்பி ராமையாவின் மனைவியாக ஸ்ரீரஞ்சனி…. இப்படி அனைவருமே தங்கள் நடிப்பில் கச்சிதம்.

அதில் ஸ்ரீரஞ்சனி அசத்தலான அழகான அருமையான அம்மா. அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறையின்றி நடித்திருக்கின்றனர்.

டெக்னீஷியன்கள்…

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சத்யாவின் இசையின் படத்துக்கு சிறப்பு. தேவைக்கு ஏற்ப சரியாகக் கொடுத்திருக்கின்றனர்.

வசனங்கள் ஒவ்வொன்றும் மிகவும் ஷார்ப். வசனங்கள் தான் படத்தை பெரிதும் தாங்கி நிற்கின்றன.

இது ஒரு நாடகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை என்பதுபோல் தோன்றுகிறது. அடிக்கடி சீரியல் போல ஒரு நாடகத்தன்மை எட்டிப் பார்க்கிறது. தவிர்த்திருக்கலாம் இயக்குனர் சமுத்திரக்கனி.

ஆனால் படத்தின் நீளம் குறைவு (ஒன்றே முக்கால் மணி நேரம்) என்பதால் நாடகத்தனம் பெரிதாக தெரியவில்லை.

மலையாள சினிமா பாணியில் இப்படியொரு சுவாரஸ்யமான கதையைத் தேர்வு செய்த சமுத்திரக்கனியை நிச்சயம் பூங்கொத்து கொடுத்து பாராட்ட வேண்டும்.

கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையில் மற்றொருவர் இல்லாமல் போனாலும் எல்லாம் தானாக நடக்கும் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி.

ஆக இந்த விநோதய சித்தம்… வித்தியாசமான சிந்தனை

Vinodhaya Sitham movie review and rating in Tamil

உயிர் மூச்சே… உடன்பிறப்பே விமர்சனம் 3.75/5

உயிர் மூச்சே… உடன்பிறப்பே விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன் லைன்…

‘கத்துக்குட்டி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை சித்தரித்து இருந்தார் இரா.சரவணன். இந்த உடன்பிறப்பே அவரின் இரண்டாவது படமாக வந்துள்ளது.

பாசமலர்.. தொடங்கி கிழக்குச் சீமையிலே… நம்ம வீட்டு பிள்ளை ’வரை நாம் பார்த்த அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட்தான் இப்படத்தின் உயிர்நாடி.

கதைக்களம்…

அண்ணன் சசிகுமார் & தங்கை ஜோதிகா. தங்கை கணவர் சமுத்திரக்கனி.

நேர்மையான அடிதடி என்றால் சசிகுமார் ரெடி. நேர்மையான அட்வைஸ் என்றால் சமுத்திரக்கனி ரெடி.

தன் மச்சான் அடாவடி பேர்வழி. அதுவே ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தின் பிரிவுக்கும் காரணமாகிறது. எனவே 15 ஆண்டுகளாக பாசப் போராட்டம் நடத்துகிறார் ஜோதிகா.

15 வருடங்கள் அப்படி என்னதான் பிரச்சினை? மீண்டும் இந்த பாசமலர்கள் இணைந்தார்களா? இல்லையா.? என்பதே படத்தின் மீதிக்கதை…

கேரக்டர்கள்…

மாதங்கி கேரக்டரில் ஜோதியாய் ஜொலிக்கிறார் ஜோதிகா.

முதல் பாதியில் வசனங்களில் புயலாய் மிரட்டும் ஜோதிகா, இரண்டாம் பாதியில் மௌனமாகி தென்றலாய் தெரிகிறார்.

தன்னுடைய 50வது படத்தை தனக்கு ஏற்ற மாதிரி அருமையாக தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜோ.

சசிகுமாருக்கே உரித்தான வேஷ்டி சட்டை முறுக்குமீசை என கம்பீரமாக வருகிறார் தோற்றத்திலும் நடிப்பிலும்..

நேர்மையான மனிதராக சமுத்திரக்கனி. தனது அட்வைஸ் கேரக்டரை அட்வைஸ் செய்யாத அளவுக்கு செய்திருக்கிறார்.

ஜோ சசி சமு.. மூவர் பேசும் வசனங்களும் இவர்களின் கேரக்டர்களும் படத்தின் ப்ளஸ்.

இந்த குடும்ப பாச பயணத்தில் காமெடி ட்ராக் போட்டு அசத்தி இருக்கிறார் சூரி. சில இடங்களில் போரடிக்கிறது.

வித்தியாசமான அதே சமயம் கவனம் ஈர்க்கும் கேரக்டரில் கலையரசன்.

ஆடுகளம் நரேன், தீபா, வேல்ராஜ் என அனைவரும் தங்கள் கேரக்டரில் நேர்த்தி.

சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கிறார். அமைதியான அழகான அன்பான மனைவி.. என மிகையில்லாத நடிப்பில் அளவாக நடித்திருக்கிறார் சிஜா.

காவல்துறை ஆய்வாளராக வேல்ராஜ், சசிகுமார் மகனாக சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ் என அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

இமானின் இசை படத்திற்கு பலம்.. பாடல்கள் அனைத்தையும் கேட்கும் ரகத்தில் கொடுப்பது இமான் வழக்கம்தானே.

வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களும் காட்சிகளும் கண்களுக்கும் மனதுக்கும் இதமளிக்கிறது.

ரூபனின் எடிட்டிங்கில் காட்சிகள் செம ஷார்ப்..

உடன்பிறப்புகளின் பாசப் போராட்டம், ஆழ்துளை கிணறு, கடன் தவணை கட்ட முடியாத விவசாயி வாழ்க்கை போராட்டம், மார்வாடிக்கு வட்டி பாடம் ஆகிய சமூக அக்கறைகளை இந்த சென்டிமெண்ட் சுவையில் கலந்துள்ளார் இயக்குநர் இரா.சரவணன்.

பாசமான கதையை பக்குவமாக பரிமாறுவதில் இயக்குனர் இரா. சரவணன் வென்றுவிட்டார்.

ஆக இந்த உடன்பிறப்பே… உயிர்மூச்சே

Jyothika 50th movie Udanpirappe review rating

More Articles
Follows