அன்யாஸ் டுட்டோரியல் விமர்சனம் 2/5

அன்யாஸ் டுட்டோரியல் விமர்சனம் 2/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஒரு வீட்டிற்குள் மாட்டிக்கொண்ட ஒரு இளம் பெண்ணின் கதை. அந்த வீட்டிற்குள் அவரை சுற்றி நடக்கும் அமானுஷ்ய சக்திகளின் கதை தான் இப்படம்.

7 அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர் ஆஹா (Aha) ஓடிடி.யில் பார்க்கக் கிடைக்கிறது. #AnyasTutorialOnAHA Screaming from July 1st

கதைக்களம்…

ரெஜினா கஸன்ட்ராவும் நிவேதிதா சதீஷும் அக்கா தங்கை.

ஒரு கட்டத்தில் தன் அம்மாவிடமும், அக்கா ரெஜினாவிடமும் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி தனியாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார் நிவேதிதா.

அப்போது கொரோன லாக்டவுன் காலகட்டம் ஆரம்பிக்கிறது. இதனால் வீட்டை விட்டு எவரும் வெளியே வர முடியாத சூழ்நிலை.

அந்த சூழ்நிலையில் அக்காவும் தங்கையும் வீடியோ காலில் பேசிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதனடையில் தங்கை நிவேதிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்யா டுடோரியல் என்ற ஒரு பக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அதில் அழகு கலை குறிப்புகளை தன் பார்வையாளர்களுக்கு சொல்லி வருகிறார்.

அப்போது அவர் தங்கியிருக்கும் வீட்டில் பல அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் உள்ளது.

இதனை வீடியோ காலில் பார்க்கும் அக்கா ரெஜினா என்ன செய்தார்? தன் தங்கையை எப்படி காப்பாற்றினார்? என்பதை படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

வீடியோ காலில் 20 வார்த்தையே ரெஜினா பேசினால் அதில் பத்து வார்த்தை FCUK என்பதாகவே உள்ளது. ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்களுக்கு சென்சார் இல்லை என்பதால் எத்தனை முறை வேண்டுமானாலும் கெட்ட வார்த்தை பயன்படுத்தலாம் என்பது விதிமுறையா என்னவோ.? அந்த வார்த்தைகள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது.. மற்றபடி வழக்கம்போல ரெஜினா வருகிறார்.

மாடர்ன் மங்கையாக நிவேதிதா சதீஷ். சில நேரங்களில் பேய்களே பயன்படுத்தும் அளவிற்கு அரைக்கால் டவுசரில் வந்து போகிறார்.

மற்றபடி இன்னும் சில கேரக்டர்கள் வந்து போகின்றன.

டெக்னீஷியன்கள்..

பின்னணி இசை சில இடங்களில் மிரட்டுகிறது. கலை இயக்குநரின் மெனக்கெடல் தொடருக்கு பலம் சேர்த்துள்ளது.

ஒரே வீட்டிற்குள் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவாளர் அதை உணர்ந்து தன் பணியை திறம்பட செய்துள்ளார்.

இரு பெண்களை கதையின் நாயகிகளாக்கி தொடரை இயக்கியிருக்கிறார் ஒரு பெண் இயக்குநர் பல்லவி கங்கிரெட்டி.

முதல் பாகத்தில் காட்சிகள் ஆமை வேகத்தில் நகருவதால் நமக்கு சோதனைதான். இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியுள்ளது.

இருந்தாலும் சொல்ல வந்த ஒரு விஷயத்தை சுற்றி வளைக்காமல் சொல்லி இருந்தால் படத்தை ரசிகர்கள் ரசித்திருப்பார்கள்.

ஆக அன்யாஸ் டுடோரியல்… தேர்ச்சிக்காக காத்திருக்கும் மாணவர்கள்..

Anya’s Tutorial movie review in tamil

டி ப்ளாக் விமர்சனம்.; சிறுத்தைப் பெண்கள்

டி ப்ளாக் விமர்சனம்.; சிறுத்தைப் பெண்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் நடக்கும் தொடர் கொலைகளே இப்படத்தின் ஒன் லைன்.

கதைக்களம்…

கோவை பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓர் இன்ஜினியரிங் கல்லூரி செயல்படுகிறது. அந்த கல்லூரி பெண்கள் விடுதியில் ஏகப்பட்ட நிபந்தனைகள்.

மாலை ஆறு மணிக்கு மேல் மாணவிகள் வெளியே வரக்கூடாது.. 9 மணிக்கு மேல் மொட்டை மாடிக்கு செல்லக்கூடாது. அறையில் விளக்குகள் எரியக்கூடாது என ஏகப்பட்ட கண்டிசன்கள்.

இதை மீறி செயல்படும் பல மாணவிகள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு காரணம் சிறுத்தை தான் என கல்லூரி மேனேஜ்மென்ட் சொல்கிறது.

பெண்களை மட்டும் குறி பார்த்து ஒரே மாதிரி சிறுத்தை கொலை செய்கிறதா.? என்ற கேள்வி நாயகன் மனதில் தோன்றுகிறது.

அப்படி என்றால் கொலையாளி யார்? அதற்கான காரணம் என்ன? பின்னணி என்ன என்பதே படத்தின் கதை.

கேரக்டர்கள்…

காலேஜ் பையனாக ஸ்மார்ட்டாக வருகிறார் அருள்நிதி. வழக்கம் போல எங்கும் அலட்டி கொள்ளாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அருளின் நண்பர்களாக ஆதித்யா கதிரும், படத்தின் இயக்குநர் விஜய்யும் நடித்துள்ளனர். கதிரின் காமெடி சில இடங்களில் ஓகே.

நாயகியாக வரும் அவந்திகா மிஸ்ரா அழகு. நடிக்க பெரிதாக வாய்ப்பில்லை போல. இவரின் தோழியாக வரும் பெண்ணுக்கு உருண்ட குண்டு விழிகள்.. அதுவே திகில் காட்சிகளில் பயத்தை கொடுக்கிறது.

வில்லனாக வருபவர் ஒரு சைக்கோ என காட்டப்படுகிறார். அதற்கு சில பிளாஷ்பேக் காட்சிகளை வைத்துள்ளனர்.

பிரின்சிபால் தலைவாசல் விஜய், செக்யூரிட்டி ரமேஷ் கண்ணா, ஹாஸ்டல் வார்டன் உமா ரியாஸ் என சீனியர் ஸ்டார்கள் படத்தில் உள்ளனர். இதில் ரமேஷ் கண்ணாவின் நடிப்பு நம்மை கலங்க வைக்கிறது.

‘வாம்மா மின்னல்’ என்ற வேகத்தில் வருறார் கரு.பழனியப்பன். இவரால் படத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்து இருந்தால் அந்த ஒரு காட்சியோடு போய்விடுகிறார். ஆனால் தனக்கே உரித்தான நக்கலுடன் காடுகளை அழித்த சாமியார்களை கிண்டல் செய்துவிட்டு செல்கிறார்.

டெக்னீஷியன்கள்..

கோயம்புத்தூர் பகுதிகளில் பல கல்லூரிகள் அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது தான் அது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

இந்த படத்தைப் பார்க்கும் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த படம் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய பயத்தை ஏற்படுத்தும்.

ஒளிப்பதிவு ஓகே ரகம். கௌசிக் கிரிஷின் பின்னணி இசை சில இடங்களில் திகிலைக் கூட்டுகிறது.

முதல்பாதியில் வருகை பதிவேடில் கையெழுத்து போட ஹீரோ ஒரு காட்சியில் ஹீரோயின் உதவியை நாடுகிறார். ஆனால் அதன் பிறகு அது சம்பந்தமான காட்சிகள் எதுவுமே இல்லை. இந்த காட்சிகளை எடிட்டர் கணேஷ் சிவா வெட்டி இருக்கலாம். எடிட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கல்லூரிக்கு நடக்கும் திகில் கதையை சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர். யூட்யூப் தளங்களில் பிரபலமாகி இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார் இயக்குனராக விஜயகுமார் ராஜேந்திரன். (எருமசாணி விஜய்)

அவருடைய முதல் முயற்சிக்கு நாம் வரவேற்பு கொடுக்கலாம். ஆனால் அதே சமயத்தில் திரைக்கதையை இன்னும் சுவாரசியம் ஆக்கி இருக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சியில் கல்லூரி பெண்களே சிங்கப்பெண்களாக சாரி சாரி சிறுத்தைப் பெண்களாக மாறி அதகளம் செய்து ஆக்ஷனில் இறங்கியுள்ளது சிறப்பு.

ஆக டி ப்ளாக்.. சிறுத்தைப் பெண்கள்

D Block movie review in Tamil

ராக்கெட்ரி விமர்சனம் 4.25/5… இந்தியாவின் நம்பிக்கை

ராக்கெட்ரி விமர்சனம் 4.25/5… இந்தியாவின் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராக்கெட்ரி விமர்சனம் : மாதவன் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி விமர்சனம் இதோ

ஒன்லைன்…

இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய படம் “ராக்கெட்ரி.

இப்படத்தினை எழுதி இயக்கி நம்பி நாராயணனாக நடித்திருக்கிறார் நடிகர் மாதவன்.

கதைக்களம்…

தன் இளம்வயதிலேயே படிப்பிலும் திறமையாளராக இருக்கிறார் மாதவன் (நம்பி நாராயணன்). இவர் கேரளாவில் வசிக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்து, விஞ்ஞானியாக வேண்டும் என நினைக்கிறார்.

அப்போது அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பு நம்பிக்கு கிடைக்கிறது.

பஞ்சாங்கப்படி இந்தியாவின் விண்கல சாதனை.; சர்ச்சையில் சிக்கிய மாதவன் மீண்டு(ம்) விளக்கம்

நம்பியின் திறமையை கண்டு வியந்த அமெரிக்கர்கள், கோடிக்கணக்கில் சம்பளம் தருகிறோம். நாசாவில் பணியாற்ற அழைக்கின்றனர்.

ஆனால் இந்தியராக இந்தியாவில் பணியாற்ற விரும்பி இஸ்ரோவில் இணைகிறார்.

அப்போது இவரின் முயற்சிகளை தோற்கடிக்க சிலரின் தீய எண்ணத்தால் இவருக்கு கெட்ட பெயரை உருவாக்க திட்டமிடுகின்றனர்.

அதன்படி கேரளாவில் நடைபெற்ற ஒரு சின்ன பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கி நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கை பதிவிடுகின்றனர்.

இதனையடுத்து கேரளா போலீசார் அவரை கைது செய்து கொடுமைப்படுத்துகின்றனர். தேச துரோகத்திற்கு பொறுப்பேற்க துன்புறுத்துகின்றனர். இஸ்ரோ கூட நம்பிக்கு துணையாக வரவில்லை.

இதன்பின்னர் என்ன ஆனது? தன் மீது சுமத்தப்பட்ட வழக்கை எப்படி எதிர் கொண்டார் நம்பி என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நம்பி நாராயணன் கேரக்டருக்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துள்ளார் மாதவன். அந்த வரலாறை படித்து அதன் தன்மையை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார் மாதவன். உடம்பை ஏற்றி இறக்கி பாடி லாங்குவேஜ்ஜிலும் தன்னை வேறுப்படுத்தி தன்னை முழுமையான நடிகராக வெளிப்படுத்தியுள்ளார்.

போலீஸின் கொடுமையான விசாரணையில் நம்மை நிஜமாகவே கண் கலங்க வைத்துவிட்டார் மாதவன்.

மாதவனின் மனைவியான சிம்ரன். அவரும் தன் அனுபவ நடிப்பில் நம்மை கவர்ந்துள்ளார். மேலும் மாதவனின் உடன் நடித்த விஞ்ஞானிகள் அனைவரும் கச்சிதம். ஆங்கிலேயர்களும் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளனர்.

மாதவனை டிவி பேட்டி காண்பவராக சூர்யா நடித்துள்ளார். அவர் நம்பி நாராயணனின் காலில் விழும்போது நமக்கும் விழத் தோன்றும்.

அப்போது நம்பி பேசும் வசனங்கள் பொய் வழக்கு போடும் நீதிமன்றத்திற்கும் போலீசுக்கும் சாட்டையடி. இனியாவது அவர்கள் திருந்தனும்…

ராக்கெட் பற்றி நாம் அறியாத விஷயங்களை தெளிவாக கொடுத்துள்ளது படக்குழு. ஏபிஜே அப்துல் கலாமாக நடித்தவரும் சிறப்பு.

உலக விஞ்ஞானத்தில் இந்தியாவின் பட்கு என்ன? எப்படி எல்லாம் நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுகிறோம்? என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

சிர்ஷா ரே’வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. ராக்கெட்டை பல கோணங்களில் காண்பித்து நம்மை அதனுடன் பயணிக்க வைத்துவிட்டார்.

சாம் சி எஸ் பின்னணி இசை அசத்தல். நம்மை ராக்கெட்டுடன் ஜெட் வேகத்தில் பயணிக்க வைக்கிறது. பின்னணி இசை மிரட்டல்.

ராக்கெட்ரி படத்தை இயக்கவும் தயாரிக்கவும் முன்வந்துள்ள மாதவனை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

ஆக ராக்கெட்ரி.. இந்தியாவின் நம்பிக்கை எனலாம்.

Rocketry movie review in tamil

யானை விமர்சனம் 3.25/5.. ஹரி டெம்ப்ளேட்டில் அருண் விஜய்

யானை விமர்சனம் 3.25/5.. ஹரி டெம்ப்ளேட்டில் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யானை விமர்சனம் : ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான யானை விமர்சனம் இதோ

ஒன்லைன்…

மணிரத்னம் ஷங்கர் விக்ரமன் கௌதம் மேனன் மிஷ்கின் பாலா ரஞ்சித் என ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு பாணி இருக்கும்… ஒரு டெம்ப்ளேட் இருக்கும்.. அதுபோல..

டைரக்டர் ஹரி இயக்கிய பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஐயா சாமி அருள் சிங்கம் வேல் பூஜை வேங்கை இப்படி பல படங்கள்.. இந்த படங்களில் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வச்சிருப்பாரு..

இரண்டு குடும்பத்திற்கு தீராத பகை இருக்கும்.. இதில் ஹீரோ குடும்பம் பெரிய கூட்டு குடும்பமாக இருக்கும்.

கண்டிப்பாக ஹீரோயின் ஒத்த ஜடை போட்டு இருப்பார்.. 4-5 சுமோ ஜிப்புகள் இருக்கும்.. வெட்டுக்குத்து அருவா சண்டை இருக்கும்.. குடும்ப செண்டிமெண்ட் இருக்கும்.. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள்.. அதிரடி பஞ்சு வசனங்கள் இருக்கும். இதுதான் ஹரி படத்தின் டெம்ப்ளேட்..

நாம் மேலே சொன்னவற்றில் ஒன்றும் கூட குறையாத டெம்ப்ளேட்டில் யானை படத்தை தன் அசூர பலத்துடன் தன் மச்சான் அருண் விஜய்யுடன் இணைந்து கொடுத்துள்ளார் ஹரி.

இந்த திரைக்கதையில் சமுத்திரக்கனி-யின் தம்பியாக வருகிறார் அருண் விஜய்.

ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியின் மகள் அம்மு அபிராமி மூலம் ஒரு காதல் பிரச்சினை வருகிறது.

அதற்கு சித்தப்பா அருண் விஜய் துணை போகிறார். இதனால் அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.

மேலும் வில்லன் கொடுக்கும் டார்ச்சர் தொல்லைகளை ஹீரோ தன் சாமர்த்தியத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் எப்படி வென்றார் என்பதை படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்..

கம்பீரமான தோற்றத்தில் அருண் விஜய் அசால்டாக அசர அசர அடித்திருக்கிறார். ரொமான்ஸ் சென்டிமென்ட் ஆக்ஷன் என தெறிக்க விட்டுள்ளார். ஒரு பக்கம் வேட்டி சட்டை என மிரட்டினாலும் மறுபக்கம் பேண்ட் ஷர்ட்டிலும் அசத்தலாக அருண் விஜய்.

வழக்கம்போல ஹரி பட நாயகிகளில் வருபவராக ஒத்த ஜடையில் வருகிறார் பிரியா பவானி சங்கர்.

தன் காதலனே தன்னை சந்தேகம் படும் காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் சிறப்பு. கொடுத்த கேரக்டரில் அழுத்தமான பதிவை கொடுத்துள்ளார் பிரியா.

இதில் யோகி பாபு நடிப்பை நாம் பாராட்ட வேண்டும். இரண்டு மூன்று காட்சிகளில் நம்மை வாய்விட்டு சிரிக்க வைத்தார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை சிறிது கண் கலங்கவும் வைத்து விட்டார் யோகி.

அம்மு அபிராமி நடிப்பு கச்சிதம். தன் சித்தப்பாவை பார்த்த பின்…” ரவி அப்பா.. ரவி அப்பா” என்று அவர் அழும் பொழுது நம்மையும் கண் கலங்க வைத்து விட்டார்.

இவருடன் ராதிகா சமுத்திரகனி தலைவாசல் விஜய் போஸ் வெங்கட் ஐஸ்வர்யா இமான் அண்ணாச்சி மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட அனைவரும் கச்சிதமான சிறப்பான தேர்வு.

கேஜிஎப் வில்லன் ராமச்சந்திர ராஜூக்கு இந்த படத்தில் நல்லதொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவர் கொஞ்சம் மிரட்டி இருக்கலாம் என தோன்றுகிறது. காரணம் அவர் கிராமத்து வேடத்மிற்கு பொருந்தவில்லை.

டெக்னீஷியன்கள்…

ஜிவி பிரகாஷின் பின்னணி இசையில் காட்சிகளில் அனல் பறக்கிறது. மேலும் வேல்முருகன் பாடியுள்ள இரண்டு பாடல்கள் நம்மை தாளம் போட வைக்கின்றன. கிராமத்து மண்வாசனைக்கேற்ற வகையில் இசையமைத்து கொடுத்துள்ளார் ஜிவி பிரகாஷ்.

கோபிநாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலத்தையும் வேகத்தையும்
கொடுத்துள்ளது.

ஆனால் எடிட்டர் தான் நம்மை கொஞ்சம் சோதித்து விட்டார். அருண் விஜய் பெரிய நீண்ட வசனமாக பஞ்சு வசனங்களை பேசுகிறார்.. அப்பாடா படம் முடிஞ்சிட்டு என்று நாம் நினைக்கையில் மீண்டும் சில ட்விஸ்ட்டுகளை வைத்து படத்தின் நீளத்தை கூட்டி உள்ளது நம் பொறுமையை சோதிக்கிறது.

அருண் விஜய்யின் காதலி கிறிஸ்தவ பெண்ணாகவும் அம்மு அபிராமியின் காதலன் முஸ்லிம் பையனாக காட்டியிருப்பது சிறப்பு.

இதன் மூலமாக மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் காதல் கலப்பு திருமணத்தை காட்சிப்படுத்தி நம் தேச ஒற்றுமை காட்டியுள்ளார் ஹரி.

அதுபோல ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்துள்ளனர்.

சாமி சிங்கம் படங்களைப் போல ஜெட் வேகம் இல்லை என்றாலும் வேங்கை படத்தை விட விவேகம் காட்டியிருப்பது இந்த யானை படத்தின் பலம்.

ஆக… ஹரி டெம்ப்ளேட்டில் அருண்விஜய்

Yaanai movie review in Tamil

பட்டாம் பூச்சி விமர்சனம்.; உயர பறக்கிறதா.? ஊர்ந்து செல்கிறதா.?

பட்டாம் பூச்சி விமர்சனம்.; உயர பறக்கிறதா.? ஊர்ந்து செல்கிறதா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இது நாள் வரை நாம் ஹீரோவாக பார்த்து வந்த ஜெய் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சுந்தர் சி கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஹனி ரோஸ் நாயகியாக நடித்துள்ளார்.

ஒன்லைன்…

ஒரு சைக்கோ பல கொலைகளை செய்கிறார். எல்லா கொலைகளுக்கும் ஒரே ஒற்றுமை உள்ளது. அந்த ஒற்றுமை தான் பட்டாம்பூச்சி. தான் செய்த கொலைகளை ஓவியமாக வரைந்து அதனருகில் பட்டாம்பூச்சி என்ற தன் முத்திரையை பதித்து செல்வது வழக்கம்.

கதைக்களம்…

1980-களில் கதை நடக்கிறது.

தூக்கு தண்டனை கைதியான ஜெய்யிடம் கடைசி ஆசை என்ன? என கேட்கிறார்கள்.

உடனே அவர் என்னைப்பற்றி எழுதிய ரிப்போர்டரை பார்க்க வேண்டும் என்கிறார்.

உடனே அந்த ரிப்போர்டர் ஹனி ரோஸ் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்படுகிறார்.

அப்போது அவரது கடைசி ஆசையாக ஒரு உண்மையை கூறுகிறார்.. தான் செய்யாத கொலைக்காக சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் ஆனால் தான் ஏழு கொலைகளை செய்து இருப்பதாகவும் கூறுகிறார்.

எனவே மீண்டும் போலீஸ் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. 30 நாட்களுக்குள் இது தொடர்பான ஆதாரங்கள் தேவை என்கிறது நீதிமன்றம்.

இந்த வழக்கை கையில் எடுக்கிறார் இன்ஸ்பெக்டர் சுந்தர் சி. இதில் பல திருப்பங்களை சந்திக்கிறார்.

பட்டாம்பூச்சி அடுத்தடுத்து கொலைகள் செய்ய என்ன காரணம்.? செய்யாத குற்றத்திற்கு ஏன் எப்படி சிறை சென்றார்.? அவரின் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டது.? அதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சைக்கோ கொலையாளி என்றால் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே.. அதற்கு ஒரு பெயர் வேண்டுமே.. அதை வைத்திருக்கிறார்கள்.

தன்னால் முடிந்தவரை தான் ஒரு சைக்கோ என்பதை நிரூபிக்க படத்தின் கிளைமாக்ஸ் வரை முயற்சித்துள்ளார் ஜெய். ஆனால் விளைவு.?

யூனிஃபார்ம் போடாத போலீசாக சுந்தர் சி. அவரும் தன் சொந்த படம் தானே என நடித்து வைத்துவிட்டார் போல..

இமானின் மகளாக மாற்றுத்திறனாளி சிறுமியாக மானஷ்வி. மனதில் நிறைகிறார். இமானின் முடிவு நம் மனதை கலங்க வைக்கும்.

கொஞ்சம் கவர்ச்சி.. கொஞ்சம் நடிப்பு கொஞ்சம் அழகு.. என வருகிறார் ஹனிரோஸ்.

டெக்னீஷியன்கள்..

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு ஓகே. நவீன் சுந்தரின் பின்னணி இசை சில இடங்களில் ரசிக்கலாம்.

‘வீராப்பு’, ‘ஐந்தாம்படை’ படங்களை இயக்கிய பத்ரி இந்த ‘பட்டாம் பூச்சி’ படத்தை இயக்கியிருக்கிறார்.

சைக்கோ த்ரில்லர் கதைகளை நாம் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால் இதில் ஓவர் போஸ் கொடுத்துள்ளனர்.

ஜெய் ஏன் கொலையாளி ஆனார்.? என்பதற்கு சில பிளாஷ்பேக் காட்சிகள் சொல்லப்பட்டாலும் அவை எதுவும் மனதில் பதியவில்லை.

பலவீனமான திரைக்கதையால் காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது.

Pattampoochi movie review in Tamil

மாயோன் விமர்சனம் 3.25/5.; மறையாத மர்மங்கள்

மாயோன் விமர்சனம் 3.25/5.; மறையாத மர்மங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தொல்லியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிகிறார்கள் கே எஸ் ரவிக்குமார், சிபிராஜ், ஹரீஷ் பெராடி, தன்யா &
பக்ஸ்.

அதே துறையில் உயரதிகாரியாக இருந்தாலும் தமிழகத்தின் பல பொக்கிஷத்தை வெளிநாட்டிற்கு கடத்துகிறார் வில்லன் ஹரீஷ் பெராடி.

இவருக்கு உடந்தையாக சிபி & தன்யா உள்ளிட்டோர்.

புதுக்கோட்டை மாவட்ட அருகில் உள்ள மாயோன் மலையில் பள்ளிக்கொண்ட கிருஷ்ணர் கோயில் உள்ளது.

அக்கோவிலுக்குள் உள்ள சுரங்கத்தில் விலை மதிப்பற்ற பொருட்கள் இருப்பதாக தொல்லியல் துறை கண்டு பிடிக்கிறது.

ஆனாலும் சில அரசியல்வாதிகளும் கடத்தலுக்கு துணை போகின்றனர்.

இதனிடையில் பொக்கிஷங்களையும் சிலைகளையும் கடத்தும் கும்பலை பிடிக்க அரசு திட்டம் போடுகிறது.

மேலும் இந்தக் கோயிலில் இரவு நேரத்தில் யார் அங்கு இருந்தாலும் அவர்களுக்கு பித்து/பேய் பிடித்துவிடும் என்பது புரளி. பொக்கிஷத்தை பாதுகாப்பதாக ராதாரவி குடும்பம் ஊரில் கெத்து காட்டுகிறது.

இறுதியில் ஜெயித்தது யார்.? சிபிராஜின் தந்திரமூளை என்ன முடிவெடுக்கிறது என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கதைக்கு எது தேவையோ அதை உணர்ந்து நடித்திருக்கிறார் சிபிராஜ் எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

அழகான நாயகியாக வந்து செல்கிறார் தன்யா ரவிச்சந்திரன். நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை.

மேலும் ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் மாரிமுத்து ஹரீஷ் பெராடி உள்ளிட்டோருக்கு பெரிய வேலையில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரில் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவின் பின்னணி இசை பின்னி பெடல் எடுக்கிறது. இதுபோன்ற இளையராஜாவின் பின்னணி இசை கேட்டு வெகு நாட்களாகி விட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மீண்டும் பின்னணியில் தான் ஒரு ராஜா என்பதை நிரூபித்திருக்கிறார்.

வெறுமனே தொல்லியல்துறை என்ற கதையைச் சொல்லாமல் அதற்கான விளக்கத்தையும் ஆன்மீகம் அறிவியலையும் திரைப்படமாக சொல்லியிருப்பது சிறப்பு.

அருண்மொழியின் திரைக்கதை பெரிதும் உதவியுள்ளது. இயக்குனர் கிஷோரின் இயக்கம் பெரிய பலம்.

ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பேருதவியாக இருந்துள்ளது என்பதை காட்சிகளில் உணர்ந்துக் கொள்ளலாம்.

முக்கியமாக படத்தின் கலை இயக்குனர் பாலசுப்ரமணியத்தை பாராட்டியே ஆக வேண்டும். பழங்காலத்து கோயில்களையும் அதன் சிறப்புகளையும் அழகாக காட்டியிருப்பது கண்களுக்கு குளிர்ச்சி.

இரண்டாம் பாதியில் சில கிராபிக்ஸ் காட்சிகள் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

ஆக.. மாயோன்.. மறையாத மர்மங்கள்

Maayon movie review in Tamil

 

More Articles
Follows