ஒரு குப்பைக் கதை விமர்சனம்

ஒரு குப்பைக் கதை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மனீஷா யாதவ், யோகி பாபு மற்றும் பலர்
இயக்கம் – காளி ரங்கசாமி
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – ஜோஷ்வா ஸ்ரீதர்
பி.ஆர்.ஓ. : ஜான்
தயாரிப்பு – இயக்குனர் அஸ்லம்
வெளியீடு : உதயநிதி ஸ்டாரின்

கதைக்களம்…

தினம் தினம் நாம் படிக்கும் கள்ளக் காதல் கதைதான் இப்படத்தின் ஒன்லைன்..

படத்தின் ஆரம்ப காட்சியில் போலீசிடம் ஒரு அட்ரஸ் கேட்கிறார் ஹீரோ தினேஷ் மாஸ்டர். அதன்பின்னர் அந்த அட்ரசில் சென்று திரும்பிய பின் ஒரு கொலை செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார்.

அதன்பின்னர்தான் ப்ளாஷ்பேக்…

சென்னையின் கூவம் ஓரம் உள்ள ஒரு குப்பத்தில் தன் அம்மாவுடன் வசிக்கிறார் நாயகன். சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளி இவர்.

சென்னையை சிங்கார சென்னையாக்குவோம் என அரசியல்வாதிகள் சொன்னாலும் அதை செய்வது நாங்கள்தான் என கௌரமாக சொல்பவர் தினேஷ். இவருடைய சக தொழிலாளி நண்பன் யோகிபாபு.

நாகரீகமாக வாழும் மனிஷாவை உண்மையை மறைத்து திருமணம் செய்துக கொள்கிறார்.

அதன்பின்னர் இவருடைய வேலை மனீஷாவுக்கு தெரிய வருவதால் அங்கு வாழ மறுக்கிறார். எனவே தன் மனைவி மற்றும் பச்சிளங்குழந்தைக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டில் வாடகைக்கு குடியேறுகிறார்.

அங்கு உள்ள ஒரு ஐடி வாலிபருடன் மனீஷாவுக்கு கள்ளத் தொடர்ப்பு ஏற்பட இருவரும் ஊரை விட்டு எஸ்கேப் ஆகிறார்கள்.

அதன்பின்னர் தினேஷ் மாஸ்டர் என்ன செய்தார்? மனைவி கிடைத்தாளா? இப்படி பல கேள்விகளுக்கு விடைதான் இதன் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

வெகுநாட்களுக்கு பிறகு சினிமாத்தனம் இல்லாத படம்.

தினேஷ் மாஸ்டர் ஒரு டான்சர் என்றாலும், அதற்காக ஓவராக டான்ஸ்க்கு இடம் கொடுக்காமல் கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் தன் நடிப்பால் கேரக்டரை பேச வைத்திருக்கிறார் மனீஷா.

பிடிக்காத வாழ்க்கை, பிறகு பிடித்த வாழ்க்கை, துயரம், சந்தோஷம் என ஒவ்வொரு சீனையும் ரசிக்க வைக்கிறார். மனீஷாவின் பூங்கொடி கேரக்டருக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.

படத்தின் முதல் பாதி யோகிபாபுவின் ராஜ்ஜியம்தான். இவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துடும். சரக்கு விலை உயர்வுக்கும் சம்பளத்திற்கும் யோகிபாபு கொடுக்கும் விளக்கம் செம.

இவருடன் அந்த ஐடி ஜார்ஜ், ஆதிரா, கோவை பானு, செந்தில், லலிதா, சுஜோ மாத்யூஸ், கிரன் ஆர்யன் என அனைவரும் கதையை தாங்கி நிற்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமை. நாயகன் மற்றும் நாயகியின் வலியை நா. முத்துகுமாரின் பாடலின் வரிகள் உணர்த்துகின்றன.

பின்னணி இசையில் தீபன் சக்ரவர்த்தி நிற்கிறார்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கச்சிதம்.

தேவையான இடத்தில் கத்திரி போட்டு படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா சபாஷ் போட வைக்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

குப்பை போடுபவரே இங்கு கௌரவமாக பார்க்கப்படுகிறார். இந்த படம் பார்த்தால் குப்பை அள்ளுபவர்கள் மீது நமக்கு மதிப்பு ஏற்படும்.

சென்னை குப்பத்து ஏரியா அவர்களின் பழக்க வழக்கங்கள், வால்பாறை மக்கள் பேசும் பாஷை என அனைத்தையும் ரசிக்கும் படி கொடுத்திருப்பது காளி ரங்கசாமியின் ரகசியம்.

இந்த படம் பார்த்தால் நம் மனக் குப்பையை களைந்து விட்டு வரலாம்.

ஒரு குப்பைக் கதை… மனக் குப்பையை களைய ஒரு கதை

Oru Kuppai Kathai review and rating

செயல் விமர்சனம்

செயல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராஜன் தேஜேஸ்வர் (கார்த்திக்), தருஷி (ஆர்த்தி), ரேணுகா (லக்ஷ்மி), முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி), வினோதினி (சாந்தி), தீப்பெட்டி கணேசன் (அறடம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் (திமிங்கலம்), வில்லனாக சமக் சந்திரா (தண்டபாணி) மற்றும் பலர்
ஒளிப்பதிவு – V.இளையராஜா
இசை – சித்தார்த்விபின்
எடிட்டிங் – R.நிர்மல்
பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில்
ஸ்டன்ட் – கன்னல் கண்ணன்
நடனம் – பாபா பாஸ்கர், ஜானி
கலை – ஜான் பிரிட்டோ
தயாரிப்பு நிர்வாகம் – A.P.ரவி
தயாரிப்பு – C.R.ராஜன்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி

கதைக்களம்…

தந்தை இல்லாத நாயகன் ராஜன் தேஜஸ்வர் அம்மா கண்காணிப்பில் வளர்கிறார்.

பொறுப்பான இளைஞராக வளரும் இவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்.

யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர் இவர். ஒரு முறை மிகப்பெரிய மார்கெட் ஒன்றின் இலவச கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கிறார்.

அங்கும் கட்டணம் கேட்கும் வில்லனை அடித்து நொறுக்குகிறார்.

அவர்தான் அந்த ஏரியாவின் பெரிய தாதா என்பது அவருக்கு அப்போது தெரியாது.

தாதா ஏரியாவில் அடி வாங்கியதால் அவரை அங்கு மாமூல் கொடுப்பவர்கள் கூட மதிப்பதில்லை.

இதனால் கடுப்பாகும் வில்லன், ஹீரோவை அந்த மக்கள் முன்னிலையில் அடிக்க நினைக்கிறார்.

ஆனால் ஹீரோவோ கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிடுகிறார். மேலும் வில்லன் மனைவி மற்றும் பிள்ளையின் படிப்புக்கும் உதவுகிறார்.

இந்நிலையில் தன் பிள்ளையின் படிப்பை வைத்தே ஹீரோவை அந்த இடத்திற்கு வர வைக்கிறார் வில்லன்.

அதன்பின்னர் என்ன வில்லன் – ஹீரோ மோதல் என்ன ஆனது? வில்லன் மகனின் படிப்பு என்ன ஆனது? யார் ஜெயித்தார்கள்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அறிமுக நாயகன் ராஜன் தேஜேஸ்வர். இவரின் அப்பாதான் இந்த படத்தின் புரொடியூசர் என்பது கூடுதல் தகவல்.
நாயகனும் கிடைத்த கேப்பில் ரொமான்ஸ், ஆக்சன் என மிரட்டியிருக்கிறார்.

ஆனால் இவர் டப்பிங் பேசாமல் வேறு யாரையாவது வைத்து பேசியிருக்கலாம். சில நேரங்களில் வார்த்தைகள் வட சென்னை பாஷையில் வர மறுக்கிறது.

மற்றபடி முதல் படம் என்பதால் குறைகளை மறக்கலாம். நாயகி தருஷி சில காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

படத்தின் ப்ளஸ் பாய்ண்டே அந்த வில்லனும் தன் கெத்தை விட்ட பின் வரும் காட்சிகள்தான். வீட்டிற்கு கரண்ட் பில் கட்டாதது முதல் மனைவியின் தாலியை அடமானம் வைப்பது முதல் ரசிக்க வைக்கிறார்.

இவரின் அடியாட்கள்… அண்ணே அண்ணிக்கு ஒரு தாலிதான் கட்டுனீங்களா? என கேட்பது நச். இவரின் மனைவியாக வரும் வினோதினியும் நடிப்பில் கச்சிதம்.

இவர்களுடன் முனீஸ்காந்த் (சிங்கம்), சூப்பர்குட் சுப்பிரமணியம் (புலி), தீப்பெட்டி கணேசன் (அரை டம்ளர்), ஆடுகளம்ஜெயபாலன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபியின் இசையில் நீயா உயிரே பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் குத்து ரகம்தான்.
வி. இளையராஜாவின் ஒளிப்பதிவில் ஆக்சன் மற்றும் பாடல் காட்சிகள் அருமை.

விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கி ரவி தான் இப்படத்தின் டைரக்டர். ஒரு அறிமுக நாயகன் என்றாலும் டாப் ஹீரோக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு அதிரடி ஆக்சனை தெறிக்கவிட்டுள்ளார்.

பெரிய தாதா வில்லன் ஹீரோவிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதே ரொம்ப ஓவர். அதை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் செயல்… குறைவில்லை.

காளி விமர்சனம்

காளி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி மற்றும் பலர்
இயக்கம் : கிருத்திகா உதயநிதி
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி

கதைக்களம்…

அமெரிக்காவில் மிகப்பெரிய டாக்டர் விஜய் ஆண்டனி. இவரே சொந்தமாக பரத் ஆஸ்ப்பிட்டல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

இவருக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு பாம்பு ஒரு காளை மாட்டை துரத்த, அந்த காளை மாடு ஒரு 2 வயது சிறுவனை துரத்துகிறது.

இது எதனால் வருகிறது என்று குழப்பத்தில் இருக்கிறார். ஒரு சூழ்நிலையில் தன்னுடன் இருக்கும் பெற்றோர் தன்னை பெற்றவர்கள் இல்லை என்பது இவருக்கு தெரிய வருகிறது.

எனவே தன் ஒரிஜினல் தாய் தந்தையை பற்றி தெரிந்துக் கொள்ள தமிழகத்தில் உள்ள ஒரு கிராமம் தேடி வருகிறார்.

அங்கு தன் தாயை ஏமாற்றிய தந்தை யார்? என்பதை கண்டறிய முற்படுகிறார்.

அங்கு அறிமுகமாகும் யோகிபாபு அவருக்கு துணை புரிகிறார்.

இறுதியாக அவர் தன் தந்தை கண்டு பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரிஜினல் டாக்டர் ஒரு கேரக்டர். இது தவிர 3 கேரக்டர்களில் வருகிறார் விஜய் ஆண்டனி. அனைத்திலும் தன் யதார்த்த நடிப்பில் கவர்கிறார்.

ஆனால் மொத்தம் உள்ள நான்கு கெட் அப்புக்கும் சின்ன சின்ன வித்தியாசங்களே காட்டியுள்ளார். டைரக்டர் இன்னும் முயற்சித்திருக்கலாம்.

நாட்டு மருத்துவராக அஞ்சலி அழகாக வருகிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் ரசிக்க வைக்கிறார்.

நான்கு நாயகிகளில் தன் அழகிய நடிப்பால் சுனைனா சுண்டி இழுக்கிறார்.

அமிர்தா மற்றும் ஷில்பா தங்களுக்கு கொடுத்த கேரக்டர்களில் பளிச்சிடுகின்றனர்.

யோகி பாபு இந்த படத்திற்கு கிடைத்த யோகம் என்றுதான் சொல்ல வேண்டும். கிடைத்த கேப்பில் எல்லாம் சிரிக்க வைத்து விடுகிறார்.

இவர்களுடன் மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் உண்டு.

விஜய் ஆண்டனியே 4 கேரக்டர்களில் வருவதால், மற்றவர்களுக்கு அதிகம் வேலையில்லாமல் போய்விட்டது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

விஜய் ஆண்டனியில் இசையில் அரும்பே பாடல் ஆயிரம் முறை கேட்க வைக்கும். ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் படத்துடன் ஒன்றாக வைக்கிறது.

எடுத்துக் கொண்ட கதைக்களத்திற்கு கிருத்திகாவுக்கு சபாஷ் சொல்லலாம்.

க்ளைமாக்ஸில் சாதி வேற்றுமையை ஒழிக்கும் காட்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று

காளி… கவனிக்கப்பட வேண்டியவன்

 

பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அரவிந்த்சாமி, அமலாபால், மீனா மகள் பேபி நைனிகா, மாஸ்டர் ராகவ், ரோபோ சங்கர், சூரி, ரமேஷ் கண்ணா, நாசர் மற்றும் பலர்
இயக்கம் – சித்திக்
ஒளிப்பதிவு – விஜய் உலகநாதன்
இசை – அமரேஷ் கணேஷ்
தயாரிப்பு – முருகன்
பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே அஹ்மத்

கதைக்களம்…

தந்தை இல்லாத பேபி நைனிகா தன் அம்மா அமலா பாலுடன் வசிக்கிறார்.

தாய் இல்லாத பையன் மாஸ்டர் ராகவ் தன் தந்தை அரவிந்த் சாமியுடன் வசிக்கிறார். இவரின் தாத்தா நாசர்.

நைனிகாவும் ராகவ்வும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள்.

அரவிந்த் சாமி எந்தவொரு அடிதடி என்றாலும் இறங்கி அடிப்பார். இவருடன் ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் ஆகிய மூவரும் எப்போதும் இருப்பார்கள்.

அரவிந்த்சாமியின் அடிதடி என்றால் நைனிகாவும் ரொம்ப பிடிக்கும். ஆனால் ராகவ்வுக்கு பிடிக்காது. இதனால் நைனிகா நான் உங்க அப்பாவுடன் இருக்கேன். நீ என் அம்மாவுடன் இரு என்கிறார்.

குழுந்தைகளில் இந்த எக்ஸ்சேஞ்சில் தங்கள் இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க நினைக்கிறார்கள்.

குழந்தைகளின் ஆசையை அமலாபாலும் அரவிந்த் சாமியும் நிறைவேற்றினார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொதுவாக அழகான அரவிந்த் சாமி என்றால் சாப்ட் கேரக்டராகவே காட்டுவார்கள். ஆனால் இதில் அரவிந்த்சாமி அடிதடியில் மிரட்டியிருக்கிறார்.

பறந்த பறந்து அடிப்பதும் மகனுக்கு அடங்கி போவதும் ரசிக்க வைக்கிறார். பின்னர் அமலா பாலை கட்டிக்க வைக்க நினைப்பதில் ரசிக்க வைக்கிறார்.

அரவிந்த் சாமியின் வேஷ்டி மற்றும் சட்டை டிசைன்கள் காஸ்ட்யூம் டிசைனர் யார்? என்று நிச்சயம் கேட்க வைக்கும் அளவில் நன்றாக இருக்கிறது.

நைனிகாவின் அம்மாவாக இவர் நடித்தாலும் நம்மால் அமலாபாலை அப்படி பார்க்க முடியவில்லை. ஆடைகளில் தன் அழகை ரசிக்க வைக்கிறார்.

சூரி, ரோபோ சங்கர் மற்றும் ரமேஷ் கண்ணாவின் காமெடி காட்சிகளில் நிறைய இடங்களில் கை தட்டல்களை வரவைக்கிறது. நாசர் கேரக்டர் கச்சிதம்.

ஒரே காட்சியில் வந்தாலும் சித்ரா லட்சுமணன் நிறைவாக செய்துள்ளார்.

அமலாபாலின் கணவராக வருபவர் நல்ல உடற்கட்டுடன் பளிச்சிடுகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அம்ரேஷின் இசையில் பாடல்கள் அருமை. பாஸ்கரு ஒரு ராஸ்கோலு பாடல் தாளம் போட வைக்கும். ஆக்சன் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டல்.

விஜய் உலகநாதன் படத்தை கலர்புல்லாஃக காட்சி நம்மை ஈர்க்கிறார்.

மலையாள டைரக்டர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் காட்சிகளை அமைத்துள்ளார் சித்திக்.

சித்திக் படம் என்றாலே சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. இதில் வடிவேலுவை பயன்படுத்தியிருந்தால் இன்னும் சிரிக்க வைத்திருக்கலாம்.
(உதாரணம் சித்திக் இயக்கிய எங்கள் அண்ணா, ப்ரெண்ட்ஸ் உள்ளிட்ட படங்கள்)

மற்றபடி குழந்தைகளுடன் படத்தை பார்த்து ரசிக்கலாம்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல்… பாஸ்கர் ஒரு ரசனைக்காரன்

இரும்புத்திரை விமர்சனம்

இரும்புத்திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷால், அர்ஜீன், சமந்தா, காளி வெங்கட், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர்
இயக்கம் : பிஎஸ். மித்ரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: ஜார்ஜ்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: விஷால் பிலிம் பேக்டரி

கதைக்களம்…

கையில் பணமிருந்தால் பாதுகாப்பில்லை என் பேங்க்கில் டெபாசிட் செய்கிறோம். ஆனால் நம் பேங்க் அக்கௌண்டில் இருந்து பணம் திருடு போகிறது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியா? என்பதை ஒன் லைனில் ஓங்கி அடித்திருக்கிறார் மித்ரன்.

மிலிட்டரி மேன் கதிரவன் (விஷால்) பயங்கர கோபக்காரர். இவரின் கோபத்தால் பல பிரச்சினைகளை இவர் ஆர்மியில் சந்திக்கிறார்.

எனவே இவரின் கோபத்தை கட்டுப்படுத்தும் வகையில் மனநல மருத்துவர் சமந்தாவிடம் இருந்து ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி வரச் சொல்கிறார் உயரதிகாரி.

அங்கு வரும் விஷால் சில நாட்கள் தன் தங்கை, அப்பா, மாமா ஆகியோருடன் செலவழிக்கிறார்.

அப்போது தங்கையின் திருமணத்திற்காக ஒரு கடை வைத்திருப்பதாக பொய் சொல்லி லோன் வாங்க வேண்டி சூழ்நிலை. அதன் படி லோன் அமௌண்ட் 6 லட்சம் இவரது அக்கௌண்டிற்கு வருகிறது.

ஆனால் வந்த அடுத்த நாளே இவரது மொத்த பணத்தை ஒருவர் எடுத்து விடுகிறார். ஆனால் இவருக்கான பேங்க் எஸ்எம்எஸ் வரவில்லை. அப்படியென்றால் அதன் பின்னணியில் செயல்படுவது யார்?

வாங்கிய லோனுக்கு தானே பொறுப்பு. எப்படி கடனை அடைப்பது? என போராடுகிறார் விஷால். இதுபோல் பலருக்கும் நடக்க, அவர் என்ன செய்தார் என்பதே இந்த இரும்புத் திரை.

கேரக்டர்கள்…

மிடுக்கான மிலிட்டரி கதிரவனாக விஷால். அவரது உயரத்திற்கு ஏற்ப கேரக்டர். வெளுத்து கட்டியிருக்கிறார்.

ஏன்டா கோடிக்கணக்குல லோன் வாங்குனா கேட்க துப்பில்லை. விவசாயிகள் லோனு கேட்டா அவன் திருப்பி கொடுக்கலேன்னா அவன என்னவெல்லாம் பண்னுறீங்க. என பின்னி எடுக்கிறார். அவரைப் போலவே தியேட்டரிலும் செம ரெஸ்பான்ஸ்.

ஆக்சன், கோபம், அடிதடி என மிரட்டினாலும் சமந்தா உடன் சுத்தமாக கெமிஸ்ட்ரி ஒட்டவில்லை.

சமந்தா கேரக்டர் நாயகி என்ற அளவில் மட்டுமே கதையில் ஒட்டுகிறது. சமந்தா கேரக்டரை சாந்தமாக காட்ட வேண்டும் என்பதற்காக ஏதோ சீரியல் நடிகையை போல படு பொறுமையாக பேசுகிறார்.

ஆக்சன் கிங் அர்ஜீன் இனி வில்லன் வேடத்திலும் கலக்குவார். ஒய்ட் டெவிலாக வந்து தெறிக்கவிடுகிறார்.

மிரட்டல் தோனியில் பேசிக் கொண்டே டிஜிட்டல் முறையில் டீசென்டாக தன் கேரக்டரை நிறுத்துகிறார்.

ரோபோ சங்கர் சில காட்சிகள் என்றாலும் சிரிக்க வைத்துவிடுகிறார்.

டெல்லி கணேஷ், காளி வெங்கட் ஆகியோர் கேரக்டர்கள் நிறைவு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யுவனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். டைட்டில் கார்டு முதல் ட்விஸ்ட் காட்சிகளை தன் பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறார்.

ஜார்ஜின் ஒளிப்பதிவு நிறைவு. ஆனால் ரூபனின் எடிட்டிங் முதல் பாதி தேவையில்லை என தோன்றுகிறது. படத்தின் கதையே 2ஆம் பாதி மட்டும்தான்.

கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் லோன், ஜெராக்ஸ் கடை, ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் என எல்லாவற்றின் மீதும் இனி பயம் உண்டாகும் வகையில் ஒரு விழிப்புணர்வு படத்தை கொடுத்துள்ளார் மித்ரன்.

ஆனால் இந்த கேரக்டருக்கு ஏன் விஷால் மிலிட்டரி மேனாக வருகிறார். அவர் ஆர்டினரி மேனாகவே வந்திருக்கலாமே டைரக்டர் சார்?

எப்போதும் ஆர்மியில் இருக்கும் நபர்களுக்கு நாட்டுப் பற்று இருக்கும். ஆனால் விஷால் எப்போதும் வெளிநாடு செல்ல வேண்டும் என நினைக்கிறார்.

இரும்புத் திரை… டிஜிட்டல் விழிப்புணர்வு திரை

நடிகையர் திலகம் விமர்சனம்

நடிகையர் திலகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, ராஜேந்திர பிரசாத், பானுப்பிரியா மற்றும் பலர்
இயக்கம் : நாக் அஷ்வின்
இசை : மைக்கி ஜே மேயர்
ஒளிப்பதிவு: டேனி சான்சேஷ் லோபஸ்
பி.ஆர்.ஓ. : நிகில்
தயாரிப்பு: அஸ்வின் தத், ஸ்வப்பனா தத், பிரியங்கா தத்

கதைக்களம்…

நடிகையர் திலகம் என்று அழைக்கப்பட்ட சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தான் இப்படம்.

சாவித்திரி பற்றி தெரிந்த விஷயங்களையும் சிலருக்கு தெரியாத விஷயங்களையும் இதில் சுவையாக சொல்லியிருக்கிறார்.

அப்பா இல்லாமல் அம்மாவின் பாதுகாப்பில் ஆந்திராவில் வளர்கிறார் சாவித்ரி. பின்னர் தன் பெரியப்பாவின் துணையுடன் நாடகத்தில் நடிக்கிறார்.

அவருக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆரவத்தை புரிந்துக் கொண்டதாலும் நிறைய பணம் கிடைக்கும் என்பதாலும் சாவித்ரியை நடிகையாக்க ஆசைப்படுகிறார் பெரியப்பா.

சென்னைக்கு வந்து 14 வயதிலேயே நடிகையாகிறார். பல வருட போராட்டங்களுக்கு பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாகி விடுகிறார்.

தென்னிந்திய சினிமாவின் நடிகையர் திலகமாக உருவெடுக்கிறார்.

ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஜெமினி கணேசனை (துல்கர் சல்மான்) அவர் வற்புறுத்தலால் காதலிக்கிறார் சாவித்ரி.

ஊருக்கு நடிகர்களாகவும், வீட்டுக்குள் கணவன் மனைவியாக வாழ்கிறார்கள். சில நாட்களில் இது ஊருக்கே தெரிய வருகிறது.

இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் பிறக்கிறது.

இதனிடையில் எவர் உதவி என்று கேட்டாலும் பெரிய தொகைகளை கூட கொடுத்து உதவுகிறார் சாவித்ரி. ஊரே அசந்து பார்க்கும் அளவுக்கு பெரிய பங்களாவை கட்டுகிறார்.

ஆனால் ஜெமினியின் காதல் லீலைகள் சில பெண்களுடன் தொடர, விரக்தியில் குடிக்கு அடிமையாகிறார் சாவித்ரி.

அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை இழக்கிறார். எனவே படங்களை தயாரிக்கிறார். அதுவும் பெரும் தோல்வியில் முடிகிறது.

இறுதியில் அனைத்தையும் இழந்து ஒரு அனாதை போல் மரண படுக்கையில் பல மாதங்கள் போராடி இறக்கிறார்.

ஆனாலும் தான் ஆசைப்பட்ட படி அறக்கட்டளையை நிறுவி ஆதரவற்றோருக்கு உதவி செய்தே உயிரை விடுகிறார் இந்த நடிகையர் திலகம்.

கேரக்டர்கள்…

ஒரு மாபெரும் நடிகை சாவித்ரி. அவரின் கேரக்டரை எப்படி செய்ய போகிறார் கீர்த்தி சுரேஷ்? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

ஆனால் இப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் கீர்த்தி (புகழ்) இனி சினிமா உலகில் கொடி கட்டி பறக்கும். அருமையான நடிப்பை வழங்கியுள்ளார்.

இந்த படத்திற்காக பல விருதுகளை வாங்கி குவிப்பார் என்பதை ஆணித்தரமாக சொல்லலாம்.

நாடக நடிகையாக இருப்பது முதல், மாபெரும் நடிகையாக மாறியது வரை பல பரிமாணங்களை தன் நடிப்பால் ரசிக்க வைக்கிறார். வாழ்க்கையில் எந்த நிலை வந்தாலும் தன் நிலை மாறாது அதே துறு துறு, உதவும் குணம் என அவரது நவரசங்களை அடிக்கி கொண்டே போகலாம்.

ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான். திருமணமாகி இருந்தாலும் பெண்களை வசியப்படுத்தி காதல் வலையில் வீழ வைப்பது எப்படி என்பதை வார்த்தை விளையாடி இருக்கிறார். வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு அந்த வாழ்த்துக்களை சமர்ப்பிக்கலாம்.

சமந்தா மற்றும் விஜய் தேவரெகொண்டா இருவரும் படத்தை கலகலப்பாக கொண்டு செல்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷின் பெரியப்பாவாக வரும் அந்த நபர் பழங்கால தெலுங்கு நடிகர்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பானுப்ரியா, நாக சைதன்யா ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் கலை இயக்குனருக்கு பத்து பூங்கொத்துக்களை கொடுத்து பாரட்டலாம். 1945 முதல் 1985 வரையிலான சினிமாக்கள் அது பெற்ற தோல்விகள் வெற்றிகள் என அனைத்தையும் சினிமா ரசிகர்களுக்காக அறிந்து கொள்ள அருஞ்சுவை படைத்திருக்கிறார்.

பாடல்கள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இல்லை என்றாலும் அதன் கலை, நடன அசைவுகள் நிச்சயம் புது அனுபவத்தை கொடுக்கும்.

நடிகையர் திலகம் சாவித்ரி நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என்ன?

எந்த நிலை வந்தாலும் உன் சுயரூபத்தை மாற்றாதே. காலங்கள் மாறும் நீ மாறாதே.

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தனக்கு மிஞ்சியே தானம் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

அடுத்தவள் கணவனை கரம் பிடித்ததால் வந்த வினை.

கொடுத்த தர்மம் தலை காக்கும். குடி குடியை கெடுக்கும்.

திறமையிருந்தால் நீ விண்ணைத் தொடலாம் என பல உண்மைகள் தன் வாழ்க்கை மூலம் உணர்த்தியிருக்கிறார் இந்த நவீன சாவித்ரி.

நடிகையர் திலகம்… வாழ்க்கையில் நடிக்காத திலகம்

More Articles
Follows