முடிஞ்சா இவன புடி விமர்சனம்

முடிஞ்சா இவன புடி விமர்சனம்

நடிகர்கள் : சுதீப், நித்யா மேனன், முகேஷ்திவாரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், சரத் லோகிஸ்தவா, நாசர், இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : ராஜா ரத்தினம்
படத்தொகுப்பு : பிரவீண் ஆண்டனி
இயக்கம் : கேஎஸ் ரவிக்குமார்
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பாளர் : ராம்பாபு புரொடக்ஷன்ஸ் (சூரப்பா பாபு)

கதைக்களம்…

கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் ஒருவன் போலீஸ் துறைக்கே தண்ணி காட்டுகிறார். முடிஞ்சா இவன புடி என தன் திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

கதாபாத்திரங்கள்…

இதுநாள் வரை நாம் பார்த்த வில்லன் சுதீப், இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.  கன்னடத்தில் இவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

எனவே ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமெண்ட் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். படு ஸ்டைலிஷாக உயர்ந்து நிற்கிறார்.

காதலிக்காக ஏங்கினாலும், டூயட் காட்சிகளில் கெமிஸ்ட்ரி இல்லை.

நாயகியாக நித்யா மேனன்… அழகு பதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்து செல்கிறார்.

நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதிக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் தந்தையாக தனித்து நிற்கிறார்.

காமெடி காட்சிகளில் சதீஷின் டைமிங் காமெடி கைகொடுக்கிறது.

வில்லன்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்த்வா இருவரும் கொஞ்சமே மிரட்டியிருக்கிறார்கள்.

போலீஸாக வரும் சாய்ரவி மிரட்டலும் காமெடியும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இவர்களுடன் அவினாஷ், லதா ராவ், இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ் ஆகியோரும் உண்டு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் ஓரிரு பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை பழைய தாளங்களை அடிக்கடி நினைவு படுத்துகிறது. ஆக்ஷன் காட்சிகளில் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறது.

ராஜரத்தினம் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி.

படத்தின் ப்ளஸ்…

  • ஒருவரை இருவராக காட்டி கொஞ்சம் திரைக்கதையில் விளையாடியிருக்கிறார் கேஎஸ்ஆர்
  • வில்லனை ஹீரோவாக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மாஸ்.

படத்தின் மைனஸ்…

  • வில்லன் + மன்மதன் படங்களை உல்டா செய்து இருக்கிறார். இரண்டிலும் சென்டிமெண்ட் டச்சிங்கா இருக்கும். இதில் மிஸ்ஸிங்.
  • பாடல்கள் கன்னடத்திற்கு  மேட்ச் ஆகும் போல. தமிழுக்கு அவ்வளவாக ஒட்டவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நாம் ரெகுலராக எதிர்பார்க்கும் விஷயங்கள் இதில் மிஸ்ஸிங். மற்றபடி  முடிஞ்சா இவன புடிச்சி ஒரு முறை பார்க்கலாம்.

மொத்தத்தில் முடிஞ்சா இவன புடி… ஆக்ஷன் பிரியர்களுக்கு புடிக்கும்

 

 

 

 

 

 

Comments are closed.

Related News

சுதீப் நடித்த முடிஞ்சா இவன புடி…
...Read More
காலையில் எழுந்திரிச்சி ப்ரஷ் பண்றோமோ இல்லையோ?…
...Read More