தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : சிரிஷ், பாபி சிம்ஹா, மாயா, சென்ட்ராயன், துளசி, யோகி பாபு மற்றும் பலர்.
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவு : என் எஸ் உதயகுமார்
படத்தொகுப்பு : எம். ரமேஷ் பாரதி
இயக்கம் : ஆனந்த கிருஷ்ணன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : E5 Entertainments, Metro Productions
கதைக்களம்…
மெட்ரோ சிட்டியில் வாழும் சத்யா ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவருடன் படிக்கும் ஒரு மாணவியை காதலிக்கிறார்.
ஒரு சூழ்நிலையில், தன் நினைத்ததை எல்லாம் அடைய, தன் பேராசையால் செயின் பறிப்பில் ஈடுப்படுகிறார்.
அதன்பின்னர் அவரது குடும்பம் என்ன ஆனது? பேராசை அவரை நிம்மதியாக வாழவிட்டதா? என்பதே இந்த மெட்ரோ.
கதாபாத்திரங்கள்..
அண்ணன் சிரிஷ்தான் படத்தின் நாயகன். படு ஸ்மார்ட். அம்மாவை கொலை செய்தவர்களையும், செயின் திருடர்களையும் ஒவ்வொருவராக தேடி பிடிப்பதும், கொல்வதும் செம.
படம் சீரியஸ் படம் என்பதால் கடைசி நிமிடம் வரை அப்படிதான் இருக்கிறார். அழகான காதலி மாயா இருந்தும் இவர் மயங்கவில்லை.
சிரிஷின் தம்பியா சத்யா. திருடன் என்றே சொல்லமுடியாத அளவிற்கு அப்பாவியான முகம். பொருத்தமான தேர்வு.
இவரின் பேராசையால் வில்லன் பாபி சிம்ஹாவுக்கே ஆப்பு அடிப்பது காட்சிகள் சூப்பர்.
அதுவும் இடைவேளை காட்சியில் போலீஸையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிப்பது அப்ளாஸை அள்ளுகிறது.
ஹீரோவானாலும் இன்னும் அந்த வில்லத்தனம் பாபி சிம்ஹாவிடம் பாக்கியிருக்கிறது.
திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது நிஜத்திருடர்களுக்கு ஒரு பாடம். நமக்கும் ஒரு எச்சரிக்கைதான்.
இதில் ஹீரோயின் மாயாவுக்கு வேலையில்லை. சென்ட்ராயன் நல்லவனாக நடித்து, நமக்கு புதுவிதமான அனுபவம் கொடுத்துள்ளார்.
யோகிபாபு வரும் அந்த ஒரு காட்சியிலேயே கேரி ஆன் ப்ரோ. என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.
சிரிஷின் பெற்றோர்கள் நல்ல தேர்வு. துளசி கடைசியில் அழவைக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
பாடல்களை விட ஜோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவில் செயின் பறிக்கும் காட்சிகள் நம் மனதையும் பறிக்கிறது.
எங்கும் சலிப்பு தட்டாத ரமேஷ் பாரதியின் அருமையான எடிட்டிங்.
படத்தின் ப்ளஸ்…
- ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு.
- பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
படத்தின் மைனஸ்…
- அம்மாவை இழந்த பின் சிரிஷ் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் ஜாலியான குடும்பம் என்று கூறும் இவர் படு சீரியஸாகவே வருகிறார்.
- துளசியை கொலை செய்தவர்களின் ரேகையை போலீஸ் எடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் என்ன ஆனது? என்பதற்கு பதில் இல்லை.
இதுவரை நாம் பார்க்காத களத்தை எடுத்து, அதில் வேரின் ஆழம் வரை சென்ற இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவை அவ்வளவு பாராட்டலாம்.
வெறும் வழிப்பறியை காட்டாமல் அதற்கான ஸ்கெட்ச் உள்ளிட்டவைகளை சொல்லி, அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார்.
இதுபோன்ற செயின் திருடர்களை விடக்கூடாது என ஆடியன்சே சொல்லுமளவுக்கு காட்சிகளில் பலம் சேர்த்திருக்கிறார் ஆனந்த கிருஷ்ணன்.
இது சிட்டி மக்களுக்கு மட்டுமில்லை. எப்போதாவது சிட்டிக்கு வந்து செல்லும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்தான்.
சென்சார் தடை செய்த இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது நல்லது.
மொத்தத்தில் மெட்ரோ… சிட்டியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை..!