புரிஞ்சவன் புத்திசாலி …; ‘குதிரைவால்’ விமர்சனம்

புரிஞ்சவன் புத்திசாலி …; ‘குதிரைவால்’ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casting : Kalaiyarasan, Anjali Patel, Sethan, Anandsaamy, Lakshmi Patti

Directed By : Manoj Leonel Jahson and Shyam Sunder

Music By : Pradeep Kumar

Produced By : Pa. Ranjith and Vignesh Sundaresan

ஒன்லைன்…

நினைவில் தொலைத்த ஒன்றை கனவில் தேடும் நாயகன்..

கதைக்களம்..

படத்தின் நாயகன் கலையரசன் ஒரு பேங்கில் வேலை செய்கிறார். 38 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை. நண்பர்களும் உறவினர்களும் இல்லாத காரணத்தால் தனிமையில் விரக்தியில் வாழ்கிறார்.

ஒரு நாள் காலை கண்விழிக்கும் போது தன் உடலில் குதிரைவால் முளைத்திருப்பதை அறிகிறார். இது கனவா? அல்லது நிஜமா? என புரியாமல் தவிக்கிறார். அந்த வால் இவரது கண்களுக்கு மட்டுமே தெரிவதை உணர்கிறார்.

ஒரு குதிரையின் வால் தனக்கு எப்படி வந்தது? என்பதை அறிய முயற்சிக்கிறார். ஒரு குறிசொல்லும் பாட்டி, ஜோசியர், கணக்கு வாத்தியார் ஆகியோரை சந்திக்கிறார்.

அவரின் பிரச்சனை தீர்ந்ததா? யார் எப்படி தீர்த்தார்கள்..? அவருக்கு வால் முளைக்க என்ன காரணம்? நடப்பது எல்லாம் கனவா? நிஜம்மா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கலை ஆர்வத்தால் கலையரசன் வித்தியாசமாக நடிக்க முயற்சித்துள்ளார். அவரின் ஆர்வத்தை பாராட்டலாம். குதிரைவால் வந்தபின்னரும் வருவதற்கு முன்னரும் அவரின் செயல்கள் யாருக்கும் புரியல.

இதற்கு காரணம்.. திரைக்கதை அமைப்பு பெரிய குழப்பமாக அமைந்துள்ளது. நிச்சயமாக பலமுறைகள் பார்க்க வேண்டும் போல.

காலா படத்தில் தலைகாட்டிய பாலிவுட் நாயகி அஞ்சலி பாட்டீல். இதில் நாயகியாக வந்துள்ளார். ஓரிரு காட்சிகளில் வருகிறார். சில வசனங்களை மட்டுமே திரும்ப திரும்ப பேசுகிறார். அவ்வளவே.

கணக்கு வாத்தியாராக ஆனந்த்சாமி. அவரின் நடிப்பும் அவரின் வசனமும் உடல்மொழியும் பாராட்டும்படி உள்ளது. பேங்கில் அவர் பேசும் வசனங்கள் வித்தியாசமான சிந்தனை.

இவர்களுடன் சேத்தன், லட்சுமி பாட்டி ஆகியோரின் நடிப்பு கச்சிதம். சிறுமி மானசா மற்றும் சிறுவன் பரிதிவாலன் வரும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த கிணற்றில் சிறுமி ஒரே வசனம் போரடிக்க வைக்கிறது.

டெக்னீஷியன்கள்..

படத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அழகான கிராமம், ஆழமான கிணறு என அசத்தல். (ஆனால் கிணற்றின் நீர் கிராபிக்ஸ்) இதுல கூடவா? என்பதை நாம் இயக்குனரிடம் கேட்டு அறிந்தோம்.

ஆனால் வித்தியாசமான காட்சிகள் வைத்து கேமராவை அப்படியே வைத்திருப்பது நெருடல். அதாவது.. பொதுவாக ஒரு அறையில் காட்சியை எடுப்பதாக இருந்தால் அந்த அறையின் அந்த பக்கம் இந்த பக்கம் என ஆங்கிள் வைத்திருப்பார்கள்.

ஆனால் ஒளிப்பதிவாளர் ஒரே ஆங்கிளில் வைத்து வீட்டின் கொள்ளைபுறம் வரை வைத்து கேமராவை நகர்த்தவே இல்லை. இதனால் நடிகர்களின் முகபாவனைகளை அருகில் பார்க்க முடியவில்லை. ஒருவேளை இது முயற்சி என நினைத்திருப்பாரோ? என்னவோ…

பிரதீப் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே. பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் இணைந்து இசையமைத்துள்ளனர். பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

படத்தொகுப்பாளர் எம்.கே.பி. கிரிதரண், தன்னால் முடிந்த அளவுக்கு படத்தை ரசிக்க கொடுக்க முயற்சித்துள்ளார். அவர் என்ன செய்வார்? அதானே செய்ய முடியும்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஜி.இராஜேஷ். குர்ரான், பைபிள் என பல விஷயங்களை மறைமுகமாக பேசியிருக்கிறார். ஆனால் புரிந்துக் கொள்ளவும் அறிந்துக் கொள்ளவும் நமக்கு அறிவு போதவில்லை என்பதே உண்மை. இவர் எழுதிய திரைக்கதையை அப்படியே படமாக்கியுள்ளனர் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர். இவர்களுக்கு புரிந்துவிட்டதா? என்பதுதான் தெரியல.

இந்த படத்தை சில அறிவுஜீவிகள் பாராட்டினால் அதுவே குதிரைவாலின் வெற்றியாகும்.

ஒரு இயக்குனரின் படைப்பு என்பது அனைத்து தரப்பு மக்களை சென்றயடைய வேண்டும். ஒருவேளை அது தவறினால் 50% மக்களையாவது சென்றயடையனும். ஆனால் இது 5% மக்களை சென்றடைந்தால் கூட அதுவே படைப்பாளிகளின் மிகப்பெரிய வெற்றியாகும்.

ஆக.. ’குதிரைவால்’ படம் உங்களுக்கு புரிந்தால் நீங்கள் பிஸ்தா.

Kuthiraivaal movie review and rating in Tamil

மதி மாறனும்ல…; மாறன் விமர்சனம் 2.25/5

மதி மாறனும்ல…; மாறன் விமர்சனம் 2.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஹீரோ தனுஷ் ஒரு பத்திரிகையாளர். எனவே ‘இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் என்பதை கதைக்களமாக்கியிருக்கிறார் கார்த்திக் நரேன்.

கதைக்களம்..

‘இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்’ ஆக இருப்பவர் தனுஷ்.

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சர் சமுத்திரக்கனி.

எனவே தான் தேர்தலில் ஜெயிக்க வேண்டி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் சில தில்லு முல்லுகளை செய்கிறார்.

இதனை ஒரு போலீஸ் நண்பர் மூலமாக அறிந்துக் கொள்ளும் பத்திரிகையாளர் மதிமாறன் (தனுஷ்) அவரின் சதி திட்டங்களை அம்பலப்படுத்துகிறார்.

இந்த நிலையில் தனுஷின் தங்கை ஸ்ம்ருதி வெங்கட்டை ஒரு மர்ம நபர் கடத்தி விடுகிறார்.

எனவே தனுஷ் அதனை துப்பறியும் வேலையில் இறங்குகிறார். தனுஷின் சமார்த்தியம் என்னாச்சு? உண்மையைக் கண்டுபிடித்தாரா.? தங்கை என்ன ஆனார்..? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார் தனுஷ். ஆனால் படத்தின் கதை ஓட்டத்திற்கு அது எந்த பலனையும் அளிக்கவில்லை.

திறமையான நடிகர் தான் தனுஷ். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இதுல லேசா திமிர் எட்டி பார்க்கும் வகையில் தனுஷின் வசனங்கள் உள்ளது. ஏன்டா.. எளிமையா இருந்தா சீன் போடுறான்னு சொல்றீங்க.. என்னத்தான்டா பண்றது.? திறமை இருக்கு.. பந்தா பண்றேன்.. என படத்திற்கு ஒட்டாத வசனங்களை பேசியிருக்கிறார் தனுஷ்.

மாஸ்டர் படத்திலேயே மாளவிகா ஏன் நடித்தார்? என்பது தெரியல. இதுல மாறன் படத்துல வேற.. ஒருவேளை மாஸ்டர்.. மாறன்.. மாளவிகா.. ராசி இல்லையோ.. என்னமோ.. இன்ஸ்ட்டாவில் வருவது போல வந்தால் ஓகே என நினைத்துவிட்டாரோ என்னவோ.. மாலு.

படத்தில் முக்கியமாக இருவரை பாராட்டியே ஆக வேண்டும். ஒருவர் ஸ்மிருதி வெங்கட் மற்றொருவர் அமீர். அழகான தங்கையாக ஜொலிக்கிறார். கொஞ்சம் அமைதி.. கொஞ்சம் ஆர்ப்பாட்டம் என அசத்தியிருக்கிறார்.

எதிர்பாராத ஸ்விஸ்ட் கேரக்டரில் அமீர். தன் நடிப்பில் கவர்கிறார்.

ஆனால் அமீரின் வசனங்கள் பத்திரிகையாளர்களை அவமதித்துள்ளது. ஒரு குற்றவாளி பார்வையில் அவர் செய்வதுதானே சரியாக இருக்கும். அதனால் ஓகே.. நீங்க நினைச்சா எதை வேணாலும் செய்தியா போடுவீங்களா? என கேட்பது எல்லாம் ஓவர். இல்லாத ஒன்றை யாரும் செய்தியாக போடுவதில்லை.

சாந்தமான நடிப்பில் நாம் பார்த்த சமுத்திரக்கனி இதில் அரசியல்வாதியாக வருகிறார். ஆனால் வழக்கமான அரசியல்வாதிதான். பெரிய திருப்தியில்லை.

ராம்கி மற்றும் ஆடுகளம் நரேன், இட்ஸ் பிரசாந்த் கேரக்டர்களில் வலுவில்லை. .

டெக்னீஷியன்கள்..

அசுரன் படத்திற்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் தான் இதற்கும் இசையமைத்தாரா? பாடல்கள் பெரிதாக கவரவில்லை. தனுஷ் எழுதி ஒரு பாடலை பாட வைத்துள்ளனர்.

தயவுசெய்து அம்மா சென்டிமெண்ட் பாடல்களை பாடவேண்டாம் தனுஷ். உங்க ரசிகர்களுக்கு மட்டும் பிடிச்சா போதுமா..? உங்களுக்கு குத்துபாட்டுதான் சரி.

விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் படம் கலர்ஃபுல்லாக இருக்கு.

துருவங்கள் பதினாறு, என்ற ஒரு ஹிட் படத்தை மட்டும்தான் கொடுத்தார் கார்த்திக் நரேன். அடுத்து இயக்கிய மாபியா.. அட்டர் ப்ளாப் ஆனது. இந்த மாறன் அடுத்து மாஃபியா வரிசையில் இணைந்துவிடும்.

கௌதம் மேனன் பட ஸ்டைலில் கேரக்டர்களை வைத்து கவன் (கேவி ஆனந்த்) பட ஸ்டைலில் திரைக்கதையை வைக்க முயற்சித்துள்ளார் கார்த்திக் நரேன். ஆனால் கதை சொல்லும் விதத்தில் தடுமாறியிருக்கிறார்.

ஆக… மதி-மாறன்.. மதி மாறனும்ல… 2.25/5

Maaran movie review and rating in Tamil

கண்டிப்பாக க்ளாப் அடிக்கலாம்…; கிளாப் விமர்சனம் 3.5/5

கண்டிப்பாக க்ளாப் அடிக்கலாம்…; கிளாப் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

விளையாட்டு துறையில் திறமையானவர்களுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகளே படத்தின் கதை. அதை எப்படி மாற்றுத்திறனாளி நாயகன் எதிர்கொள்கிறார் என்பதே கதை.

இன்று மார்ச் 11ல் சோனி லைவ்வில் வெளியாகியுள்ளது.

கதைக்களம்..

தடகள வீரர் ஆதி (ரன்னிங் அத்லெட்டிக்). ஒருமுறை விபத்தில் தன் ஒற்றை காலை இழக்கிறார். அந்த விபத்திலேயே தன் தந்தை பிரகாஷ்ராஜை இழக்கிறார்.

கால் இல்லை என்பதால் உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணையும் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அகான்ஷா சிங்கை திருமணம் செய்து கொண்டாலும், சில வருடங்களாகவே அவருடன் பேசாமல் இருக்கிறார்.

தான் தவறவிட்ட ஓட்டத்தை ஒரு ஏழை பெண் கிரிஷா குருப் மூலம் நிறைவேற்ற துடிக்கிறார். ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மிகப்பெரும் ஆளுமையான நாசரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மேலும் சில உயர்ஜாதியினரால் தடைகள் வருகிறது.

அவர்களை எதிர்த்து போராட முடிந்ததா? ஜெயித்தாரா.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

மிருகம், ஈரம், மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆதி. இந்த படத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார் . கால் முடியாமல் அவர் படும் அவஸ்தைகள் நம் கண்களை குளமாக்கும். கால் இல்லாவிட்டாலும் தன்னால் ஒருவரை ஓட வைக்கமுடியும் என்பதை உணர்வுபூர்வமாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

சேலையை விட மாடர்ன் உடையில் நன்றாக இருக்கிறார் அகான்ஷா சிங். க்ளைமாக்ஸ் காட்சியில் அகான்ஷா ஸ்கோர் செய்திருக்கிறார்.

கதை ஓட்டத்தின் நாயகியே கிரிஷா குருப். இவர் கோலி சோடா 2 படத்தில் நடித்தவர். இந்த ரன்னிங் பயிற்சியை இவர் மேற்கொண்டு நடித்திருப்பது சூப்பர். அலட்டிக் கொள்ளாமல் அதே சமயம் அசால்ட்டாக செய்துள்ளார் கிரிஷா.

ஹீரோவோடு படம் முழுக்க வருகிறார் முனீஷ்காந்த். கொடுத்த கேரக்டரில் அதிகமாகவே ஸ்கோர் செய்து மனதில் நிறைந்துள்ளார்.

நாசர், பிரகாஷ்ராஜ், மைம் கோபி ஆகியோரின் நடிப்பை எப்போதும் போல பாராட்டலாம்.

பத்திரிகையாளர் ராமானுஜம் கேரக்டரில் தயாரிப்பாளர் கார்த்திகேயன். யார் இவர் என கவனிக்கத்தக்க வகையில் யதார்த்தமாக நடித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

இளையராஜாவின் இசையில் பின்னனி இசை சூப்பர். ரன்னிங் ரேஸ் சமயத்தில் நம்முடைய ரத்த ஓட்டத்தையும் இசை அதிகரிக்க செய்துள்ளது.

படத்தின் ஆரம்ப பாடல் ஓகே. மற்றவை பெரிதாக எடுபடவில்லை.

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு இரண்டும் சிறப்பு. தேவையில்லாத காட்சிகள் இல்லை எனலாம். ரன்னிங் ரேஸ் காட்சிகள் கண்களுக்கு விருந்து. அதை படமாக்கிய விதமும் சூப்பர்.

விளையாட்டு துறையில் ஜாதி, அரசியல் என பல படங்களில் பார்த்தாலும் அதை வித்தியாசமாக ஒற்றை கால் நாயகனை வைத்து கொடுத்திருப்பது நிச்சயம் பாராட்டை பெறும். அதற்காகவே இயக்குனர் பிரித்வி ஆதித்யாவிற்கும் மற்றும் நாயகன் ஆதிக்கும் வாழ்த்துகள் சொல்லியே ஆக வேண்டும்.

ஆக.. இந்த கிளாப்.. நிச்சயம் கிளாப் தட்டி பாராட்டலாம்.

Clap movie review and rating in Tamil

Extra Treat – பெண்களின் காவலன்…; எதற்கும் துணிந்தவன் விமர்சனம்… 3.5/5

Extra Treat – பெண்களின் காவலன்…; எதற்கும் துணிந்தவன் விமர்சனம்… 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பொள்ளாச்சி பாலியல் சம்பவ குற்றவாளிகளை பொளந்து கட்டியிருக்கிறார் சூர்யா.

கதைக்களம்..

படத்தின் முதல் காட்சியிலேயே 7 கொலைகள் செய்கிறார் வக்கீல் கண்ணபிரான் (சூர்யா). ஒரு வக்கீலே இப்படி கொலைகள் செய்ய என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.

தென்னாடு மற்றும் வடநாடு ஊர்காரர்களிடையே சில ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எவரும் பெண் கொடுப்பதும் இல்லை. பெண் எடுப்பதும் இல்லை என்கிறார்கள். இதில் சூர்யா பிரியங்கா காதலிக்கின்றனர்.

சூர்யா வசிக்கும் தென்னாட்டில் உள்ள சில இளம் பெண்களும் அவர்களின் குடும்பத்தாரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். பாலியல் தொல்லை தான் காரணம் என தெரிகிறது. அதன்பின்னணியில் உள்ளவன் யார்? அவனை சூர்யா எப்படி கண்டுபிடித்தார்? என்ன செய்தார்? என்பதே கதை.

கேரக்டர்கள்..

காமெடி,, ரொமான்ஸ்.. ஆக்சன்… விவேகம் என வெரைட்டி காட்டி நடித்துள்ளார் சூர்யா. படம் ஆரம்பிக்கும் முன் சூர்யா பற்றி ரஜினி பேசியது.. சூர்யாவின் பட காட்சிகள் வருவது ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா ட்ரீட்..

ஜெய்பீம் படத்திற்கு பிறகு இதிலும் வக்கீலாக சூர்யா நடித்துள்ளார். ஒரு வக்கீலாக இருந்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியவில்லையே என ஏங்கும்போது நம் நாட்டின் சட்டத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார்.

டாக்டர் பட நாயகி பிரியங்கா தான் இப்பட நாயகி. முதல் படத்தை விட இதில் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். இவரே சாட்சியாக மாறும்போது படத்தின் வேகம் இன்னும் எகிறுகிறது. ஆதினி கேரக்டரில் பிரியங்கா அசத்தல். சென்டிமெண்ட்டில் கண்கலங்க வைத்துள்ளார்.

சூர்யாவின் அப்பா அம்மாவாக சத்யராஜ் மற்றும் சரண்யா. படத்தின் கலகலப்புக்கு சரண்யா கேரண்ட்டி. சத்யராஜ் கேரக்டர் கச்சிதம். இன்னும் வலு சேர்த்திருக்கலாம். வேலா ராமமூர்த்தி கேரக்டரும் அப்படித்தான்.

வினய்க்கு வழக்கமான வில்லன் வேடம். மிரட்டலை இன்னும் வலுப்படுத்தியிருக்கலாம். மனைவியை கொல்லும்போதே இவரின் மீதான எதிர்பார்ப்பு அதிரிக்கிறது. பியானோ வாசிப்பதால் சாந்தமாக காணப்படுகிறார். ஆனால் தமிழ் சினிமாவுக்கு நல்ல உயரமான வில்லன் கிடைத்திருக்கிறார்.

நகைச்சுவை நடிகர்களான சூரி, புகழ், விஜய் டிவி ராமர், இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளனர். தங்கதுரை, சரண் சக்தி, சூப்பர் குட் சுப்ரமணியன் உள்ளிட்டோர் தங்களின் கேரக்டரில் சிறப்பு.

ப்ரியங்காவின் தோழியாக திவ்யா துரைசாமி. இவர்தான் இடைவேளை ட்விஸ்ட் நாயகி. சில ஆண்டுகளுக்கு முன்பு CHUBBYஆக இருந்த திவ்யா இதில் கன்னங்கள் ஒட்டி போய் உள்ளார். கண்கள் அழகு என்றாலும் கன்னங்களை இன்னும் கவனிக்க வேண்டும் திவு..

டெக்னீஷ்யன்கள்..

இமான் இசையில் பின்னனி இசை மிரட்டல். பாடல்கள் ஓகே ரகம்தான். இன்னும் சிறப்பாக கொடுத்திருக்கலாம். பாடல்களை நடிகர் சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

ராம் லட்சுமண் & அன்பறிவு ஆகியோரின் சண்டை காட்சிகள் தெறி லெவல்.

படத்தில் பெரிய கூட்டமே நட்சத்திரங்களாக இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரையும் பாராட்ட வைத்துவிடுவார் பாண்டிராஜ். கடைக்குட்டி சிங்கம்.. நம்ம வீட்டு பிள்ளை ஆகிய இரண்டையும் சேர்த்து ஹாட்ரிக் வெற்றி அடித்துள்ளார்.

நாயகி பிரியங்காவை தூக்குறேன்… திருமணம் செய்றேன் என சூர்யா சவால் விட்ட பின்னர் அந்த 10 நிமிடம் நடக்கும் காட்சிகள் சிறப்பு.

இடைவேளை வரை முதல்பாதி கலகலப்பாக செல்கிறது.. இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் நடுவில் சென்டிமெண்ட் நுழைவது வேகத்தை குறைக்கிறது. திடீர் சென்டிமெண்ட் திடீர் ஆக்சன் என மாறிமாறி வருவது நிச்சயம் பெண்களை கவரும்.

வசனங்கள் படத்திற்கு பலம். நாயகி, நாயகனே பாதிக்கப்படுவதால் படத்தின் வேகம் சூடுபிடிக்கிறது.

தப்பு செஞ்சவனே ஜாலியாக சுத்தும்போது தப்பே செய்யாதவள் எதற்கு பயப்படனும்.. நமக்கு சட்டம் தெரியும்.. ஆனால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் ஓட்டை தெரியும்… “எல்லா பெண்களுக்குமே ஒரே மாதிரி தான் இருக்கிறது.”. உள்ளிட்ட வசனங்கள் பெண்களை ஈர்க்கும்.

ஆக.. சூர்யா ரசிகர்களுக்கு ET.. EXTRA TREAT தான்..

Etharkkum Thunindhavan movie review and rating in Tamil

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…
போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி அதில் பைக் சாகசங்களுடன் துப்பறியும் போலீஸ் அஜித்தை வைத்து வலிமையாக கொடுக்க முயற்சித்துள்ளார் வினோத்.

கதைக்களம்..
மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் அர்ஜீன் (அஜித்). அம்மா, அண்ணன், தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வசிக்கிறார்.

கொலம்பியா நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்களை ஒரு கும்பல் கடத்துகிறது. பின்னர் அதை சென்னைக்கு சில மர்ம இளைஞர்கள் பைக்கில் கடத்தி வருகின்றனர்.

இது போலீஸ்க்கு தலைவலியாக அமைய அதை துப்பறிய திறமையான போலீஸ் அஜித் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார்.

இதனிடையில் ஒரு தற்கொலை வழக்கை அஜித் விசாரிக்க அதன் பின்னணியில் கொள்ளை, போதை பொருட்கள் கடத்தல் தலைவன் கார்த்திகேயா உள்ளதை கண்டுபிடிக்கிறார்.

அதன்பின்னர் என்ன ஆனது? அஜித் அந்த கும்பலை கைது செய்தாரா? போதை கும்பலை அழித்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அஜித்தின் ஆரம்பமே அசத்தல். படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். பைக் ஆக்சன் காட்சியில் மிரட்டி இருக்கிறார். அதே சமயம் அம்மா மற்றும் தம்பி பாசத்தில் உருகவும் வைத்துள்ளார் அஜித். ஓரிரு காட்சிகளில் அஜித்தின் உடல்வாகு மாறி மாறி வருகிறது.. (சூட்டிங் தாமதம் பிரச்சனையோ..?)

காலா படத்தில் ரஜினியின் காதலியாக வந்தாரே ஹுமா குரேஷி அவர்தான் அஜித்தின் ஜோடி. இவர்களுக்குள் ரொமான்ஸ் இல்லை. ஆனால் ஆக்சன் உள்ளது. கொடுத்த வேலையை கச்சிதமாக கொடுத்துள்ளார்.

படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா செம மாஸ். பைக் ரேஸர் கேரக்டருக்கு ஏற்றபோல கம்பீரமான உடற்கட்டு. நடிப்பில் நல்ல முதிர்ச்சி உள்ளது. ஆனால் சில காட்சிகளில் இவரின் லிப் சிங் செட்டாகவில்லை.

அஜித்தின் அம்மாவாக சுமித்ரா.. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளார். ஓரிரு காட்சியில் வரும் சரண்யா ரவி கேரக்டர் கவனிக்க வைக்கிறது.

இவர்களுடன் போலீஸாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் சிறப்பு.

டெக்னிஷியன்கள்..

யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும். ஆனால் டான்ஸ் மாஸ்டர் இன்னும் கவனம் செலுத்தி நல்ல மூவ்மெண்ட்ஸ் கொடுத்திருக்கலாம்.

அம்மா சென்டிமெண்ட் பாடல் கேட்கும் வகையில் உள்ளது. நாயகியுடன் ஒரு ரொமான்ஸ் சாங் வைத்திருக்கலாம்.

பின்னணி இசையில் அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார் யுவன்.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் ப்ளஸ். திரைக்கதை ஓட்டத்திற்கும் காட்சிகளின் தரத்திற்கும் பெரிதும் உதவியுள்ளது.

நல்ல ஆக்சன் இருக்கும்போது திடீரென சென்டிமெண்ட் வருவது செட்டாகவில்லை. அது படத்தின் ஸ்பீடை குறைக்கும் வகையில் உள்ளது. வினோத் அனைத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்துள்ளார் போல.

அஜித்தின் நிஜ திறமையான பைக் சாகசத்தை படத்தின் கதை ஓட்டத்திற்கு ஏற்றபோல் பயன்படுத்திருப்பது சிறப்பு.

போதை பொருள் கடத்தல் கும்பல்… குடும்ப சென்டிமெண்ட்.. பைக் சாகசங்கள்.. என கலந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் வினோத்.

ஆக.. வலிமை… அஜித் ரசிகர்களுக்கு வினோத்தின் விருந்து..

Ajiths Valimai review rating

நம்மை சீட்டில் கட்டிப்போடும் கை-விலங்கு….; விலங்கு விமர்சனம் 4/5

நம்மை சீட்டில் கட்டிப்போடும் கை-விலங்கு….; விலங்கு விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்..
விமல், இனியா, முனீஸ்காந்த், பால சரவணன், ரேஷ்மா, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ஆர்என்ஆர் மனோகர்
ஒளிப்பதிவு: தினேஷ்குமார் புருஷோத்தமன்
இசை: அனீஸ்
இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ். (புரூஸ்லி பட இயக்குனர்)
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பு
வெளியீடு: Zee5
Zee5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 18ல் ரிலீசாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் மொத்தமாக 7 எபிசோடுகள்.

ஒன்லைன்..
திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் விசாரணை தான் இப்படம்.

கதைக்களம்…

திருச்சி மாவட்ட ஒரு கிராமத்தில் உள்ள காவல் எல்லைக்குள் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது.

இந்த தகவலை போலீசுக்கு ஒரு நபர் சொல்ல சப் இன்ஸ்பெக்ட்ர் விமல் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைகின்றனர்.

விசாரணை நடைபெறும் அதே சமயத்தில் போலீஸ் கவனிக்காத சயயத்தில் அந்த சடலத்தின் தலை காணாமல் போகிறது. முண்டம் மட்டுமே கிடக்கிறது.

இதனால் காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறுகிறது இந்த வழக்கு.

இது தொடர்பாக விசாரணைகளை தோண்ட தோண்ட பூதம் கிளம்பிய கதையாக பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது. சொல்லப்பட்ட ட்விஸ்ட்டுக்கள் அனைத்தும் வேற லெவல்.

இறுதியில் கொலைக்காரன் யார்? கொலைக்கான காரணம் என்ன? தலை கிடைத்ததா.? என்பதே மீதி எபிசோடுகள்.

கேரக்டர்கள்…

இதில் விமல் முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதற்காக பறந்து பறந்து ஓங்கி அடிப்பது… கண்ணை காட்டி மிரட்டுவது என எந்தவிதமான கமர்ஷியல் போலீஸ் ஆக இல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் போலீசாக நடித்துள்ளார். இது விமலுக்கு நிஜமான ரீஎன்ட்ரி தான்.

விமலின் மனைவியாக வரும் இனியாவுக்கு இனிமையான இதமான கேரக்டர். மிகையில்லாத யதார்த்த நடிப்பு.
பால சரவணன் ‘அடி பின்னியிருக்கிறார்’. முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் வந்துள்ளார். ஆனால் தேவையில்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசி பெண்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார்.

கிச்சா என்ற பாத்திரத்தில் வரும் ரவியின் நடிப்பு வேற லெவல். அவர் இயக்குனர் பிரசாந்தின் சொந்த மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு முதல்படம் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். கிச்சாவுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்யும் ஒவ்வொன்றும் நம்மை மிரட்டியுள்ளது.

பிற அதிகாரிகளாக வரும் ஆர்என்ஆர் மனோகர், சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். (அண்மையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மனோகர் மரணமடைந்துவிட்டார்)

டெக்னீசியன்கள்..

திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான ஒளிப்பதிவு, இசை, கலை என அனைத்துமே சிறப்பு. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

80% காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறுகின்றன. அதற்காக போடப்பட்ட செட் மிகக் கச்சிதம். கலை இயக்குனர் தன் பணியில் கச்சிதம்.

பாடல்கள் இல்லாத படம். எனவே மொத்த கவனத்தையும் அஜீஸ் தன் பின்னணி இசையில் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

எடிட்டர் கணேஷ் சிவா முதல் 2 எபிசோட்டில் சில காட்சிகளை வெட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மைனஸ்..

வெப்சீரிஸ்களுக்கு சென்சால் இல்லை. ஆனால் அதற்காக இத்தனை கெட்ட வார்த்தைகளா? உச்சகட்ட எரிச்சல் இது. அதை மியூட் கூட செய்யல.

மொத்தமுள்ள 7 எபிசோடுகளில் இறுதியாக வரும் 3-4 எபிசோடுகளுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. முதல் இரண்டில் கட்டிங் போட்டு இருக்கலாம்.

தன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் விமல் தாடி வைத்திருக்கலாம். ஆனால் பாலசரவணன்..? விமல் எஸ்ஐ வருகிறார். ஆனால் பாலசரவணன் யார்? அவர் போலீஸ் என்றாலும் ஒரு காட்சியில் கூட யூனிபார்மில் இல்லையே அது ஏன்?

இயக்கம் பற்றிய அலசல்…

ஜிவி. பிரகாஷ் நடித்த புரூஸ்லீ என்ற படத்தை இயக்கிய பிரசாந்த் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். முற்றிலும் வித்தியாசமாக படமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

ஆண்களின் சபலத்தை தூண்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பது.. அப்பாவி என நினைப்பவர்கள் செய்யும் அட்டூழியங்கள்… என பல விஷயங்களை இயக்குனர் அலசியிருக்கிறார். நாம் ஏளனமாக பார்க்கும் சாமானியனின் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும்? என்பதை காட்டி நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆக.. இந்த விலங்கு… நிச்சயம் நம்மை சீட்டில் விலங்கு போட்டு கட்டி வைக்கும்.

Vimals Vilangu review rating

More Articles
Follows