மெகா கொ(கு)ளறுபடி… கொளஞ்சி விமர்சனம் (2/5)

மெகா கொ(கு)ளறுபடி… கொளஞ்சி விமர்சனம் (2/5)

நடிகர்கள்: சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நைனா சர்வார், கிருபாகரன், நசாத் (குட்டி பையன்), பிச்சைக்காரன் மூர்த்தி
இசை : நடராஜன் சங்கரன்
ஒளிப்பதிவு : விஜயன் முனுசாமி
இயக்கம் : தனராம் சரவணன்
தயாரிப்பு : நவீன் (மூடர் கூடம்)
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

கதைக்களம்…

தன் விருப்பத்திற்கு ஏற்ப பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என நினைக்கும் சமுத்திரக்கனி. அதெல்லாம் முடியாது என அடம் பிடிக்கும் பையன் (கொளஞ்சி). இவர்களின் இடையே நடக்கும் பாசப் போராட்டம் தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை.

எப்போதும் கறுப்பு சட்டை அணியும் பெரியாரிஸ்ட் சமுத்திரக்கனி. ஊருக்குள் அடிக்கடி அட்வைஸ் செய்து வருகிறார். ஆனால் இவரது பையனோ எல்லா பிரச்சினையும் செய்கிறான். இதனால் தன் மகனை அடிக்கடி திட்டுகிறார்.

ஒரு நாள் சமுத்திரக்கனிக்கும் இவரது மனைவி சங்கவிக்கும் குடும்ப பிரச்சினை வரவே சங்கவி பிரிந்து செல்கிறார். இதனை பயன்படுத்திக் கொள்ளும் கொளஞ்சி அம்மாவுடன் செல்கிறான்.

தன் தாய் தந்தையுடன் சேரவே கூடாது என திட்டம் போடுகிறார். அதன்பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கலைஞர்கள்…

சமுத்திரக்கனிக்கு ஏற்ற அட்வைஸ் கேரக்டர்தான். ஆனால் மானப்பாடம் செய்துவிட்டு பேசுவது போல சில காட்சிகளில் செய்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சங்கவி. ஒரு அம்மாவாக அன்பாக வந்து போகிறார்.

இளம் காதலர்களாக ராஜாஜி மற்றும் நைனா சர்வார். நைனா தன் நடிப்பிலும் அழகிலும் நைசாக நம்மை கவர்ந்துவிடுகிறார்.

ராஜாஜி இன்னும் நடிப்பில் மெச்சுரிட்டி தேவை. இவரை ஒன் சைட்டாக காதலிக்கும் ஜெயந்தியும் (நிஜப் பெயர் ரஜினி) அழகாக வருகிறார்.

படத்தின் மெயின் பில்லரே கொளஞ்சியும் நசாத்தும். இருவரும் அடிக்கும் ரகளைகள் படத்திற்கு பெரிய பலம்.

அதுவும் குட்டி பையன் நசாத் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியாது. நல்ல தேர்வு. இவர்களும் இல்லை என்றால் தியேட்டரில் அமரவே முடியாது.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் மோசம். இதுவே நம்மை படம் பார்க்க முடியாமல் செய்துவிடுகிறது.

நடராஜன் சங்கரன் இசையில் பாடல்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒரு காட்சியில் தயாரிப்பாளர் நவீன் அவர்கள் மூடர் கூடம்2 என்ற படத்தை இயக்குவதாக காட்சிகள் உள்ளது.

சென்ட்ராயன் நடிக்கும் ஒரு பாடல் தமிழன்டா பச்சை தமிழன்டா என்ற பாடல் மட்டும் சூப்பராக உள்ளது. அந்த ஸ்பீட் படம் முழுதுவம் இருந்தால் படம் நன்றாக இருக்கும்.

பின்னணி இசை என்ற பெயரில் கொடுமையே நடந்துள்ளது. சமுத்திரக்கனி ஒரு கோயில் காட்சியில் தன் மகனை பாசமாக பார்ப்பார். அதில் தேவையில்லாத வேகமான இசை ஏனோ..?

இதில் நடுவே நடுவே கொளஞ்சி கொளஞ்சி என்ற வாய்ஸ் ஓவர் என்ற சத்தம் வேற பெரிய இம்சையாக உள்ளது.

நன்றாக கொடுக்கவேண்டிய கதையை நாடகமாக கொடுத்துள்ளார் இயக்குனர் தனராம் சரவணன். அப்பா மகன் பாசத்திலும் அழுத்தம் இல்லை. காதலும் சொதப்பல். காமெடி பெயரில் இம்சை இதுவே திரைக்கதையின் பலவீனங்களாக அமைந்துள்ளது-

ஆக.. கொளஞ்சி.. மெகா கொ(கு)ளறுபடி

Kolanji review rating

Comments are closed.