அடுத்தடுத்த அட்வைஸ்… அடுத்த சாட்டை விமர்சனம் 2.75/5

அடுத்தடுத்த அட்வைஸ்… அடுத்த சாட்டை விமர்சனம் 2.75/5

சாட்டை படத்தில் பள்ளி கல்வியை காட்டியிருந்தனர். அடுத்த சாட்டை படத்தில் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் புரமோசன் போல. கல்லூரியில் நடப்பது போன்ற கதையை அமைத்துள்ளனர்.

கதைக்களம்…

தயாளன் (சமுத்திரக்கனி) அப்பா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார். நேர்மை உண்மை கடமை என இருக்கிறார்.

ஒரு ஆசிரியையுடன் இவருக்கு காதலும் உள்ளது.

மாணவர்கள் தோளில் கை போட்டு பழகும் குணம் கொண்டவர். கூடவே தயாளன் என்ற இவரின் பெயரை சொல்லி அழைத்தாலும் கவலைப்பட மாட்டார். எனவே இவரை மாணவர்களுக்கு பிடிக்கும்.

ஆனால் இவரின் ஓவர் நேர்மை கல்லூரியின் தலைமை ஆசிரியர் தம்பி ராமையாவுக்கு பிடிக்காது. கூடவே சில ஆசிரியர்களுக்கும்.

தம்பி ராமையா மகன் பழனிமுத்து (யுவன்) அதே கல்லூரியில் படிக்கிறார். அவருக்கு சக மாணவி போதும் பொண்ணு (அதுல்யா) மீது ஒருதலை காதல்.

ஆனால் அதுல்யாவோ கீழ் ஜாதி பையனுடன் நட்பாக பழகுகிறார். இதனால் யுவன் கடுப்பாகி ஜாதி வெறியை அங்கே விதைக்கிறார். இது ஒருபுறம் இருக்க, தம்பி ராமையா கொடுக்கும் பிரச்சினைகளால் மாணவர்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுகிறது.

காதல் பிரச்சினை, ஜாதி பிரச்சினை, நிர்வாக பிரச்சினை ஆகிய அனைத்துக்கும் சமுத்திரக்கனி எப்படி தீர்வு கண்டார் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

கேரக்டர்கள்..

சமுத்திரக்கனி புரொபசர் அல்லது போலீஸ்? என்று தெரியாத அளவுக்கு செம மிடுக்காக வருகிறார். முகத்தில் ஒரே பாவனைகளை வைத்துக் கொண்டு அட்வைஸ் செய்கிறார். கொஞ்சம் அட்வைஸ் அல்ல. படம் முழுக்க சக ஆசிரியர்களுக்கும் அட்வைஸ் பாடம் எடுக்கிறார்.

ஒரு நண்பனுடன் பழகுவதன் குற்றமா? என அதுல்யா கேட்கும் காட்சிகள் சூப்பர். எனக்கு முன்ன படித்த ஒரு பெண் தவறாக காதல் கீதல் என நடந்துக் கொண்டால் எங்களை கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். அதுபோல் நான் தவறு செய்தால் இனிவரும் பெண்களுக்கு அது ஒரு பிரச்சினையாக இருக்கும். நாங்கள் கல்லூரிக்கு வருவதே பெரும் பிரச்சனையாக உள்ளது என அதுல்யா ஆதங்கப்படும்போது நம்மை கண் கலங்க வைக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியும் பேசி கைத்தட்டல்களை வாங்குகிறார் அதுல்யா.

இவருடன் கன்னிகா கேரக்டர் நன்றாக உள்ளது. ஆனால் அவருக்கு பெரிதாக ஸ்கோப் கொடுக்கவில்லை.

பள்ளி ஆசிரியர்கள் கேரக்டர்கள் சிலவை நன்றாக உள்ளது. ஆனால் ஒரு பிரின்சிபால் இப்படி இருப்பாரா? என நம்மை கடுப்பேத்துற மாதிரி நடித்துள்ளார் தம்பி ராமையா. அதுவே அவரின் நடிப்புக்கு சான்றிதழ்.

பியூனாக இருக்கும் ஜார்ஜ் கொடுத்த வேலையை செய்துள்ளார்.

மாணவர்களாக வரும் யுவன், ஸ்ரீராம் மற்றும் ஆதி கேரக்டர்கள் சூப்பர். சமுத்திரக்கனியின் ஜோடியும் நன்றாக உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஓகே. ஒளிப்பதிவாளரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

கல்லூரி படம் என்றால் இன்னும் ஜாலியாக கொஞ்சம் காமெடியாக காட்டியிருக்கலாம்.

ஆனால் ஆர்ட்ஸ் காலேஜில் இவ்வளவு கன்டிசன் எதற்கு? எனத் தெரியவில்லை. மேலும் படிக்க வசதியில்லாதவர்கள் தனியார் கல்லூரியில் ர்ட்ஸ் சேர்வதன் நோக்கம் ஏன்? அரசு கல்லூரியில் சேரலாமே? அதற்கான சரியான விளக்கம் இல்லை.

படம் முழுவதும் கிட்டதட்ட 5000 மாணவர்கள் இருப்பார்கள் போல. அதை சூட்டிங் செய்வதே பெரும் சவால்தான்.

ஜாதி கயிறு கட்டிய மாணவர்கள் ஆசிரியர்கள் இவையெல்லாம் ரொம்ப ஓவர். பெரும்பாலும் மாணவர்கள் அதை பார்ப்பது இல்லை. ஆனால் இதிலும் காட்டியிருப்பது இப்போது சாத்தியமா எனத் தெரியவில்லை.

க்ளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் செயற்கையாக உள்ளது. ஆனால் அதில் தம்பி ராமையாவின் முடிவு ரசிக்க வைக்கிறது.

கல்லூரி காட்சி என்றாலும் அதில் அரை டவுசர் பெண்கள் என காட்டாமல் அனைத்தையும் நாகரிகமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கலை கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ சூப்பர் திட்டம். அதுபோல் மாணவர்கள் நாடாளுமன்றம் ரசிக்க வைக்கிறது. இந்த புதிய முயற்சிக்காகவே டைரகடர் அன்பழகனை பாராட்டலாம்.

ஆக…. அடுத்தடுத்த அட்வைஸ் தான் அடுத்த சாட்டை.

Comments are closed.

Related News

அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி தயாரித்து நடித்துள்ள…
...Read More
அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா,…
...Read More