காடு இல்லேன்னா நாடு இல்ல..; காடன் விமர்சனம்

காடு இல்லேன்னா நாடு இல்ல..;  காடன் விமர்சனம்

நடிகர்கள் – ராணா டகுபதி, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன்
இயக்கம் – பிரபு சாலமன்
இசை – ஷாந்தனு மொய்த்ரா
தயாரிப்பு – ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்

கதைக்கரு…

அசாமின் மாநிலத்தில் நடந்த உண்மைச் சம்பவமே ‘காடன்’.

அங்கு பாரஸ்ட் மேன் ஆப் இந்தியா என்றழைக்கப்பட்ட ஜாதவ் பாயன்ங் என்பவர் சுமார் 1200 ஏக்கர் பரப்பளவிற்கு மரங்களை நட்டு பெரிய காட்டை உருவாக்கினார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கதைக்களம்…

கோவை அருகே உள்ள காட்டுப் பகுதியில் லட்சம் மரங்களை நட்டு, அங்குள்ள யானைகள் உள்ளிட்ட மிருகங்களுக்கும் காவலனாக இருக்கிறார் காடன் (வீரபாரதி) ராணா டகுபதி.

அந்த இடத்தில் ஒரு ரிஷார்ட் டவுன்ஷிப்பை உருவாக்க முயற்சிக்கிறார் மத்திய அமைச்சர்.

எனவே அதை எதிர்த்து தடை வாங்குகிறார் காடன்.

இதனால் கோபம் அடையும் அமைச்சர் அவர் மீது வீண் பழி சுமத்தி சிறையில் அடைக்கிறார்.

அவர்கள் சிறையிலிருந்து வருவதற்குள் யானைகள் செல்லும் வழியை தடுத்து 60 கிலோ மீட்டருக்கு காம்பவுண்டு சுவரைக் கட்டி விடுகிறார்கள்.

ஜெயிலிருந்து காட்டுக்கு திரும்பும் காடன் மீண்டும் போராடுகிறார்.

அதன்பின் என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

காடன் கேரக்டரை உணர்ந்து
உடல் மொழியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா.

தன்னுடைய வித்தியாசமான நடிப்பில் மிரள வைக்கிறார்.

கும்கி யானை பாகனாக விஷ்ணு விஷால். இவரின் கேரக்டர் கொஞ்ச நேரமே என்றாலும் அவருக்கும் நமக்கும் மறக்க முடியாத கேரக்டர்.

விஷ்ணு விஷால் இரண்டாம் பாதியிலும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதியை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

ஜோயா ஹுசைன் & ஸ்ரியா பில்காவ்ன்கர் என படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர். ஆனால் பெரிதாக கவரவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

வனப்பகுதியின் அழகை அப்படியே தாரை வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.ஆர்.அசோக்குமார்.

யானைகள் மற்றும் காடுகளின் அழகுகளை மிக நேர்த்தியாகவும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் ஒலிக்கலவையும் சிறப்பு.

கோவையில் நடக்கும் கதை போல காண்பிக்கப்படுகிறது. ஆனால்

கோவை மாவட்டம் என்கின்றனர். இருந்தாலும் படத்தில் வரும் சில காட்சிகள் வட இந்தியாவில் காட்சிகளை படமாக்கியது தெரிகிறது. போலீஸ் அதிகாரிகள் உடை கூட அப்படித்தான்.

காட்டின் நலன் குறித்த கதையை அழகாக சொல்லியிருக்கிறார் பிரபு சாலமன். கிளைமாக்ஸில் காட்டை அழித்தல் நமக்கேது வாழ்வு என அறிவுரை வழங்கியிருக்கிறார் இயக்குனர்.

ஆக… காடு இல்லேன்னா நாடு இல்ல..

எங்களின் செய்திகளை உடனுக்குடன் Telegram ஆப்பில் பெற https://t.me/s/filmistreet

Kaadan movie review and rating in Tamil

Comments are closed.