வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விமர்சனம்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா, ஆடுகளம் நரேன், வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ரேஷ்மா பசுபுலேட்டி (புஷ்பா) மற்றும் பலர்.
இசை : சத்யா
ஒளிப்பதிவு : ஷக்தி
படத்தொகுப்பு : ஆனந்த லிங்ககுமார்
இயக்கம் : எழில்
பிஆர்ஓ : ரியாஸ்
தயாரிப்பாளர் : விஷ்ணு விஷால்.

கதைக்களம்…

ஊர் மக்களுக்காக எம்எல்ஏ ரோபா சங்கரிடம் சிபாரிசு செய்து வேலையை முடித்துக் கொடுப்பவர் ஹீரோ முருகன் (விஷ்ணு விஷால்).

ஒரு சூழ்நிலையில் இவரது நண்பர் சூரி எம்எல்ஏ நடத்தி வைத்த ஒரு இலவச திருமண சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.

அதுபோல் ஹீரோயின் நிக்கியின் போலீஸ் வேலைக்காகவும் எம்எல்ஏவிடம் சிபாரிசுக்கு செல்கிறார்.

 

Velanu

 

இதனிடையில் ஒரு விபத்தில் எம்எல்ஏ கோமா நிலைக்கு சென்றுவிட தன் நண்பனுக்கும், காதலிக்கும் எப்படி ஹீரோ உதவினார் என்பதை அதிரி புதிரி காமெடியுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் எழில்.

கதாபாத்திரங்கள்…

படத்தில் காமெடி தான் எல்லாம். ஹீரோ விஷ்ணுவின் இது 10வது படம். ஒரு தயாரிப்பாளராக முதல்படம். இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

கலர்புல்லாக வந்து, நிறைவான பணியை செய்திருக்கிறார்.

இனி புரோட்டா சூரி இல்லை. புஷ்பா புருசனாக புரமோசன் வாங்கிவிட்டார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறு வலிக்க வைத்துவிட்டார்.

 

Vandhutta-Vellaikaaran-Movie

 

நிக்கி கல்ராணிக்கு சீரியஸ் கேரக்டர். காக்கி உடையிலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை. ஆக்ஷனிலும் ஸ்கோர் செய்கிறார்.

ஜாக்கெட் ஜானகிராமனாக வரும் எம்எல்ஏ ரோபா சங்கர் அசத்தல். 10வயசு பையனாக மாறியபின் செய்யும் அட்டகாசங்கள் குழந்தைகளை கவரும்.

வில்லன் ரவி மரியா என்றாலும், காமெடியிலும் பின்னி எடுத்திருக்கிறார். 500 கோடிக்காக அலைந்து ஜாக்கெட்டை கடத்தும் காட்சிகளில் சிரிப்பை கன்ட்ரோல் செய்ய முடியாது. இது சத்தியம்.

இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ஆடுகளம் நரேன் என இவர்களும் நம் வயிறை பதம் பார்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சத்யாவின் இசையில் க்ளைமாக்ஸ் குத்து பாடல் மற்றும் ரீமிக்ஸ் சீயர்ஸ் கேர்ள்ஸ் பாடலும் செம. இந்த பாட்டு வரும்போது உங்கள் கால்களை சீட்டில் கட்டிப் போட்டு விடவும். சபாஷ் சத்யா சார்.

 

Velainnu-02

 

சத்யாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. ஆனந்த் லிங்க்குமார் எடிட்டிங் செய்யாமலே விட்டு இருக்கலாம். இன்னும் கொஞ்சம் சிரித்து இருக்கலாம்.

படத்தின் ப்ளஸ்…

 • நான் ஸ்டாப் காமெடி வசனங்கள்
 • க்ளைமாக்ஸ் குத்துபாடல்
 • கதாபாத்திரங்கள் தேர்வு
 • கலர்புல்லான கதைக்களம்

காமெடி வசனங்கள் சாம்பிள்…

 • புஷ்பா புருசனா நீங்க…?
 • அட பாவிங்களா? காஜா பையன் முதல் டிஜிபி வரை புஷ்பாவை தெரிஞ்சி வச்சிருங்காங்களே…
 • ரோபா சங்கரின் திரும்ப திரும்ப கதை சொல்லும் காமெடி
 • புஷ்பா மேட்டர்தானே முடிச்சிடும்வோம். அவ மேட்டர்தானே அப்புறம் என்ன?
 • ஜாக்கெட் எங்கே? ஜாக்கெட்டே காட்டு என வரும் ஜானகிராமன் காட்சிகள்.
 • இவ பொண்டாட்டிக்கு ஜாக்கெட் நல்லா தைச்சி கொடுக்கிறான்னு மினிஸ்டர் ஆக்க பாக்குறாறே மாமா…?
 • இப்போ பத்து வயசு. இவன் பால் குடிக்கிற வயசுக்கு போயிட்டா அவரு பொண்டாட்டி நிலைமைய நினைச்சி பாருய்யா?

 

velanu 3

காமெடி வசனம், கேரக்டர்கள் தேர்வு, இயக்கம் என இப்படி எழிலை பாராட்டிக் கொண்டே போகலாம். புஷ்பா புருசன், ஜாக்கெட் ஜானகிராமன் என கேரக்டர்களின் பெயர்களை கூட அழகாக தேர்வு செய்துள்ளார்.

ரசிகர்கள் நான் ஸ்டாப்பாக சிரித்து செல்லவேண்டும் என டார்கெட் வைத்து சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்… காமெடி பட்டாசுக்காரன்..!

Comments are closed.

Related News

எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்த…
...Read More
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை தொடர்ந்து…
...Read More
எழில் இயக்கிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’…
...Read More
விஜய், அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன்…
...Read More