ரஹ்மான் இடத்தில் யுவன்.; 7வது முறையாக அஜித்துடன் இணைகிறார்

ajith and yuvanசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ பட சூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தை அடுத்த 2019ல் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித் என்பதை பார்த்தோம்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஹிந்தியில் வெளியாகி ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்காக இது உருவாகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் துவங்க இருக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பார் என முதலில் கூறபட்ட நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

அஜித், யுவன் கூட்டணி ஏற்கெனவே தீனா, பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம் ஆகிய 6 படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

திரைப்படத்தில் வரும் காட்சிகளை மீம்ஸ்களாக உருவாக்கி…
...Read More
ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா…
...Read More
ஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே…
...Read More

Latest Post