விமல் நடிக்கும் மா.பொ.சி.; டைட்டில் சர்ச்சைக்கு போஸ் வெங்கட் விளக்கம்

விமல் நடிக்கும் மா.பொ.சி.; டைட்டில் சர்ச்சைக்கு போஸ் வெங்கட் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மா.பொ.சி. என்ற புதிய படத்தின் பூஜை அறந்தாங்கியில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் போஸ் வெங்கடேஷ் பேசியதாவது…

பெரும்பாலும் ஒரு திரைப்படத்தின் பூஜை சென்னையில் தான் நடைபெறும். ஆனால், அறந்தாங்கி என்னுடைய பிறந்த இடம், இங்கு பூஜை நடைபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எனது சிறுவயது கனவு நிறைவேறியதற்கு சட்டத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் இருவருக்கும் நன்றி..

அடுத்து, என் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட என்னுடைய கதாநாயகன், என்னுடைய மாப்பிள்ளை விமலுக்கு நன்றி.

‘கன்னிமாடம்’ என்ற படத்தில் என்னுடன் பணியாற்றிய கதாநாயகி சாயா தேவி இப்படத்தில் நடிக்கிறார்.

‘பருத்தி வீரன்’ படத்தில் ஒரு கலக்கு கலக்கி தமிழ்நாட்டையேத் திரும்பி பார்க்க வைத்த அன்பு சகோதரர் சரவணன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகவுள்ளார்.

மா.பொ.சி.

சிறுவயதாக இருந்தாலும் இந்த கதையைக் கேட்டு தைரியமாக இப்படத்தை தயாரிக்க ஒப்பு கொண்ட தயாரிப்பாளர் சிராஜுக்கும் நன்றி. இந்த திரைப்படம் நடக்க உறுதுணையாக இருந்தவர் அன்பு சகோதரர் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணனுக்கும் நன்றி.

மேலும், அன்பு சகோதரன் S Focus N.சரவணன் மற்றும் T. சரவணன் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. மா என்ற எழுத்தில் துணைக் கால் சேர்த்து தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

அதைத் தெளிவுப்படுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன். மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம்.

ஒருவேளை ம.பொ.சி அவர்களை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும்.

நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப் படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும்.

நடிகை ரமாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளர். ஒளிப்பதிவாளர் இனியன், படத்தொகுப்பாளர் சிவா, இசையமைப்பாளர் சித்து குமார், மற்றும் கலை இயக்குனர் பாரதி, நடிகர் ஜனா இருவரும் புதியதாக இணைந்துள்ளனர்.

மா.பொ.சி.

Ma Po Si movie pooja and Title explanation by Director Bose Venkat

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் தந்த அப்டேட்

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் தந்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் சுரேஷ் கூறியதாவது…

‛‛டைரக்டர் பாரதிராஜா உடல்நிலை நேற்று கொஞ்சம் சீரியஸாக இருந்தது.

ஆனால் இன்று ஆகஸ்ட் 27 அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மெல்ல உடல் நலம் தேறி வருகிறார்.

இப்போதைக்கு பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் கண்டிப்பாக பாரதிராஜா வீடு திரும்புவார்” என்றார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேற்று தான் மாற்றப்பட்டு இருந்தார்.

அப்போது அவரை மருத்துவமனையில் சந்தித்த கவிஞர் வைரமுத்து…

“பாரதிராஜாவுக்கு சளி தொற்று பிரச்சினை உள்ளது. எனவே சிகிச்சைக்கு பின்னர் விரைவில் நலம் பெற்று பாரதிராஜா வீடு திரும்புவார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைத்தால்.? அதையெல்லாம் ‘கணம்’ சொல்லும் – எஸ்.ஆர். பிரபு

வாழ்க்கையில் 2வது வாய்ப்பு கிடைத்தால்.? அதையெல்லாம் ‘கணம்’ சொல்லும் – எஸ்.ஆர். பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கணம்’ படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அமலா நடித்துள்ள ‘கணம்’ படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் மேலும் கூறியதாவது…

வாழ்க்கையில் ஒவ்வொரு ‘கணமும்’ நமக்கு முக்கியம் என்பதைக் கூறும் படம். டைம் டிராவல் மற்றும் அம்மா சென்டிமெண்ட் இருக்கிறது.

பசங்களுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அறிவியல் புனைகதை (Science Fiction) படம் மட்டுமல்ல, அனைத்து விஷயங்களும் இருக்கும். குழந்தைகள் முதல் அனைவருக்குமான படமாக இருக்கும்.

இப்படத்தின் கதையை கேட்கும்போதே இப்படத்திற்கு செலவுகளும், வேலைகளும் அதிகமாக ஆகும் என்று தோன்றியது. ஆகையால், அதற்கு தகுந்த குழு வேண்டும் என்று நினைத்தோம்.

‘மாயா’ படத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு கதையையும் ஷரவானந்துக்கு அனுப்பிக் கொண்டே இருப்பேன். கடைசியில் இந்தக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இப்படத்தின் தெலுங்கு மொழி பெயர் ‘ஒக்கே ஒக்கா ஜீவிதம்’ (ஒரே ஒரு வாழ்க்கை). மூன்று கதாநாயகர்களுக்குமே மூன்று விதமாக உணர்வுகள் இருக்கின்றது.

நமது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வோம்? அப்படி கிடைத்தால் இதையெல்லாம் சரி செய்து இருக்கலாம், இவை நடக்கமால் இருந்திருக்கலாம் என்று சில விஷயங்களில் தோன்றும்.

அப்படிப்பட்ட விஷயங்களை சரி செய்ய வாய்ப்பு கிடைத்தால் என்ன முயற்சி எடுப்போம்? அப்படி முயற்சி எடுக்கும்போது என்ன மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்? என்பதைத் தான் இந்த படத்தில் கூறியிருக்கிறோம்.

மேலும், அடுத்தடுத்த காட்சிகளில் இது தான் நடக்கும் என்று கணிக்க முடிந்தாலும் அது சுவாரஸ்யமாகவே இருக்கும்படியாக தொழில்நுட்பம், வசனங்கள் மற்றும் இசையும் இருக்கும்.

ஒரு கதாபாத்திரம், ஒரு காட்சியில் தோன்றினாலும் கச்சிதமாக பொருந்தும் படி எடுத்துள்ளோம். அதேபோல், ஒரு படம் எடுக்கும்போது நிதானமும் பொறுமையும் அவசியம் தேவை, அது ஸ்ரீகார்த்தியிடம் நிறையவே இருக்கிறது.

முதல் முறையாக இருமொழிப் படம் எடுக்கிறோம், பெரிய ஒரு செலவில் எடுக்கிறோம், அந்த படம் வருவதற்குள் அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பும், ஆவலும் இருக்க வேண்டும் மற்றும் அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். நாங்கள் நினைத்தது போல் படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்கும் சம்பந்தப்படுத்தும் விதமாக இருக்கும்.

அறிவியல் புனைகதையை தனியாக எடுத்து வைத்துவிட்டு பார்த்தாலும் இந்த படம் நன்றாக இருக்கும். அம்மா மகன் செண்டிமென்ட்டை தனியாக எடுத்து பார்த்தாலும் நன்றாக இருக்கும். இப்படம் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால், பின்புலம் இருக்கக் கூடிய நடிகர்கள் தேவை.

இந்த கதையைப் புரிந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக நடிக்க வேண்டும். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

ரீது வர்மா நாயகியாக நடிக்கிறார். நாசர் விஞ்ஞானியாக நடித்திருக்கிறார்.
சதீஷ் கதாபாத்திரத்தை பார்ப்பவர்கள் எப்படி இதுபோன்ற சவாலான பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள்? என்று நிச்சயம் கேட்பார்கள்.

மூன்று நண்பர்கள், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் பற்றிய கதை என்பதால், இந்த கதாபாத்திரம் தேவையில்லை, இந்த காட்சி தேவையில்லை என்று தோன்றாது. அனைத்து பாத்திரங்களுமே முக்கியமாகத்தான் தோன்றும். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும்” என்றார்.

What will you do if you get 2nd Chance in life

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனங்கள் தேவை.. 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘கணம்’ – ஷர்வானந்த்

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனங்கள் தேவை.. 10 வருடங்களுக்கு ஒருமுறை ‘கணம்’ – ஷர்வானந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா, ஷர்வானந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிய ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் குறித்து ஷர்வானந்த் கூறும்போது…

SR.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது. ஆகையால், சுமார் கடந்த 10 வருடங்களாக பிரபுவுடன் தொடர்பிலேயே இருந்தேன்.

அவர் பேனரில் பல சிறந்த இயக்குனர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். வெவ்வேறு விதமான கதைகளுக்கு இயக்குனர்களை ஊக்கப்படுத்தி வாய்ப்பளித்து வருகிறார்.

எங்களைப் போன்றோர்களுக்கு இவரைப் போன்று தயாரிப்பாளர்கள் தான் தேவை. அவருடைய நிறுவனம் ஒரு தொழிற்சாலை போன்று செயல்படுகிறது.

ஆகையால் தான் வித்தியாசமான சிறந்த படங்களை கொடுக்க முடிகிறது. இவருடைய வழிமுறைகள் எனக்கு பிடித்திருக்கிறது.

பிரபுவுடன் தொடர்பில் இருந்ததால் தான் தமிழ் வசனங்களை சுலபமாக பேச முடிந்தது. இல்லையென்றால், நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்கும்.

மேலும், இந்த படம் எனக்கு சிறந்த படமாக தோன்றியது. எனது தீவிரத்தை விட இப்படத்தின் கதை மிகப்பெரியது.

டைரக்டர் ஸ்ரீ இந்த கதையைக் கூறும்போது அமலா தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறினேன். அமலா கதை கேட்டதும் ஒப்புக் கொண்டார். தமிழில் நிறைய கற்றுக் கொண்டேன். இதுபோன்ற படம் 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் வரும்.

இப்படி ஒரு கதையை எழுதியதன் காரணம், அவர் அம்மாவிடம் இருந்த அன்பு தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன். படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். சை ஃபை படமாக பார்த்தாலும் நன்றாக இருக்கும், அதை விடுத்து அம்மா சென்டிமெண்ட் என்று பார்த்தாலும் அனைவருக்கும் நெருக்கமான படமாக இருக்கும்.

ஒவ்வொரு காட்சியையும் ஸ்ரீ கார்த்திக் நடித்து காட்டுவார், அப்போது நான் ஏன் இப்படி எழுதுனீர்கள்? என்று கேட்டேன். எனது அம்மா இப்படித்தான் இருப்பார் என்று கூறுவார். ஒவ்வொரு காட்சியையும் அவரின் அம்மாவை நினைத்தே எழுதியிருக்கிறார்.

நாம் எந்த உணவு உண்டாலும், அதே உணவை அம்மா கையால் சமைத்து அம்மா ஊட்டிவிடும் போது அந்த உணர்வே வேறாக இருக்கும், அந்த உணர்வு ஒவ்வொருக்கும் அவர்களின் அம்மாவை சம்பந்தப்படுத்தும். எனக்கும் அப்படித்தான் என் அம்மாவை சம்பந்தப்படுத்தியது. இதுவரை நான் கமர்ஷியல் படங்களில் தான் நடித்திருக்கிறேன்.

பொதுவாக ஒரு நடிகருக்கு இதுபோன்ற ஒரு கதையில் நடிப்பதற்கு பாதுகாப்பற்றத் தன்மை இருக்கும். ஆனால், இந்த கதையின் மீதும், அந்த உணர்வின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கதை என்னைத் தேடி வந்ததில் பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.

கற்பனையான உருவத்தை இயக்கி சக்தி இசையமைக்க சொன்னார்.; போட்டுக் கொடுத்த இமான்

கற்பனையான உருவத்தை இயக்கி சக்தி இசையமைக்க சொன்னார்.; போட்டுக் கொடுத்த இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Think Studios நிறுவனம் The Show People நிறுவனத்துடன் இணைந்து வழங்கும்*
இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படம் ‘கேப்டன்’.

‘டெடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இவ்விழாவினில் திரையுலக பிரபலங்கள் பலருடன் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவினில்…

இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது..

இந்த படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார், அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக்களத்தை தான் இயக்குனர் சக்தி கொண்டு வருவார். அது மிகவும் கடினமான ஒரு காரியம்.

ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம்.

இயக்குனர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார். அவருக்கு நன்றி. அனைவருக்கும் என் நன்றிகள்.

இமான்

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கூறியதாவது…

இந்த படம் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நிறைய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். இந்த படத்தில் ஒரு ஆழமான காதல் கதை இருக்கிறது. இயக்குனர் சக்தி உடைய கடின உழைப்பை படத்தை சிறப்பாக மாற்றி இருக்கிறது. நடிகர் ஆர்யா மிகுந்த உறுதுணையாக இருந்தார். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

நடிகர் ஆர்யா கூறியதாவது…

நாங்கள் இந்த கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும் போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார்.

இயக்குனர் சக்தி உடைய சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம்.

ஒரு பிரம்மாண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இமான் சார் இந்த படத்தின் முதுகெலும்பு என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு ஆக்சன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை. நன்றி.

ஆர்யா

இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறியதாவது…

கேப்டன் படம், நான் செய்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். படம் உருவாக ஆர்யாவும், தயாரிப்பாளர் ஸ்வரூப்பும் தான் காரணம். இதுபோன்ற படங்களை நம் ஊரில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

இந்த படம் உருவாவதற்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும். இந்த படம் என் மனதிற்கு நெருக்கமான படம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

சக்தி சௌந்தர் ராஜன்

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…

Think Studios நிறுவன முதல் படைப்பே கேப்டன் என்ற பெயரில் வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை நேர்த்தியாக உருவாக்குவதில் சிறந்த இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன், அவருடைய எண்ணத்தை இமான் இசையமைத்து இருக்கிறார்.

நடிகர் ஆர்யா சிறப்பான நடிகர். அவர் திரைப்படத்தை வெளியிடுவதிலும் ஒரு பகுதியாக இருக்கிறார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் RB சௌத்ரி பேசியதாவது…

கேப்டன் படத்தின் இசையும் டிரெய்லரும் பான் இந்தியா திரைப்படத்திற்கான அம்சங்கள் அனைத்து நிறைந்து இருப்பதை நிரூபிக்கிறது. இந்த படத்தின் டைட்டிலுக்கு பொருத்தமானவர் ஆர்யா. ஒரு வெற்றி கூட்டணி மீண்டும் படம் பண்ணியுள்ளனர். படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நடிகர் சந்தானம் பேசியதாவது…

என்னுடைய நட்பு ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமான ஒன்று. ஆர்யா உடைய எந்த திரைப்படமாக இருந்தாலும், அதற்கு என் அன்பு இருக்கும். இது ஒரு ஏலியன் படம், இந்த புதுவிதமான கற்பனைக்கே எனது வாழ்த்துகள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்.

மேலும் பல திரைப்பட பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தினர்.

சந்தானம்

இப்படத்தில் ஆர்யாவுடன் , சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் D இமான் (இசை), S.யுவா (ஒளிப்பதிவு), கார்க்கி (பாடல் வரிகள்), பிரதீப் E ராகவ் (எடிட்டிங்), R.சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), S.S. மூர்த்தி (கலை இயக்குநர்), மற்றும் V.அருண் ராஜ் ( CG) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 8, 2022 அன்று உலகம் முழுவதும் “கேப்டன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தன் மகன் படத்தை வெளியிட்டு வாழ்த்திய நடிகர் விஷால்

தன் மகன் படத்தை வெளியிட்டு வாழ்த்திய நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால்.

இவர் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவருக்கு 40 வயதை ஆன போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஓரிரு நடிகைகளுடன் இவர் காதல் வயப்பட்டாலும் அந்த காதல்கள் திருமணத்தில் முடியவில்லை.

பின்னர் அனீஷா என்ற ஒரு பெண்ணை திருமண நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால் அதுவும் நிச்சயதார்த்ததோடு முடிந்து விட்டது.

இந்த நிலையில் இன்று தன் மகன் படத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது தான் வளர்க்கும் நாயை தன் மகன் என்று கூறி ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துவோம். முக்கியமாக நாய்களை நேசிப்போம். அதுவே மனிதனின் சிறந்த நண்பன்” எனக் குறிப்பிட்டுள்ளார்

இன்று உலக நாய்கள் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஷால்

More Articles
Follows