1990களில் விஜய் – அஜித் படம் பார்த்த உணர்வு – வனிதா விஜயகுமார்

1990களில் விஜய் – அஜித் படம் பார்த்த உணர்வு – வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வனிதா விஜயகுமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தை கேபி பாலா என்பவர் வெளியிடுகிறார்.

நடிகர் அஜித்தை பார்க்க வேண்டும். அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி வந்தவர் பாலா. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்த படத்தை வெளியிடுகிறார் என பலரும் மேடையில் பேசினர்.

பின்னர் மேடையில் வனிதா விஜயகுமார் பேசும்போது..

“என்னை பார்த்தால் பயமாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். எனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களும் இதை தான் சொல்கிறார்கள். நான் என்ன கடித்து தின்று விட போகிறேனா? என்னை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு தைரியமான பெண்தான் ஆனால் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்றார்.

லொள்ளுசபா மனோகர் பேசும்போது இந்த படம் பழைய படம் போல இருக்கிறது என்றார். நானும் அதை தவறாக சொல்லவில்லை. எனக்கும் 1990களில் பார்த்த படத்தை போல தான் இந்த படத்தின் காட்சிகள் இருந்தன. பாடல் காட்சிகளும் நன்றாக இருந்தது. 1990களில் விஜய் அஜித் படங்களின் பார்த்தபோது எப்படி இருந்ததோ ?! அதை உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டது” என்று பேசினார் வனிதா.

Vanitha speech at Dhillu irundha Poradu audio launch

‘தில்லு இருந்தா போராடு’ விழாவில் அஜித்தை வஞ்ச புகழ்ச்சி அணியில் பேசிய கே ராஜன்

‘தில்லு இருந்தா போராடு’ விழாவில் அஜித்தை வஞ்ச புகழ்ச்சி அணியில் பேசிய கே ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வனிதா விஜயகுமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தை கேபி பாலா என்பவர் வெளியிடுகிறார்.

நடிகர் அஜித்தை பார்க்க வேண்டும். அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி வந்தவர் பாலா. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்த படத்தை வெளியிடுகிறார் என பலரும் மேடையில் பேசினர்.

பின்னர் மேடையில் கே.ராஜன் பேசியதாவது…

“எம்ஜிஆர் ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பார். ரசிகர்களுடன் கூடவே பழகுவார்.

அதனாலேயே எம்ஜிஆருக்கு ஒட்டுமொத்த மக்களும் தங்கள் அன்பை கொட்டினார்கள். ஆனால் நடிகர் அஜித் ரொம்ப அதிர்ஷ்டக்காரன்.

ரசிகர் மன்றத்தை கலைத்தார்.

ரசிகர்களை சந்திப்பது இல்லை. ஒரு புகைப்படம் கூட எடுப்பதில்லை. முதல்வருக்கு பாராட்டு விழா வைத்தால் வருவதும் இல்லை. அப்படியே வந்தாலும் என்னை வற்புறுத்தி வரவழைத்தார்கள் என சொல்வார்.

அஜித் மீது ரசிகர்கள் பைத்தியமாக இருக்கிறார்கள் என்றால் அவர் மிகவும் அதிர்ஷ்டக்காரன்.

பல பேருக்கு தெரியாமலேயே உதவி செய்து கொண்டு வருகிறார். அவர் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என வேண்டுகோளும் வைத்தார் ராஜன்.

K Rajan speech at Dhillu irundha Poradu audio launch

சஸ்பென்ஸ் திரில்லருடன் ‘கபில் ரிட்டன்ஸ்’.; ஒரே மேடையில் சுப.வீரபாண்டியன் & பேரரசு

சஸ்பென்ஸ் திரில்லருடன் ‘கபில் ரிட்டன்ஸ்’.; ஒரே மேடையில் சுப.வீரபாண்டியன் & பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள புதிய படம் ‘கபில் ரிட்டன்ஸ்’.

நாயகியாக நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஸ்ரீனி சௌந்தரராஜன்.

இவர் படத்தை பற்றி கூறுகையில்…

“மகன் இன்ஜினியராக வேண்டும் என்று தந்தையும், டாக்டராக வேண்டும் என்று தாயும், கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள்.

திடீரென கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு மகனைத் தேடி வர, தந்தையோ மகனுக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை ‘வேண்டாம்’ என மறுக்கிறார்.

மேலும் தான் ஒரு கொலை குற்றவாளி என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்.

கபில் ரிட்டன்ஸ்

இதன் பின்னணி குறித்து அவரது மனைவி ஆராய, அவருக்கு திடுக்கிடும் ஒரு விஷயம் தெரிய வருகிறது. இது தான் தான் கதையின் திருப்பு முனையாக அமைகிறது. இவ்வாறான ஒரு சுவாரசியமான கதைக்களத்துடன் சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்லப்படும் கதை தான், ‘கபில் ரிட்டன்ஸ்’ என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஷியாம் ராஜ் கவனிக்க,ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, திருச்சி, மலைக்கோட்டை, உறையூர், மதுரை, திருமங்கலம், திடியன் மலை போன்ற பகுதிகளில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேச்சாளர் சுப வீரபாண்டியன், கவிஞர் சினேகன், இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பேரரசு, நடிகர் வையாபுரி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இயக்குனர் பேரரசு பேசும்போது..

“நானும் சுப வீர பாண்டியனும் ஒரே மேடையில் இருப்பதால் பலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம்.. நான் ஆன்மீகவாதி சுப வீரபாண்டியன் ஓர் நாத்திகவாதி.

எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் கபில் ரிட்டர்ன்ஸ் படத்திற்காக நாங்கள் இணைந்து வாழ்தேதி வந்துள்ளோம். சுப வீரபாண்டியன் கடவுள் மறுப்பாளர். என்றாலும் அவருக்கு கடவுள் இருக்கிறார். காரணம் வாழ்த்த வேண்டும்.. மற்றவர்களை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருக்கிறது.. எனவே அது கடவுளின் குணம். மற்றவர்களை வாழ்த்த நினைப்பதும் கடவுளின் எண்ணமே” என்று பேசினார்.

அதன் பின்னர் சுப வீரபாண்டியன் பேசும்போது.. “இந்த வயதிலும் நான் ஓய்வு இல்லாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். எனவே பலரும் எப்படி உழைக்கிறீர்கள் என கேட்கிறார்கள். நாம் ஓய்வெடுக்க நினைத்து விட்டால் அது தேங்கி விடும். ஓடிக்கொண்டே இருப்பதால் உடல்நிலை நன்றாக இருக்கிறது” என்று பேசினார்.

கபில் ரிட்டன்ஸ்

Kapil returns movie news updates

இசை படைப்புக்காக இணைந்த கமல்ஹாசன் – ஸ்ருதிஹாசன்

இசை படைப்புக்காக இணைந்த கமல்ஹாசன் – ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு புதிய இசை படைப்பினை உருவாக்கவிருப்பதாக ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்த இசை படைப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் ‘என்னிடம் கேள்வி கேளுங்கள்’ என்றொரு அமர்வை தொகுத்து வழங்கினார். அதன் போது அவரது ரசிகர் ஒருவர், ‘உங்களது தந்தையுடன் இணைந்து பணியாற்றும் இசை படைப்பு குறித்த அப்டேட் ஏதாவது இருக்கிறதா? என அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அது குறித்த தனது உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட ஸ்ருதிஹாசன், ” அது ஒரு மியூசிக்கல் ப்ராஜெக்ட். அது என்ன என்பதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறோம். இது தொடர்பாக நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்” என்றார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடகருக்கான விருதினை கமல்ஹாசனுக்கு, ஸ்ருதிஹாசன் வழங்கிய போது மேடையில் இருந்த நடிகர் கமல்ஹாசன், இத்திட்டத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து புதிய இசை படைப்பு ஒன்றில் பணியாற்றவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அந்த தருணத்திலிருந்து இந்த இசை படைப்பு குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் உச்சத்தில் இருக்கிறது.

ஸ்ருதிஹாசன் இதற்கு முன் ‘ எட்ஜ்’ & ‘ ஷீ இஸ் எ ஹீரோ’ எனும் இரண்டு சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார்.

இது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது 3வது சுயாதீன இசை ஆல்பத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

இது குறித்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Shruti Haasan and Kamal Haasan join hands for a new musical project

‘ஜவான்’ சிறப்பு காட்சிக்காக இணைந்த ஷாருக் அறக்கட்டளை & தொண்டு நிறுவனங்கள்

‘ஜவான்’ சிறப்பு காட்சிக்காக இணைந்த ஷாருக் அறக்கட்டளை & தொண்டு நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக் கானின் மீர் அறக்கட்டளை- சமூக மேம்பாட்டிற்காக நீண்ட கால அர்பணிப்புடன் இயங்கி வரும் ஒரு அறக்கட்டளை என அனைவராலும் அறியப்படுகிறது.

இந்த அறக்கட்டளை அண்மையில் ‘ஜவான்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலை ஏற்பாடு செய்தது. இந்த திரையிடல் குறிப்பாக பின் தங்கிய மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று ஷாருக் கானின் நடிப்பில் உருவான ‘ஜவான்’ உலகளவில் வெளியானது.

இந்த திரைப்படம் – நடிகருக்கு சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும் இதில் ஷாருக்கான் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

அவரது ரசிகர்களுடன் ஈடுபாட்டுடன் அவர் நடத்தும் #AskSRK அமர்வின் போது, ஷாருக்கான் தனது அறக்கட்டளையின் பணிகள் குறித்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

இது பற்றி மேலும் அவரிடம் கேட்டபோது…

” நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த நம்மால் முடிந்தவரை பலருக்கு உதவுகிறோம். அதைப் பற்றி பேச வேண்டியதில்லை.

ஆனால் மிகவும் உற்சாகமாக அவர்களிடத்தில் ‘ஜவான்’ திரைப்படத்தை திரையிடுமாறுச் சொன்னேன். இந்த வாரம் முழுவதும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் ‘ஜவான்’ திரைப்படம் திரையிடப்படும்” என பணிவுடன் பதிலளித்தார் ஷாருக்கான்.

ஷாருக்கானின் மீர் அறக்கட்டளையில் அமில வீச்சில் உயிர் பிழைத்தவர்கள், ஆதரவற்ற குழந்தைகள், வீதியோர குழந்தைகள், குடிசை வாழ் மக்கள், பழங்குடியின குழந்தைகள், மாற்று திறனாளிகள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

பல நபர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலானவர்களுக்கு இது அவர்களின் முதல் திரையரங்க வருகையாகவும் இருந்தது.

இதன் விளைவாக அவர்களிடத்தில் மகிழ்ச்சியான புன்னகையும் பூத்தது.

மகிழ்ச்சி மற்றும் மனதை கவரும் தருணங்களை தொடர்ந்து பரவ செய்வதற்காக.. ஷாருக்கானின் மீர் அறக்கட்டளை – நாடு முழுவதும் இதே போன்ற சிறப்பு திரையிடல்களை இந்த வாரம் முழுவதும் நடத்துகிறது.

https://www.instagram.com/reel/Cxh1w6Xvbh-/?igshid=NjFhOGMzYTE3ZQ==

SRK’s Meer Foundation arranged special screenings of Jawan

விஜய் பயிலகத்தில் இலவச ரொட்டி முட்டை பால்; ‘லியோ’ ஆட்டம் ஆரம்பம்

விஜய் பயிலகத்தில் இலவச ரொட்டி முட்டை பால்; ‘லியோ’ ஆட்டம் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் இசை வெளியிட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் கொண்டாட்டங்களை ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு

தளபதி அவர்கள் நடித்த ‘லியோ’ படம் வெளியாவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் *தளபதி விஜய் பயிலகம் மற்றும் தளபதி விஜய் அவர்களின் விலையில்லா ரொட்டி முட்டை பால் திட்டம்* ஆரம்பம்…

*பொதுச்செயலாளர்* அறிவுறுத்தலின்படி,,

நெல்லை மாவட்ட தொண்டரணி தலைவர் *ஜாகீர் உசேன்* தலைமையில்,

*நெல்லை கிழக்கு பகுதி தொண்டரணி தளபதி மக்கள் இயக்கம்* சார்பாக,

*நெல்லை தொகுதிக்குட்பட்ட. கீழக்கரையில், ஊர் பொதுமக்கள் முன்னிலையில், திரளான தொண்டர்களுடன் தளபதி விஜய் பயிலகம்* திறக்கப்பட்டு அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது…

அதனை தொடர்ந்து

1 வருடத்திற்கு வாரந்தோறும் *ஞாயிற்றுக்கிழமை* அன்று *குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள்* பயன்பெறும் வகையில் *இன்று காலை 11 மணி அளவில் முதல் 24.09.2023* (வாரம்)
(ஞாயிற்றுக்கிழமை)
*நெல்லை தொகுதிக்குட்பட்ட தச்சநல்லூர் பைபாஸ் (சாய் பாபா கோவில் எதிரில்) கீழக்கரையில்*,

*தளபதி விஜய் அவர்களின் விலையில்லா ரொட்டி, பால், முட்டை* வழங்கும் திட்டத்தின் மூலம் *குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு* வழங்கப்பட்டது…

*இயக்க சொந்தங்கள்* திரளான தொண்டரணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

*தளபதி விஜய் மக்கள் இயக்கம்*,
*நெல்லை மாவட்டம்…*

Thalapathy Vijay fans started Leo celebration

More Articles
Follows