தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மண்டேலா’ மற்றும் ‘பொம்மை நாயகி’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘லக்கி மேன்’.
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
‘லக்கி மேன்’ திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது.
அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள்.
சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம். எனவே, யோகிபாபு உண்மையில் ஒரு ‘லக்கி மேன்’ தானா என்பதை அறிய அவரது இந்த ஃபீல் குட் பயணத்தில் இணையுங்கள்.
ஃபீல் குட் காமெடி திரைப்படமான இதன் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இங்குள்ள குறைவாக பேசப்படும் மக்களை பற்றியும் படம் பேசுகிறது. இதுவே படத்தின் அடிப்படை. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
*கூடுதல் தகவல்..*
1995இல் பிரதாப் போத்தன் இயக்கத்தில் கார்த்தி கவுண்டமணி செந்தில் சங்கவி நடித்த படம் ‘லக்கி மேன்’. இதில் கவுண்டமணி செந்தில் இருவரும் எமன் மற்றும் சித்திரகுப்தனாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதே பெயரில் யோகி பாபு நடிக்கும் படம் உருவாகி வருகிறது.
*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*
இயக்குநர்: பாலாஜி வேணுகோபால்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
இசை: சீன் ரோல்டன்,
கலை இயக்குநர் – சரவணன் வசந்த்,
படத்தொகுப்பு: ஜி.மதன்,
ஒலி வடிவமைப்பாளர்: தபஸ் நாயக்,
ஆடை வடிவமைப்பாளர்: நந்தினி மாறன்,
நிர்வாக தயாரிப்பாளர்: கே.மதன்,
தயாரிப்பு நிர்வாகி: வி.லட்சுமணன்,
போஸ்டர் வடிவமைப்பு: சபா டிசைன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One,
சமூக ஊடக விளம்பரங்கள்: பாப்கார்ன்,
தயாரிப்பு – திங்க் ஸ்டுடியோஸ்
Yogibabus new movie titled Lucky man first look released