தமன் இசையில் அர்ஜுன்தாஸ் – தன்யா இணையும் படம்.; இயக்குநர் இவரா.?

தமன் இசையில் அர்ஜுன்தாஸ் – தன்யா இணையும் படம்.; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார்.

இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தை ‘டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி’ தயாரிக்கிறது.

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அர்ஜுன்தாஸ் - தன்யா

arjun das’s new movie first look poster release in tomorrow

விஜய் – ரஜினிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் நெல்சன்

விஜய் – ரஜினிக்குப் பிறகு பிரபல நடிகரை இயக்கும் நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’.

இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார்.

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை இயக்கினார்.

சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது.

அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் வேட்டை மன்னனும் ஒன்று.

அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்.

தற்போது ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஷோ கேஸ் வீடியோ நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தை மீண்டும் கையில் எடுக்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் வெளியீட்டிற்கு பிறகு சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தின் பணிகளில் நெல்சன் இறங்கவுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Director Nelson’s next after ‘Jailer’

சத்யராஜ் & சிபி இணையும் ‘ஜாக்சன் துரை 2’ பட போஸ்டர் ரிலீஸ்

சத்யராஜ் & சிபி இணையும் ‘ஜாக்சன் துரை 2’ பட போஸ்டர் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ‘ஜாக்சன் துரை’.

இப்படத்தில் பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ‘ஜாக்சன் துரை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்க, சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ‘ஜாக்சன் துரை 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சத்யராஜ் மாஸாக கண்ணாடி அணிந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜாக்சன் துரை 2

Sathyaraj and Sibiraj’s jackson durai 2 movie first look poster released

பாஜக கட்சியில் இணைந்தார் விஜய்யின் ‘வாரிசு’ பட நடிகை

பாஜக கட்சியில் இணைந்தார் விஜய்யின் ‘வாரிசு’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா.

இவர் கமல், ரஜினி உட்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்தவர் நடிகை ஜெயசுதா.

குறிப்பாக இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அரங்கேற்றம்’, ’சொல்லத்தான் நினைக்கின்றேன்’, ’அபூர்வ ராகங்கள்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜெயசுதா கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைத்து செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயசுதா

இதனை அடுத்து அவர் 2016 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார்.

பிறகு, 2019 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

இந்த நிலையில், நடிகை ஜெயசுதா தற்போது நான்காவது கட்சியாக பாஜகவில் இணைந்து உள்ளார்.

நேற்று தெலுங்கானா மாநில பாஜக பொறுப்பாளர் தருண் சுக் முன்னிலையில் அவர் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

மேலும், தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நடிகை ஜெயசுதா மீண்டும் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஜெயசுதா

Vijay’s ‘Varisu’ actress jayasudha joins BJP party

நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்

நடிகை ஸ்ருதி ஷண்முகப்ரியாவின் கணவர் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை சன் டிவியில் வெளியான ‘நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஸ்ருதி ஷண்முகப்பிரியா.

இதை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.

இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி ஷண்முகப்பிரியா சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, இவர் மனைவிக்கு ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Tamil TV actress Shruti Shanmuga Priya’s husband Arvind dies

‘குட் நைட்’ ரசிகர்களுக்கு குட் நியூஸ்.; மீண்டும் மணிகண்டனுடன் கூட்டணி

‘குட் நைட்’ ரசிகர்களுக்கு குட் நியூஸ்.; மீண்டும் மணிகண்டனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரிய ஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது ‘குட்நைட்’.

அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்தபடம் தயாராகிறது.

குட் நைட்

இந்தப் படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார்.

பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதியபடத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் என வலிமையான கூட்டணி அமைந்துள்ளது.

குட் நைட்

தயாரிப்பு – நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன்

தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் ஆகியன குறித்த விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக் கூடிய படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் பிரபு ராம்வியாஸ்.

குட் நைட்

சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் விஜய் சேதுபதி. இப்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருகிறது.

குட் நைட்

Good Night Makers Announce Their 2nd Production Venture

More Articles
Follows