‘நீங்க ப்ளைட் வாங்கனும்..’ மகாமுனி இயக்குனருக்கு ஆர்யா அட்வைஸ்

‘நீங்க ப்ளைட் வாங்கனும்..’ மகாமுனி இயக்குனருக்கு ஆர்யா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arya talks about his working experience of Magamuni ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

நடிகை ரோகிணி பேசும்போது,

“என்னை இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது மிகவும் மகிழ்ந்தேன். இந்தப் படத்திற்கு ஒரு போட்டோ ஷூட் நடத்தினார்கள். அந்த போட்டோ ஷூட்டிற்குஇரண்டுவிதமான லுக்குகளை மேற்கொண்டார்கள். ஒரு போட்டோ ஷூட்டுக்கே இத்தனை தூரம் மெனக்கெடுகிறார்களே என்று வியந்தேன்.

நான் இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஆர்யாவுடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான நடிகர். ஒரு காட்சியை நான்குவிதமான வித்தியாசமான கோணத்தில்படமாக்கினார்கள்.

அந்தக் காட்சிகளில் நான்கு முறையும் ஆர்யா கண்ணீர்விட்டு அழுதார். அவருடைய இந்த அர்ப்பணிப்புத் தன்மையுடனான நடிப்பு என்னை மிகவும்கவர்ந்தது.

இயக்குநர் சாந்தகுமார் தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே அனைத்தையும் செய்தார். இப்படிப்பட்ட ஒரு இயக்குநரைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கிடைத்தது, அவருக்கு பெரும் பாக்கியம்தான்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் பேசும்போது,

“இது எனது முதல் படம். இப்படிப்பட்ட ஒரு படம் என் முதல் படமாக அமைந்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்எனது நன்றிகள்.

57 நாட்களில் 47 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது. இது எனது உதவியாளர்களின் உதவியால்தான் சாத்தியமானது…” என்றார்.

நடிகை மஹிமா நம்பியார் பேசும்போது,

“இந்த மகாமுனி படத்தில் ஒரு பங்காக நானும் இருந்ததை நினைத்துப் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பை விட்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் நிச்சயமாகவருத்தப்பட்டிருப்பேன்.

நானே என்னை இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்த்ததில்லை.

ஆனால், சாந்தகுமார் ஸார் அப்படியொரு கதாபாத்திரத்தைஎனக்கு வழங்கியிருக்கிறார். அவருக்கு எனது நன்றி. இது என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் ஒன்று.

இந்தச் சமயத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தில் வேலை செய்வது எனக்கு மிகவும்வசதியாக இருந்தது.

இந்தப் படத்திற்கு டப்பிங் பேசும் சமயத்தில் ஜெயசுதா மேடம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன் ஆர்யா எதைப் பற்றியும் கவலைப்படாத மனிதராகத்தான் எனக்குத் தெரிந்தார்.

ஆனால் இந்தப் படத்தில் அவருடன் நடித்த பின்பு அவர் ஒரு கடின, அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய நடிகர்என்பது தெரிந்தது.

ஒரு காட்சியைப் படமாக்கும்போது 10 நிமிடங்களுக்கு முன்பாக நான் தயாராக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் ஆர்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தயாராக நிற்பார்.

இந்தப் படத்தினால் அவருக்குக் கிடைக்கப் போகும் அனைத்து பாராட்டுக்களுக்கும் தகுதியானவர் ஆர்யா. இயக்குநர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்.

நடிகர் ஆர்யா பேசும்போது,

“இந்தப் படத்தின் டீஸருக்கும், காட்சி முன்னோட்டத்திற்கும் கிடைத்த ரெஸ்பான்ஸ், எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

சாந்தகுமாரிடம் ‘இந்தப் படத்தின் கதையைத் தயார் செய்ய எதுக்கு எட்டு வருஷம் எடுத்துக்கிட்டீங்க?’ என்று கேட்டேன். அதுக்கு அவர் ‘ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அட்வான்ஸ் வாங்கி அதுல ஒரு பைக் வாங்கினேன்.

அந்த பைக்லயே இந்தியாவைச் சுத்திப் பார்க்க போயிட்டேன். இப்போ அடுத்து சைக்கிளும் வாங்கப் போறேன்’னாரு.. ‘ஒரு பைக் வாங்கியே அடுத்தப் படத்தைத் தயார் செய்ய எட்டு வருஷமாச்சுன்னா.. அடுத்து சைக்கிள் வாங்கினா என்னா ஆகும்..

நீங்க அடுத்து பிளைட்டுதான் ஸார் வாங்கணும்’னு சொன்னேன்.

இந்தப் படத்தின் முழுக் கதையையும் சாந்தகுமார் என்னிடம் சொல்லவில்லை. முதலில் ‘மகா’ கதாபாத்திரத்தின் பகுதியை மட்டுமே சொன்னார்.

பிறகு ‘முனி’ கதாபாத்திரத்தை கடைசியாக உங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறேன் என்று சொன்னார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.

இயக்குநர் சாந்தகுமார் மிகுந்த அர்ப்பணிப்புத் தன்மையுடைய இயக்குநர். அது எப்படியெனில் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அத்தனை பேருக்குமே ஒரு வரலாற்றையே தயார் செய்து வைத்திருந்தார்.

நாயகிகள் இந்துஜா, மஹிமா மற்றும் சக நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் அது எனக்கும் ஒரு எனர்ஜியை அளித்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் மிகவும் அருமையாக பணியாற்றியிருக்கிறார்.

இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்தமைக்காக இயக்குநர் சாந்தகுமார் ஸாருக்கு எனது நன்றிகள்.

இயக்குநர் சாந்தகுமார் பேசும்போது,

“ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும்போது எவ்வளவு நேரம் வேலை செய்தோம்ன்றது எல்லாருக்குமே தெரியும். ஆனால் இது மாதிரியான ஸ்கிரிப்ட் வேலை செய்யும்போது அப்படியிருக்க முடியாது.

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையும் அதில் கலந்திருக்கிறது. இதனால் எனது மனைவிக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டும்தான் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஸார்கிட்ட அவ்வப்போது ஸ்கிரிப்ட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தேன்.

இந்த நிறுவனத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அது ஞானவேல்ராஜா ஸாருக்காகத்தான். அவர் எந்தவிதமான அழுத்த்த்தையும் எனக்குக் கொடுக்கவில்லை.

அவர் அவ்வப்போது ‘ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சிருச்சா?’ என்று கேட்பார். நான் ‘இல்லை’ என்பேன். அவர் அதற்கு வருத்தமும் பட்டதில்லை.

அவர் என்னிடம் காட்டிய பொறுமையும் புரிதலும் என்னை நெகிழ வைத்தது. எனக்குக் கிடைத்த இந்தக் குழு மிகச் சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

Arya talks about his working experience of Magamuni

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’-க்கு உலகளவில் 13வது இடம்

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’-க்கு உலகளவில் 13வது இடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oththa Seruppu Size 7 got 13th place in World Cinemaபார்த்திபன் ஒரு படைப்பாளராகவும் கலைஞராகவும் உருவாக்கியிருக்கும் அவரது அடுத்து வரவிருக்கும் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 7 வரை சிங்கப்பூரில் நடைபெறும் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

அதிக உற்சாகத்துடன் இருக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து கூறும்போது, “உண்மையாக சொல்வதானால், SAIFF போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்ற உண்மையை நான் ஒருபோதும் அறிந்ததில்லை.

இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட அறிக்கையாக தோன்றலாம், ஆனால் இது போன்ற ஒரு மதிப்புமிக்க மேடையில் திரையிடப்படுவதற்கு ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தகுதியானது என்று நான் நம்புகிறேன்.

எனது கடின உழைப்பிற்காக நான் இதை சொல்லவில்லை, நான் நினைத்ததை கொண்டு வர அதிக அளவில் முயற்சி எடுத்த ஒட்டுமொத்த குழுவினருக்காக இதை சொல்கிறேன்.

மேலும், இந்த மாதிரி ஒரு முயற்சி சர்வதேச அரங்கில் கவனிக்கப்பட இது ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும் இந்த தருணத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன்” என்றார் பார்த்திபன்.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, சினிமா எப்போதுமே கலை மற்றும் வணிகம் என வகைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கலை சினிமா என்பது ஒரு விருது திரைப்படம் என்று அழைக்கப்படுகிறது, வழக்கமான வணிக சினிமா பார்வையாளர்களுக்கு இது சரியான தேர்வாக இருப்பதில்லை.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இது குறித்து தெளிவுபடுத்துகிறார். அவர் கூறும்போது…

“அப்படியானால், எனது முதல் படம் புதிய பாதை கலை ரீதியான படமாகவும் இருந்தது, அந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.

அதே நேரத்தில் வணிக ரீதியாக வெற்றிப் படமாகவும் இருந்தது. ஒத்த செருப்பு அதை மீண்டும் நிரூபிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

பார்த்திபன் இப்படத்தை தயாரித்து, இயக்குவதோடு, ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் இந்த கதையில் அவரே நடித்தும் இருக்கிறார்.

உலக சினிமா வரலாற்றில் மூன்று வெவ்வேறு அவதாரங்களை ஒரே நபர் எடுக்கும் முதல் முயற்சி இதுவாகும்.

இந்த படம் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கிளப்பின் பாதுகாப்பு காவலர் மாசிலாமணி என்ற கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்கிறது.

அவர் ஒரு கொலையில் சந்தேக நபராக காவல் நிலையத்திற்கு இழுத்து செல்லப்படுகிறார், அதே நேரத்தில் அவரது உடல்நிலை சரியில்லாத மகன் காவல்துறை விசாரணை அறைக்கு வெளியே காத்திருக்கிறார்.

கதாநாயகனைத் தவிர, மற்ற கதாபாத்திரங்கள் அதன் இருப்பை குரல் மூலமாக மட்டுமே கொண்டிருக்கும். அவை காட்சிக்குள் இருப்பதைப் போல ஒரு காட்சி தூண்டுதலை ரசிகர்களுக்குள் உருவாக்கும்.

உலக சினிமா வரலாற்றில் ஒற்றை நபர் மட்டுமே நடிக்கும் 13வது சினிமாவாக உருவாகியிருக்கிறது ‘ஒத்த செருப்பு சைஸ் 7’.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூடான், சிங்கப்பூர், பங்களாதேஷ், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் 45 படங்களுடன் இந்த படமும் இந்த விழாவில் கலந்து கொள்கிறது.

பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி சத்யா பின்னணி இசை அமைக்கும் இந்த படத்தை ஆர் சுதர்ஷன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மற்றும் அம்ரித் பிரீத்தம் ஒலி வடிவமைப்பு செய்துள்ளனர். விவேக் (பாடல்கள்), விஷ்ணு (புகைப்படம்), பி கிருஷ்ணமூர்த்தி (இணை இயக்குனர்), டி கண்ணதாசன் டிகேடி (பப்ளிசிட்டி), iGene (DI) மற்றும் ஒயிட் லோட்டஸ் (விஎஃப்எக்ஸ்) ஆகியோர் அடங்கிய தொழில்நுட்ப குழு இந்த படைப்பின் பின்னணியில் உழைத்திருக்கிறது.

Oththa Seruppu Size 7 got 13th place in World Cinema

60 & 90 சிங்கிள்ஸ் கலக்கும் ‘நானும் சிங்கள்தான்..’

60 & 90 சிங்கிள்ஸ் கலக்கும் ‘நானும் சிங்கள்தான்..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dinesh and Motta Rajendran team up for Naanum Singlethanநானும் சிங்கள்தான் என்ற ரொமான்டிக் காதல், காமெடி கலந்த படத்தை இயக்குகிறார் புதுமுக இயக்குனர் ரா. கோபி.

நாயகனாக அட்டகத்தி தினேஷ், நாயகியாக தீப்த்தி ஷெட்டி நடித்துள்ளனர்.

இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இவர் இதுவரைக்கும் வில்லனாக, காமிடியனாக நடித்து இருந்தாலும், இதில் இவர் ஒரு ரோமேண்டிக் காமிடியனாக வருகிறார்.

லண்டன் வாழ் தமிழனாக FM ஸ்டேஷ்சனில் ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம். MR. LOVE என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குரு.

காதலை சேர்த்து வைப்பறக்கு, காதல் தோல்வியில் விரைத்தி அடைந்தவர்களுக்கு , முகிகயமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக மாற்ற ஐடியாக்களை கொடுக்கும் MR.LOVE வாக கலக்கி இருக்கிறாம்.

தினேஷ்வுடன் சேர்ந்து காமெடியில் பட்டைய கிளப்பி , வெளுத்து வாங்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு கூட்டம் உடையவர் , ஒரு R J வாக பார்ப்பது புதிதாக இருக்கும் என படக்குழு கூறுகின்றனர்.

கட்டயாமாக நமது 90’ஸ் சிங்கிளுடன், 60’ஸ் சிங்கிளுடன் ஆட்டம் வெகுவாக நம்மை கவரபோகிறது.

Dinesh and Motta Rajendran team up for Naanum Singlethan

சிம்பு மீது தயாரிப்பாளர்கள் புகார்; மீண்டு வந்தா ராஜாவா வருவாரா..?

சிம்பு மீது தயாரிப்பாளர்கள் புகார்; மீண்டு வந்தா ராஜாவா வருவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Five producers complaint against Actor Simbu ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இதுவரை சிம்பு அந்த பணத்தை திருப்பித் தரவில்லை.

அண்மையில் சிம்புவின் சொதப்பல் கால்ஷீட்டால் மாநாடு படத்திலிருந்து அவரை நீக்கியதாக அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதுபோல் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவர் சிம்புவை வைத்து தயாரித்து வந்த படம் பாதியில் நிற்கிறது.

இவர்களைப் போல் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து கொரில்லா படத்தை தயாரித்த சுரேசும் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்பணம் கொடுத்துள்ளாராம்.

இப்படி தொடர்ச்சியா சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

எனவே விரைல் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Five producers complaint against Actor Simbu

ரஜினிக்கு காமெடி ஆக்‌ஷன்; விஷாலுக்கு ஒன்லி ஆக்‌ஷன்.. : சுந்தர் .சி

ரஜினிக்கு காமெடி ஆக்‌ஷன்; விஷாலுக்கு ஒன்லி ஆக்‌ஷன்.. : சுந்தர் .சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C talks about Vishals new movie Action “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”.

இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம்.

இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது…

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால்- நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம்.

நான் M.G.R ரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.

எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்‌ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்.

ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை. நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம்.

எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன்.

“உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கி விட்டார்கள்.

ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது.

இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான்.

படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.

இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது.

மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார்.

இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கதை , இயக்கம்: சுந்தர்.சி .
திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி.
இசை: ஹிப் ஹாப் தமிழா.
ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்.
வசனம்: பத்ரி.
கலை: துரைராஜ்.
ஸ்டண்ட்: அன்பறிவ்.
நடனம் ; பிருந்தா, தினேஷ்.
பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.தயாரிப்பு: ட்ரைடென்ட் ரவீந்திரன்

Sundar C talks about Vishals new movie Action

மஹிமா ஒரு க்யூட் நடிகை… ‘மகாமுனி’ நடிகை இந்துஜா பாராட்டு

மஹிமா ஒரு க்யூட் நடிகை… ‘மகாமுனி’ நடிகை இந்துஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahima Nambiyar is very Cute says Indhujaஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,

“2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.

அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்பட்டு இருவரும் இணைந்தோம்.

இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது.

நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோது அவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.

இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.

கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது,

“நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.

44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார்.

நான் பாடல் எழுத வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார்.

அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.

நடிகை இந்துஜா பேசும்போது,

“சாந்தகுமார் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஒரு தூய்மையான படைப்பாளி. இது ஒரு வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவம். எனது அடுத்தநன்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு.
மூன்றாவது நன்றி ஆர்யாவுக்கு. அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. மஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகை. இந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…” என்றார்.

இசையமைப்பாளர் தமன் பேசும்போது,

“நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம்.

அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது.

வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது.

அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன்.
ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்.

இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.

படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,

“பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.

அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.

இங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

Mahima Nambiyar is very Cute says Indhuja

More Articles
Follows