சிவகார்த்திகேயனுக்கு எதிராக தல-தளபதி ரசிகர்கள் செயல்படுகிறார்களா.?

Whether Thala Thalapathy fans creating memes against Sivakarthikeyanதமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பாக்ஸ் ஆஃபிஸ் கிங் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

இவரின் இடத்தை யாராலும் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை.

ரஜினியின் ஒரு சில படங்கள் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த போதும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறைவில்லை என்றே கூறப்படுகிறது.

இவருக்கு அடுத்து விஜய், அஜித், சூர்யா ஆகியோர் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் இவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களை அடுத்து சிவகார்த்திகேயன் முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் வெளியான ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்கள் சிவகார்த்திகேயனின் மார்கெட்டை நல்ல உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அதிலும் சீமராஜா படம் நல்ல வசூலை பெற்று வருவதால் தல தளபதி ரசிகர்களில் ஒரு சிலர் சிவகார்த்திகேயனுக்கு எதிராக பல்வேறு விதமான மீம்ஸ்களை உருவாக்கி நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

இவை ஒரு புறம் இருக்க, பொன்ராம் இயக்கிய ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படங்களின் எதிர்பார்ப்பை சீமராஜா ஈடு செய்யவில்லை என்ற பேச்சும் நடுநிலையாளர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

Whether Thala Thalapathy fans creating memes against Sivakarthikeyan

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

விஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த…
...Read More

Latest Post