4வது முறையாக இணையவிருந்த ரஜினி-ஷங்கரை பிரித்த எஸ்ஏசி

SA Chandra Sekarவிக்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ள டிராஃபிக் ராமசாமி படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்து வருகிறார் இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர்.

இப்படம் வருகிற ஜீன் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் எஸ்ஏசி.யிடம் உதவி இயக்குனர்களாக பணி புரிந்த ஷங்கர், பொன்ராம், ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது ஷங்கர் பேசும்போது…

இயக்குநர் ஷங்கர் பேசும் போது ” இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.

எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.

எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் டிராபிக் ராமசாமி கேரக்டரில் அவரை பார்ப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்று பேசினார்.

சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய 3 படங்களில் ரஜினி ஷங்கர் இணைந்து பணியாற்றினர்.

மீண்டும் ரஜினியை வைத்து 4வது படமாக டிராஃபிக் ராமசாமி படத்தை இயக்க திட்டமிட்டு இருந்த ஷங்கரை எஸ்ஏசி இப்படி பிரித்துவிட்டாரே..

Overall Rating : Not available

Related News

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழக்கை…
...Read More
விக்கி இயக்கியுள்ள 'டிராஃபிக் ராமசாமி’ படத்தை…
...Read More

Latest Post