விஜய்-சிவகார்த்திகேயனுடன் நடன போட்டிக்கு தயாரான இமான் அண்ணாச்சி

விஜய்-சிவகார்த்திகேயனுடன் நடன போட்டிக்கு தயாரான இமான் அண்ணாச்சி

Traffic ramaswamy movie stillsசமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

அப்பாடல் வரிகள்

“சாராய மண்டைய மண்டைய
குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க
ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க
வாடா மச்சான்“

இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல்முறையாக நடனமாடியிருக்கிறார்.

இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி ஒரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார்.

இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

இப்பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த NOBLE என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் இசை பாலமுரளி பாலு ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது.

தனுஷ் படத்திற்காக யுவன் இசையில் இளையராஜா பாட்டு

தனுஷ் படத்திற்காக யுவன் இசையில் இளையராஜா பாட்டு

Maari 2தனுஷ் தயாரித்து நடிக்கும் மாரி 2 படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார்.

இதில் தனுஷ் உடன் முக்கிய வேடத்தில் கிருஷ்ணா மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நாயகிகளாக சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கவனிக்க படத்தொகுப்பை ஜி.கே. பிரசன்னா செய்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ் எழுதியிருக்கிறார்.

அந்த பாடலை இசைஞானி இளையராஜா பாடியிருக்கிறார்.

எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளில் அவரின் புதுப்படத்தை தொடங்கி வைக்கும் ரஜினி

எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளில் அவரின் புதுப்படத்தை தொடங்கி வைக்கும் ரஜினி

MGR with Rajinikanthஎம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்து மாபெரும் சூப்பர் ஹிட்டான படம் உலகம் சுற்றும் வாலிபன் (1973.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் லதா, சந்திரலேகா, மஞ்சுளா, நாகேஷ், நம்பியார், அசோகன் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் விரைவில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்று எம்.ஜி.ஆர் டைட்டில் கார்டு போட்டார்.

அதாவது உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பாகத்தை கிழக்கு ஆப்பிரிக்காவில் படமாக்க நினைத்திருந்தார்.

ஆனால் அவர் அரசியலில் பிசியாகி விட்டதால் அது நடக்கவில்லை.

இப்போது கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற தலைப்பில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகத்தை எம்.ஜி.ஆர் உருவத்தைக் கொண்டு அனிமேஷன் படமாக தயாரிக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேசன் மற்றும் நடிகர் பிரபுதேவா இணைந்து தயாரிக்கின்றனர்.

இதற்கான விழா இன்று ஜனவரி 17ந்தேதி அடையாறு சத்யா ஸ்டூடியோவில் நடைபெற உள்ளது.

இதில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 21ல் கட்சியை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் கமல்

பிப்ரவரி 21ல் கட்சியை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் கமல்

kamalhassanதான் அரசியலுக்கு வருவது உறுதி. விரைவில் கட்சி மற்றும் அதன் விவரங்களை அறிவிப்பேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

இதனிடையில் சபாஷ் நாயுடு மற்றும் விஸ்வரூபம் 2 உள்ளிட்ட சினிமா படங்களின் பணிகளில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார் கமல்.

அடுத்த மாதம் பிப்ரவரி 21ம் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தை தான் பிறந்த ஊரான தனது பூர்வீகமான ராமநாதபுரம் மண்ணிலிருந்து தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளர்.

Kamalhassan going to launch his new political party on 21st Feb 2018

கமல்ஹாசனின் அரசியல் கட்சி பற்றிய அறிக்கை இதோ…

kamal political party

நாடோடிகள்2 படத்தில் அஞ்சலியுடன் இணைந்தார் அதுல்யா

நாடோடிகள்2 படத்தில் அஞ்சலியுடன் இணைந்தார் அதுல்யா

Anjali and Athulya Ravi teamsup with Sasikumar in Nadodigal 2நாடோடிகள் படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்தை நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதை சமுத்திரகனி இயக்கி முக்கிய வேடத்தில் நடிக்க, நாயகனாக சசிகுமாரும் நாயகியாக அஞ்சலியும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு நாயகியாக அதுல்யா நடிக்கவிருக்கிறாராம்.

இசையை ஜஸ்டின் பிரபாகரன் மேற்கொள்ள ஒளிப்பதிவை என்.கே.ஏகாம்பரம் செய்கிறார்.

Anjali and Athulya Ravi teamsup with Sasikumar in Nadodigal 2

 

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சீதக்காதி-யின் சர்ப்ரைஸ் பர்ஸ்ட் லுக்

விஜய்சேதுபதி பிறந்தநாளில் சீதக்காதி-யின் சர்ப்ரைஸ் பர்ஸ்ட் லுக்

Seethakaathi first look released on Vijay Sethupathis birthdayஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆறு படங்களையாவது ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் விஜய்சேதுபதி.

தற்போது பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் விஜய்சேதுபதியின் 25வது படமாக உருவாகிவருகிறது.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்யநாதன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இப்படம் பற்றி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியதாவது…

“சீதக்காதி படம் எல்லாம் வகையிலும் வித்தியாசமாக உருவாகி வருகிறது.

விஜய்சேதுபதியின் கேரக்டரை அந்தளவு அற்புதமாக உருவாக்கி வருகிறார் டைரக்டர் பாலாஜி தரணீதரன்.

இப்படத்தில் விஜய்சேதுபதியின் லுக் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைசாக இருக்கும்.” என்றார்.

இந்நிலையில் இன்று ஜனவரி 16ஆம் விஜய்சேதுபதியின் பிறந்தநாளில் இப்பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். அவர் இந்தியன் தாத்தா ஸ்டைலில் அமர்ந்திருப்பது ரசிகர்களை பெரிதும கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Seethakaathi first look released on Vijay Sethupathis birthday

More Articles
Follows