டிராஃபிக் ராமசாமி இசை உரிமையை கைப்பற்றிய டிரெண்ட் மியூசிக்

Think music bagged the audio rights of Traffic Ramasamy movieசமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’.

இப்படத்தின் ஆடியோ உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகுவதால் இப்படத்தின் இசையை வெளியிடுவதை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த கெளரவமாக கருதுவதாகவும், ’ஹரஹரமகா தேவகி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்திருப்பதால் பாடல்கள் ட்ரெண்டிங்காக இருக்கும் என்று டிரெண்ட் மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகிணி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி , மோகன்ராம் என்று பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, விஜய்சேதுபதி ஆகியோர் கெளரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

எஸ்ஏசி.யின் உதவி இயக்குனர் விக்கி இயக்கி வருகிறார்.

Think music bagged the audio rights of Traffic Ramasamy movie

Overall Rating : Not available

Related News

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழக்கை…
...Read More
விக்கி இயக்கியுள்ள 'டிராஃபிக் ராமசாமி’ படத்தை…
...Read More

Latest Post