சந்தானம் படத்தில் இசையமைப்பாளர் சிம்பு; யாருக்கு அதிக சம்பளம்..?

சந்தானம் படத்தில் இசையமைப்பாளர் சிம்பு; யாருக்கு அதிக சம்பளம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VTV Ganesh reveals Simbu or Santhanam Who got bigger salaryசேதுராமன் இயக்கத்தில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு.

இப்படத்தின் பாடல்களை நாளை தனுஷ் வெளியிட பிரம்மாண்ட முறையில் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இன்று சந்தானம், ரோபோ சங்கர் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது விடிவி கணேஷிடம் பேசும்போது…

சிம்பு மிகப்பெரிய நடிகர். அவர் எங்கள் படத்தில் இசையமைக்க ஒப்புக் கொண்டது மகிழ்ச்சி.

ஆனால் அவருக்கு படத்தின் ஹீரோ சந்தானத்தை விட குறைவான சம்பளம்தான் கொடுத்தேன்.” என்று தெரிவித்தார்.

VTV Ganesh reveals Simbu or Santhanam Who got bigger salary

விஜய்-சூர்யா படங்கள் மாபெரும் சாதனை; ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய்-சூர்யா படங்கள் மாபெரும் சாதனை; ட்விட்டர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay suriya2017 ஆண்டின் கோல்டன் தருணங்கள் என்ற பட்டியலை ட்விட்டர் தளம் வெளியிட்டுள்ளது.

அதில் இந்திய ட்விட்டர் பயனானிகள் அதிகம் விவாதித்த விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழில் மெர்சல் படத்துக்கு முதன்முதலாக ட்விட்டர் இமோஜி என்கிற ட்விட்டர் சின்னம் கிடைத்தது.

இது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது என்றும், அதன் மூலம் மூன்று நாட்களில் 1.7 மில்லியன் ட்வீட்டுகள் பதிவேற்றப்பட்டன என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதனால் #Mersal என்ற ஹாஷ்டாக், இந்த வருடத்தின் முதன்மை ஹாஷ்டாக் ட்ரெண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை தனது பக்கத்தில் வெளியிட்டார் சூர்யா.

இது கோல்டன் ட்வீட் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 2017, இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் இது. மொத்தம் 68,856 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

Mersal and Thaana Serndha Kootam movies made record in Twitter 2017

நயன்தாரா வெற்றிக்கு அவரது குணம்தான் காரணம்..: சிவகார்த்திகேயன்

நயன்தாரா வெற்றிக்கு அவரது குணம்தான் காரணம்..: சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and nayantharaமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

வழக்கம்போல நாயகி நயன்தாரா இந்த விழாவுக்கு வரவில்லை. இருந்தபோதிலும் நயன்தாரா பற்றி சிவகார்த்திகேயன் பேசினார்.

அவர் பேசியதாவது….

அஜித் நடித்த ஏகன் படத்தின் சூட்டிங்கின்போதுதான நான் நயன்தாராவை முதன்முதலில் பார்த்தேன்.

அதன்பின்னர் எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடிய போது அவரை சந்தித்தேன்.

அதன்பின்னர் 3வது முறையாக வேலைக்காரன் சூட்டிங்கில்தான் அவரை நேரில் சந்தித்தேன்.

இன்றும் அவர் மிகப்பெரிய நடிகையாக வந்துவிட்ட போதிலும் அந்த நேரம் தவறாமை மற்றும் நேர்மை அவரிடம் உள்ளது.

இன்றும் அதே குணத்துடன் இருக்கிறார்.” என்று பேசினார்.

வெங்கட்பிரபு-பிரேம்ஜியின் தந்தை ஆஸ்பத்தியில்அனுமதி

வெங்கட்பிரபு-பிரேம்ஜியின் தந்தை ஆஸ்பத்தியில்அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gangai amaren stillsநடிகர்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜியின் தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தமுறை ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட கங்கை அமரன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவருக்கு பதிலாக கரு.நாகராஜன் என்பவர் போட்டியிடுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

என் மகன் தீரனுக்காக லிப்லாக் சீனை மறுத்தேன்.. : சிபிராஜ்

என் மகன் தீரனுக்காக லிப்லாக் சீனை மறுத்தேன்.. : சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj sillsசத்யராஜ் தயாரிப்பில் சிபிராஜ் நடித்துள்ள சத்யா படம் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது சத்யா படம் பற்றி நடிகர் சிபிராஜ் பேசியதாவது…

தெலுங்கில் வெளியான சனம் திரைப்படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். சனம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும் , தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி சனம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து வாங்கினோம். நான் சனம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன்.

இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.ப

டத்துக்கு டைரக்டர் பிக்ஸ் பண்ணியாச்சா என்று கேட்டார்… இல்லை இன்னும் முடிவு பண்ணவில்லை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த சைத்தான் திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார்.

அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல் முறை பேசும் போது படத்தை பற்றி அதிகம் பேசவில்லை.

தமிழை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தான் அதிகம் பேசினோம். பிரதீப் ஏன் படத்தை பற்றி கதையை பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் செய்து கொண்டிருந்தேன்.

உங்களை படத்தில் எப்படி கையாளுவது என்று எனக்கு தெரியவேண்டும் அல்லவா என்று கூறினார். படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார்.

படத்தில் என்னோடு ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர சதீஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது.

யவன்னா பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. என்னை மட்டுமல்ல படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப்.

ரம்யா நம்பீசன் அனுபவம் உள்ள நடிகை அவரை இப்படி தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்கிறாரே என்று நான் யோசிப்பேன். வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படி தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும் அவரை பார்த்து “ போயா “ என்று கிண்டலாக கூறிவிட்டார். இப்படி சீரியசாகவும், ஜாலியாகவும் சென்றது சத்யாவின் படபிடிப்பு. நீங்கள் கேட்பது போல் படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான்.

அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன் , என்னை ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான்.

நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்சனை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்.” என்றார் சிபிராஜ்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியது :- இந்த தலைமுறை நடிகர்கள் அனைவரும் தங்களுடைய சீனியர் நடிகர்களை மதிக்கும் பண்பை கடைபிடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. பெரியவர்களை மதித்தாலே அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் செல்வார்கள்.

சத்யா படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நான் இல்லாவிட்டால் அதில் சத்யராஜ் அண்ணன் தான் நடித்திருக்க முடியும்.

சத்யாராஜ் அண்ணன் இன்னும் பல ஆண்டு காலம் நன்றாக வாழவேண்டும். அனைவரையும் மதிக்கும் சிபிராஜ் அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்றார் ஆனந்த்ராஜ்.

நாயகி ரம்யா நம்பீசன் பேசியது…

மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி. சத்யாவில் ஒவ்வொரு நிமிடமும் ட்விஸ்ட் டார்ன் என்று பரபரப்பாக இருக்கப்போகிறது என்றார் ரம்யா நம்பீசன்.

சிபிராஜுக்கு உதவிய கமல்-சூர்யாவுக்கு சத்யராஜ் நன்றி

சிபிராஜுக்கு உதவிய கமல்-சூர்யாவுக்கு சத்யராஜ் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj and sathyarajசைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள படம் சத்யா.

இப்படத்தை சத்யராஜ் தயாரிக்க, அவரது மகன் சிபிராஜ் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ், சதீஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சைமன் K கிங் இசையமைக்க, அருண் மணி ஒளிப்பதிவாளர் செய்ய எடிட்டிங் பணிகளை கெளதம் ரவிச்சந்திரன் மேற்கொண்டுள்ளனர்.

இப்படம் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது தயாரிப்பாளர் சத்யராஜ் பேசியதாவது…

நான் பாகுபலி படத்தின் படபிடிப்பில் இருந்த போது சிபி என்னை தொடர்பு கொண்டு தெலுங்கில் ஹிட் அடித்த ஷணம் படத்தை பற்றி விசாரிக்கும் படி கூறினார்.

நான் பிரபாஸிடம் ஷணம் படத்தை பற்றி கேட்டேன். என்னிடம் அவர் “ ஷணம் “ நல்ல படம் எதற்காக கேட்குக்றீங்க என்றார். அதற்கு நான் என் மகன் சிபிராஜ் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கலாமா? என்று கேட்கிறார் என்றேன். ஷணம் தரமான படம் கண்டிப்பாக வாங்கலாம் என்று சிபிராஜ் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்.

அதன் பின் தான் நாங்கள் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம். நான் சத்யா படத்தின் படபிடிப்பு துவங்கி பத்து நாள் கழித்து தான் ஷணம் படத்தை பார்த்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தற்போது மிகச்சிறந்த நடிகர் பட்டாளத்துடன் சத்யா திரைப்படம் நன்றாக வந்துள்ளது.

சத்யா என்ற டைட்டிலை கமலிடம் கேட்க சொன்னார் என் மகன். ஆனால் எனக்கு சிபாரிசு பிடிக்காது.

எனவே சிபிராஜே கமல்ஹாசனிடம் பேசி வாங்கிவிட்டார். கமலுக்கு நன்றி. அதுபோல் இப்படத்தின் ட்ரைலரை வெளியிடும் சூர்யாவுக்கும் நன்றி. என்று பேசினார் சத்யராஜ்.

More Articles
Follows