தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் மற்றும் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது.
இந்த இரு படங்களுக்கும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளதால், படத்தை வெளியிட தியேட்டர்களிடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபலமான ரோகினி தியேட்டரில் வேலைக்காரன் படத்தை வெளியிட மாட்டோம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.
விநியோகஸ்தர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தை திரையிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
Nikilesh Surya @NikileshSurya
Actor @Siva_Kartikeyan #Velaikkaran will not see a release @RohiniSilverScr due to distributor non cooperation. #Aruvi continues with 4sh!
Nikilesh Surya @NikileshSurya
Nikilesh Surya Retweeted Nikilesh Surya
Schedule for all other releases will go live shortly. Santhanam starrer #SPPR will play in the main screen now!