நான் கெட்டவன்தான்; தனுஷ் முன்னிலையில் AAA தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் சிம்பு

simbu and dhanush at sakk apodu podu rajaசிம்பு இசையமைக்க, சந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள படம் சக்க போடு போடு ராஜா.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு இசையை வெளியிட்டார்.

அப்போது சிம்புவும் பேசினார். அவர் பேசும்போது….

என்னைப் பற்றி நிறைய பேர் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னை கெட்டவன், திமிரு பிடித்தவர் என்று கூட சொல்வார்கள்.

சிம்பு செட் ஆக மாட்டார். அவர் சரியாக சூட்டிங்க்கு வருவதில்லை என்பார்கள்.

சில நேரம் அப்படியிருக்கலாம். AAA படத்தின் போதே தயாரிப்பாளர் அந்த பிரச்சினைகளை சொல்லியிருக்கலாம்.

படம் முடிந்த பிறகு கூட சொல்லியிருக்கலாம். ஆனால் படம் வந்தபின் இப்போது 6 மாதம் கழித்து அதை சொல்கிறார்.

ஒருவேளை நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த வருடம் 2018ல் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறேன். அந்த சூட்டிங் ஜனவரி 20ல் தொடங்கவுள்ளது.

அந்த படத்திற்கு உடம்பை குறைத்து வருகிறேன். கொஞ்சம் தொப்பை உள்ளது. அதையும் குறைத்துவிடுவேன்.

மணிரத்னம் அவர்களுக்கு என் மீது என்ன நம்பிக்கையோ நான் நடிக்கனும் என்று சொல்லியிருக்கிறார். ஒருவேளை உங்களைப்போல் அவரும் என் ரசிகரா இருப்பாரோ? எனத் தெரியவில்லை.” என பேசினார்.

Overall Rating : Not available

Related News

சந்தானம் நடிப்பில் விடிவி கணேஷ் தயாரித்துள்ள…
...Read More
சிம்பு இசையமைப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்து…
...Read More

Latest Post