தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘விவேகம்’ படத்தை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்காக அதே கூட்டணி இணைகிறது.
சிவா இயக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அஜித் நடிக்கவிருக்கிறார்.
இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இமான் இசையில் அஜித் தன்னுடைய சொந்த குரலில் ஒரு பாடலை பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அஜித் பாடல் எதுவும் பாட மாட்டார் என தற்போது படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.