விஷாலின் ‘கத்தி சண்டை’யில் லைட்மேன் மரணம்..!

விஷாலின் ‘கத்தி சண்டை’யில் லைட்மேன் மரணம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal's Kaththi Sandai Team Loses a crew memberவிஷால் நடிப்பில் சுராஜ் இயக்கி வரும் படம் கத்தி சண்டை. இப்படத்தில் நாயகியாக தமன்னா நடித்து வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பின், வடிவேலு இப்படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார். இவருடன் சூரியும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை நந்தகோபால் தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், செல்வம் என்ற லைட்மேன் எதிர்பாரா விதமாக மயங்கி விழுந்துள்ளார்.

ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் மரணமடைந்துள்ளார்.

இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை 28 பார்ட் 2…. சிக்ஸர் அடிக்க இணையும் சிக்ஸ் டைரக்டர்ஸ்..!

சென்னை 28 பார்ட் 2…. சிக்ஸர் அடிக்க இணையும் சிக்ஸ் டைரக்டர்ஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat Prabhu Chennai 600028 part 2 to Have Cameo of Five Directorsநடிகராக வலம் வந்த வெங்கட்பிரபு ‘சென்னை 600028’ படம் மூலம் சூப்பர் ஹிட் இயக்குனர் ஆனார்.

தற்போது இயக்கி வரும் இதன் இரண்டாம் பாகத்தில், ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, விஜய் வசந்த், வைபவ், மகத், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் ஐந்து இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

‘கனிமொழி’ பட இயக்குனர் ஸ்ரீபதி, ‘நவீன சரஸ்வதி சபதம்’ பட இயக்குனர் சந்துரு, ‘காவல்’ பட இயக்குனர் நாகேந்திரன், ‘நளனும் நந்தியும்’ பட இயக்குனர் வெங்கடேஷ், மற்றும் ‘வடகறி’ பட இயக்குனர் சரவணா ஆகியோர் நடித்துள்ளனர்.

அதாவது வெங்கட்பிரபு உடன் சேர்த்து ஆறு டைரக்டர்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த நிறுவனமான பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார் வெங்கட் பிரபு.

பிரமாண்டமான படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விஜய்…?

பிரமாண்டமான படத்தில் சூர்யாவுக்கு பதிலாக விஜய்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay may Joins with Director Sundarcபிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இப்படத்தை இயக்க சுந்தர் சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை முன்பே பார்த்தோம்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால் பெரிய ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அந்த செய்திகளை மறுத்தார்.

தற்போது அந்த வேடத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில் விஜய்-சுந்தர் சி இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் வைத்திருக்கும் கபாலி..!

இன்றைய ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் வைத்திருக்கும் கபாலி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini's Kuthu Dance in Kabaliகபாலி வெளியீட்டை எதிர்நோக்கி உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் ரஜினி படத்தை பார்க்க அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

எனவே, இளைய தலைமுறை ரசிகர்களுக்காக கபாலி படத்தில் ஒரு சர்ப்ரைஸ் ஒன்றை வைத்திருக்கிறார்களாம்.

‘கபாலி’யில் ரஜினி ஆடும் ஒரு குத்துபாடலும் உள்ளதாம். இந்த நடனம் 40 நொடிகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் இந்த நடனத்திற்கு நிச்சயம் குழந்தைகளும் இளைஞர்களும் ஆடாமல் இருக்க மாட்டார்கள் என உறுதியாக தெரிவிக்கின்றனர்.

இப்பாடல் பிளாஷ்பேக்கில் உள்ள இளமை ரஜினிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’ டீசரை ‘ரம்’ உடன் கொண்டாடிய விவேக்..!

‘கபாலி’ டீசரை ‘ரம்’ உடன் கொண்டாடிய விவேக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Neruppu Da Song in RUM Movie Setsநடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் ரம்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் ரிஷிகேஷ், ‘அஞ்சாதே’ நரேன், மியா, சஞ்சிதா ஷெட்டி, அம்ஜத், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த வியாழன் அன்று (ஜீன் 16) நிறைவு பெற்றது.

எனவே இதனை கொண்டாட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

இத்துடன் கபாலி நெருப்புடா பாடல் டீசரை கொண்டாடலாம் என ஐடியா கொடுத்தாராம் விவேக்.

இதற்கு தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவும் உடனே சம்மதம் தெரிவிக்க, பெரிய ஸ்க்ரீனை ஏற்பாடு செய்து ‘கபாலி’ டீசர் திரையிடப்பட்டதாம்.

இதன்படி ‘கபாலி’ டீசருக்கு வரவேற்புக்கு கொடுத்து, கொண்டாடியுள்ளனர் ரம் குழுவினர்.

விஜய்-அஜித்துக்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் செந்தில்..!

விஜய்-அஜித்துக்கு அப்பாவாக நடிக்க ஆசைப்படும் செந்தில்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Naal Koothu Senthil Shares his Cinema Experience“ஒரு நாள் கூத்து“ படத்தில் நாயகி நிவேதா பெத்துராஜின் தந்தையாக நடித்தவர் செந்தில்.

இப்படத்தில் கூட தினேஷிடம் “பொண்ண விட அவங்க அப்பா செமையா இருக்காருல“ என்று பாலா சரவணன் சொல்லியிருப்பார். அந்த அப்பாதான் நடிகர் செந்தில்.

இவர் தன் திரையுலக அனுபவம் பற்றி கூறியுள்ளதாவது..

“1995 ஆம் ஆண்டு பிலிம் இன்ஸ்டிட்யுடில் சேர்ந்து ஆக்டிங் கோர்ஸ் பயின்றேன்.

சில வருடங்கள் டி.வி சீரியல்களில் நடித்தேன்.

அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள சினிமா மேனேஜராக முடிவு செய்தேன்.

சத்யராஜ் அவர்களும் சினிமாவில் மேனேஜராக இருந்து நடிகராக ஆனவர்தான்.

அதன்பின்னர் மேனேஜராக இருந்தேன். படிப்படியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

இப்போது ஒரு நாள் கூத்து, ப்ருஸ் லீ, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்துள்ளேன்.

ஒரு நாள் கூத்து படத்தில் நெல்சன், ஒரு நல்ல கேரக்டரை எனக்கு கொடுத்தார்.

எனது சினிமா என்ட்ரீ லேட் ஆனதால், தற்போது அப்பா வாய்ப்புகளே அதிகம் வருகிறது.

எனவே, விஜய், அஜித், மற்றும் த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட அனைவருக்கும் அப்பாவாக நடிக்க காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

More Articles
Follows