நவம்பரில் ஆக்சனை களமிறக்கும் சுந்தர் சி & விஷால் கூட்டணி

நவம்பரில் ஆக்சனை களமிறக்கும் சுந்தர் சி & விஷால் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishals Action movie release date updatesஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களுக்குப் பிறகு விஷாலை வைத்து 3வது முறையாக சுந்தர்.சி இயக்கியுள்ள படம் ‘ஆக்‌ஷன்’.

இதில் விஷாலுடன் தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரித்துள்ளார்.

துருக்கி நாட்டில் இதன் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இப்பட டீசர் ஏற்கெனவே வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இப்பட டிரெய்லர் வெளியானது.

அத்துடன் இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட உள்ளதாக டிரைலரில் தெரிவித்துள்ளனர்.

Vishals Action movie release date updates

நவம்பர் 10ல் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பர்ஸ்ட் லுக்

நவம்பர் 10ல் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas Soorarai Pottru first look will be released on 10th Nov2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தை சுதா கொங்கரா இயக்க ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நவம்பர் 10ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Suriyas Soorarai Pottru first look will be released on 10th Nov

விஜய்யுடன் இணையும் ஆண்ட்ரியா & பிரிகிடா (பவித்ரா டீச்சர்)

விஜய்யுடன் இணையும் ஆண்ட்ரியா & பிரிகிடா (பவித்ரா டீச்சர்)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andrea and Brigida aka Pavi Teacher on board for Thalapathy 64பிகில் படத்தை முடித்தவுடன் தற்போது தளபதி 64 படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய்.

இப்படத்தை கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் குறைந்த பொருட்செலவில் உருவாகிறதாம்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.

இதில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா மற்றும் வெப் சீரிஸ் புகழ் பவித்ரா டீச்சர் என்ற பிரிகிடா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் முதற்கட்ட சூட்டிங்கை 22 நாட்களில் முடித்துள்ளனர். அடுத்த கட்ட சூட்டிங்கை டெல்லியில் நடத்துகின்றனர்.

Andrea and Brigida aka Pavi Teacher on board for Thalapathy 64

Raamuloo Ramulaa All Time South India Record

Raamuloo Ramulaa All Time South India Record

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raamuloo Ramulaa All Time South India RecordAs expected, the party number Raamuloo Ramulaa in Allu Arjun’s Ala Vaikunthapurramloo has got overpowering response.

The song that begins with Allu Arjun’s voice over has created a rare feat. It is now The Most Viewed South Indian Song in 24 hours time with 8.3 Million Views.

The first single Samajavaragamana is the most liked Telugu song and it seems Raamuloo Ramulaa will break Bunny’s own record in no time.

Besides Bunny’s voice over and his electrifying dances, the video also showed the major cast of the film enjoying the party number. Bankrolled by Chinna Babu under Haarika and Hassine Creations.

கைதி2 எடுக்க 1 மாசம் கால்ஷீட் கொடுங்க; கார்த்தியிடம் லோகேஷ் வாக்குறுதி

கைதி2 எடுக்க 1 மாசம் கால்ஷீட் கொடுங்க; கார்த்தியிடம் லோகேஷ் வாக்குறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lokesh Kanagaraj waiting for Karthis Call sheet to shoot Kaithi sequelட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் கைதி. இந்த படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படம் தொடர்பாகவும் தீபாவளி வாழ்த்து சொல்லவும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் நடிகர் கார்த்தி.
அவர் பேசியதாவது:-

‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம்.

இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.

இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள்.

சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம்.

மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது.

தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும்.

ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார். நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்ப்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை.

அது வளர்த்த விதமாகக் கூட இருக்கலாம். படம் பார்த்து விட்டு.. என் நம்பரை எப்படியோ பிடித்து.. குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். முடிந்தவரை எல்லொரிடமும் பேசி விடுகிறேன்.

என் அப்பா திரையரங்கில் ‘கைதி’யைப் பார்த்தார். சிறப்பான படம், அப்பா மகள் செண்டிமெண்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார்.

எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

நேற்று இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக (‘கைதி 2’) 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார்.

நல்ல விமர்சனங்கள் எழுதி வரும் உங்களுக்கும், பெரிய வெற்றி படமாக்கிய மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.

Lokesh Kanagaraj waiting for Karthis Call sheet to shoot Kaithi sequel

இணையத்தை மிரட்டும் உதயநிதியின் ‘சைக்கோ’ டீசர்

இணையத்தை மிரட்டும் உதயநிதியின் ‘சைக்கோ’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayanidhi Stalins Psycho teaser making records in Youtubeமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் சைக்கோ.

இப்பட டீஸர் சில மணி நேரங்களிலேயே பத்து லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்திருக்கிறது.

டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் அருண்மொழி மாணிக்கம் இது பற்றி கூறுகையில்…

இந்த டீஸர் அடைந்திருக்கும் வெற்றிக்குக் காரணம் மிஷ்கின் சார்தான்.

டீஸரில் என்ன கொடுக்க வேண்டும் என்பதை மிகச் சரியாக கணித்து நம்பிக்கையுடன் கொடுத்தார். ஒட்டுமொத்த எங்கள் குழுவும் டீஸர் குறித்து மகிழ்ச்சியடைந்திருக்கிறோம்.

டீஸரைப் பார்ப்பவர்கள் வெறும் லைக் கொடுப்பதுடனோ, பகிர்ந்துகொள்வதுடனோ நின்று விடாமல், தங்கள் கருத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தனித்தன்மை மிக்க விதிவிலக்கான படைப்புகள் எப்போது வந்தாலும் வரவேற்பு பெறும் என்பதைத்தான் ‘சைக்கோ’ டீஸர் நிரூபித்திருக்கிறது.

‘சைக்கோ’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் தங்கள் புலனாய்வை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டனர். ‘சைக்கோ’ படம் வெளியாகும்வரை இந்தப் புலனாய்வு தொடரட்டும் என்று புன்னகையுடன் தெரிவித்தார் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம்.

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் ‘சைக்கோ’ படத்துக்கு மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் இளையராஜாவின் பின்னணி இசை சைக்கோ படத்தின் சிறப்பம்சம் என்றே சொல்லலாம்.

Udhayanidhi Stalins Psycho teaser making records in Youtube

More Articles
Follows