ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

ஹிப் ஹாப் இசையில் முதல் முறையாக சாதனா சர்கம் . விஷாலின் “ஆக்‌ஷன்” படத்திற்காக பாடினார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

action stillsடிரைடண்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்தரன் மிகப்பிரமாண்டமாக தயாரித்துவரும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தின் ஒரு பாடல் சிங்கிள் டிராக்காக வெளியானது. ஹிப் ஹாப் இசையில் சாதனா சர்கம் முதல்முறையாக பாடியுள்ள இப்பாடலை வெளியான சிலமணி நேரங்களிலேயே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஷால், தமன்னா நடிப்பில் இப்பாடலின் காதல் காட்சிகள் முழுவதும் வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

“இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன..
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன..

எனும் பா .விஜய்-யின் வரிகள் இளைஞர்ளை கவர்ந்து you tube ஹிட்டாகி வருகிறது. இளைஞர்கள் பிரத்யேகமாக நடனம் அமைத்து இணையதள யூடியூப்பில் வெளியிட்டுவருகிறார்கள்.

நவம்பர் 15ல் இப்படத்தின் இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீஸர் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

முதல் முறையாக முழு ஆக்‌ஷன் பாணியில் சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் R.ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
விஷால், தமன்னா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கபீர் துன்சிங், யோகிபாபு, சாரா, ஆகான்ஷா பூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு – டட்லீ

எடிட்டிங் – N B ஶ்ரீகாந்த்

ஸ்டண்ட் – அன்பறிவ்.
Song lyric:

நீ சிரிச்சாலும் பாடல் வரிகள்

நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நெனச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…
நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதச்சாலும்…

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நெனச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…

புதைத்து வைத்த காதலை
பூக்களுக்குள் தேடவா…
கூட வந்த ஆசையை…
கூந்தலுக்குள் சூடவா…

நெஞ்சிருக்கும் வரைக்குமே
உன் நினைவு இருக்குமே
காற்றிலா வெளியிலே காத்து கிடக்கிறேன் நான்
நீ மௌனமாகவே நடந்து போகிறாய்
காயம் செய்து கொண்டே…
உன்னில் காதல் இல்லை தோழி போலவே
என்னை மாற்றி கொண்டேன்…

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன
இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

தினம் உன்னை நினச்சே…
இரு கண்ண முழிச்சேன்
உன்ன ஒட்டி அணைச்சே…
கனவுல கட்டி புடிச்சேன்

உன் கண்ணு முழியில் என்ன கண்டு புடிச்சேன்
உன்ன மட்டும் நெனச்சே தெனம் செத்து பொழச்சேன்

கை வீசும் காதலே
என்னை தாண்டியே எங்கு செல்கிறாயோ
இங்கு பாலை வெளியில் கொல்கிறாயோ

இவன் தோளில் சாய்ந்தே
நான் தொலைந்தால் என்ன
இவன் மடியில் தூங்கி
நான் மடிந்தால் என்ன

நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நெனச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…
நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
கையில் அணைச்சாலும்…
மண்ணில் பொதச்சாலும்…

ஏதோ நீ செய்கிறாய் யுக்தி
நெஞ்சம் உன்னோடு தான் சுத்தி
இதமான காயங்கள் உன் வார்த்தைகள் குத்தி
நானோ உன் பார்வையில் சிக்கி
சொல்ல முடியாமலே திக்கி
யாரோடும் பேசாமல் சேர்ந்து போகிறோம் சொக்கி

மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்

மாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajமாநகரம் என்கிற ஒரே படம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடிப்பில் இவர் இயக்கிய கைதி தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

தற்போது தமிழகமே எதிர்பார்க்கும் விஜய்64 படத்தை இயக்கி வருகிறார்.

படவெளியீட்டை முன்னிட்டு அவர் பத்திரைகையாளர்களை சந்தித்தார். அவர் பேசியதும்,
படம் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மாநகரம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது நீங்கள் தான். கைதி முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன்.

இந்தப்படத்தில் ஏன் ஹிரோயின் இல்லை ?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் அது தோணும்.

உங்களின் இரு படங்களும் இரவில் நடக்கிறதே.. இரவின் மீது அப்படி என்ன காதல் ?
இரவுகளிலேயே படம் எடுப்பது திட்டமிட்டு எல்லாம் அப்படி செய்யவில்லை. மாநகரம் எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக்கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

கார்த்தி இதில் என்ன மாதிரி வருகிறார் ?

படத்தில் கார்த்தியை மையப்படுத்தி தான் கதை ஹிரோயின் இல்லை எனும் போது அவரைச் சுற்றி தான் எல்லாமும் நடக்கும். இந்தப்படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் பருத்தி வீரன் போல இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால் தான்
இந்தப்படமே உருவானது.
இந்தக்கதையை சொன்னவுடனே கார்த்தி ஒத்துக்கொண்டார் அவர் ஹிரோயின் இல்லை காமெடி இல்லை என எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது.

இந்தகதை முதலில் வேறொரு ஹிரோவுக்காக ரெடியானதா ?
இந்தப்படத்தின் பாதிப்பு எங்கிருந்து உருவானது ?

இந்தப்படம் ஹாலிவுட்டில் வந்த டை ஹார்ட் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.

படத்தில் பெண் கதாப்பாத்திரங்களே இல்லையா ?

பெண் கதாப்பாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் பாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப்படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவு தான்.

இரவில் ஷீட் செய்தது எப்படி இருந்தது ?

இரவில் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம் இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம் தான். நல்ல டீம் அமைந்தது.

விஜய் 64 என்ன மாதிரி படம் ?

அடுத்த படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன் அது இப்போது தான் ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

விஜய் கைதி பார்த்து விட்டாரா ?

படம் இன்னும் விஜய் சார் பார்க்கவில்லை. இப்பொழுது தான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல் தான் எல்லோருக்கும் பார்ப்பார்கள்.

தீபாவளிக்கு பிகில் வருகிறதே எது ஜெயிக்க விருப்பம் ?

தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் தான். “பிகில்”, “கைதி” இரண்டும் பாருங்கள். நன்றி.

இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !

இரண்டு ஜோடிகளுடன் சந்தானம். R.கண்ணன் இயக்கும் புதிய படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam new stillsMasala pix , M K R P Productions இணைந்து வழங்கும் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சந்தானம் ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி ( Tara Alisha berry ) நடிக்கிறார். சமீபத்தில் வெளியான A1 வெற்றிப்படத்தில் கதாநாயகியா நடித்த இவர், மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பலா ( Swathi Muppala ) அறிமுகம் ஆகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை- ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய
R.கண்ணன் இயக்கி வருகிறார். காதல், காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் :

இசை – சந்தோஷ் தயாநிதி

ஒளிப்பதிவு – 96 புகழ் சண்முகசுந்தரம்

எடிட்டிங் – செல்வா

கலை – ராஜ்குமார்

சண்டைப்பயிற்சி – ஸ்டண்ட் சில்வா

நடனம் – சதீஷ் & டேனி

தயாரிப்பு நிறுவனம் – Masala pix & M.K.R.P Productions

தயாரிப்பு, இயக்கம் – R கண்ணன்.

அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

அமெரிக்க கோல்டன் குளோப்பில் பாராட்டு பெற்ற “பார்த்திபனின் ஒத்த செருப்பு” சைஸ் 7 படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Parthibanஇராதாகிருஷ்ணன் பார்த்திபன் தமிழ் சினிமாவின் அடையாளமாக, பல பரிசோதனை முயற்சிகளுக்கு முன் மாதிரியாக, வெற்றியாளராக விளங்குபவர். அவரது சமீபத்திய படமான “ஒத்த செருப்பு சைஸ் 7” ரசிகர்களின் இதயங்களை அள்ளியதோடல்லாமல் Asia and India Book of Records ல் ஒருவரால் இயக்கி, நடித்து தயாரித்து உருவாக்கப்பட்ட படம் என்கிற சாதனைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கோல்டன் குளோப் ஜீரி மெம்பர்களுக்காக நிகழ்த்தப்பட்ட திரையிடலில் பெரும் பாராட்டை குவித்துள்ளது. மாறுபட்ட முயற்சியாக அனைவரும் இப்படத்தினை பாராட்டியுள்ளனர். மேலும் ஆஸ்கர் அகாடமி குழு நாளை அக்டோபர் 24 அன்று இப்படத்தை பார்க்கவுள்ளது மேலும் தமிழ் சினிமாவுக்கு மேலும் பெருமைகொள்ளும் தருணமாக உள்ளது.

இது பற்றி இயக்குநர் பார்த்திபன் கூறியதாவது…,

நான் முன்பே பலமுறை கூறியது போல் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தின் உருவாக்கம் என்பது உணர்ச்சிபூர்வமானதும் பல்வேறு சவால்கள் நிறைந்தததுமாகும். அந்த தருணங்களில் எனக்கு உற்சாகம் தந்தது இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனும் எண்ணம் தான். நமது ரசிகர்கள் தாண்டி தற்போது உலகளவில் இப்படத்திற்கு கிடைக்கும் பெரும் மரியாதையும், பராட்டும் என்னை நெகிழச்செய்வதாக உள்ளது. கோல்டன் குளோப் மெம்பர்களின் திரையிடல் என்பது எனக்கு வைக்கப்பட்ட உச்சபட்ச பரிட்சை போன்றிருந்தது. திரையிடலுக்கு பிறகு அவர்கள் என்னிடம் நெருக்கமாக உரையாடியதும், படம் பற்றி நிறைய விஷயங்கள் விவாதித்ததும் மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. மேலும் படத்தினை மாறுபட்டதொரு முயற்சியாக அவர்கள் பாராட்டியது எனக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். மேலும் இப்போது ஆஸ்கார் அகாடமி குழு திரையிடலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அமெரிக்காவில் (Metroplex Tamil Sangam at Dallas City ) மெட்ரோ பிளக்ஸ் தமிழ் சங்கம் டல்லாஸ் நகரக் குழு ஏற்பாடு செய்துள்ள இரவுணவுடன் கூடிய திரையிடலும் உரையாடலும் Fun Movie Grill Multiplex, Carrollton in Dallas ல் மாலை 4 மணி, அக்டோபர் 26 அன்று நடைபெற இருப்பது எனக்கு மேலும் பேருவகை அளிப்பதாக உள்ளது. இத்திரையிடலை ஏற்பாடு செய்த அவர்களுக்கு என் மனம்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு

சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibirajகிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.

சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr. கோ. தனஞ்செயன். லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள். கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு. கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள். ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று மார்ச் 2020-ல் உலகளாவிய திரையரங்கில் வெளியிடப்படும்.

BREAKING பிகிலுக்கு தடை.?; மனுதாரருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING பிகிலுக்கு தடை.?; மனுதாரருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil posterஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகிறது.

இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் செல்வா தடை கோரியிருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கு ஐகோட்ர்டில் விசாரணை வந்தது.

அதில்… நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை வெளியாவதில் தடையில்லை .. திருத்தங்கள் செய்துள்ளதால் புதிதாக மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

More Articles
Follows